பண்டிகை என்றாலே ஸ்வீட். சரிதானே. இந்த சீஸனில் ஸ்வீட் வேண்டாம் என மறுப்பது நாகரீகம் இல்லை. ஆனால் காஜு கட்லி, லட்டு என ஒரு மாதம் உள்ளே தள்ளினால் என்ன ஏற்படும் தெரியுமா. சுகர் ஸ்கின். காலையில் எழுந்து பார்த்தால் சருமம் டல்லாக இருக்கும், பொலிவு காணாமல் போயிருக்கும். எல்லாம் சுகர்தான் காரணம். சருமத்தில் சுருக்கங்களும் கோடுகளும் தெரிய ஆரம்பிக்கும். கண்ணைச் சுற்றி கரு வளையம் தெரியும். சரும உடைதலை சொல்ல மறந்துவிட்டோமே. இந்த சுவையான இனிப்புகளை தவிர்க்காமல் இந்தப் பிரச்சனையை சமாளிக்க வேண்டுமா. இதோ டிப்ஸ்.

 

திடீரென அதிக சுகர் சாப்பிடுவது ஏன் சருமத்தை பாதிக்கிறது?

திடீரென அதிக சுகர் சாப்பிடுவது ஏன் சருமத்தை பாதிக்கிறது?

அதிக சர்க்கரை உடலுக்குள் வீக்கம் ஏற்படுத்துகிறது. இதனால் சுரக்கும் என்ஸைம்கள் சருமத்தில் உள்ள கொலாஜன் எனப்படும் தசை நார்களை உடையச் செய்கிறது. சருமத்தின் எலாஸ்டிக் தன்மை குறைவதற்கும் சருமத்தில் ஆயில் அதிகமாவதற்கும் இதுவே காரணம். சருமத்தில் உள்ள ஈரப் பதம் குறைவதற்கும் சுகர் ஒரு காரணம். இதனால் சருமம் பொலிவு இழந்து டல்லாக காணப்படும். அது மட்டுமல்ல, அதிக சுகர் சாப்பிடுவதால் இன்சுலின் எதிர்ப்பு உருவாகும். இது கழுத்தில் கருப்புத் திட்டுகள் உருவாகவும் அதிக முடி வளரவும் காரணாக மாறுகிறது.

 

அதிக சுகர் சாப்பிடுவது சருமத்தில் ஏற்படுத்தும் பாதிப்பைக் குறைப்பது எப்படி

அதிக சுகர் சாப்பிடுவது சருமத்தில் ஏற்படுத்தும் பாதிப்பைக் குறைப்பது எப்படி

ஒரு பண்டிகை சமயத்தில் ஸ்வீட் சாப்பிடவே கூடாது என்று யாரும் சொல்லப் போவது இல்லை. ஆனால் சில எளிய வழிகள் மூலம் அதன் பாதிப்பைத் தடுக்கலாம்.

சுகர் என்று நாம் சொல்வது எந்த சுகர் என புரிந்துகொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட, கூடுதல் நிறமிகள் சேர்க்கப்பட்ட சர்க்கரை பற்றி பேசுகிறோம். பழங்கள், காய்கறிகளிலிருந்து எடுக்கப்பட்ட, இயற்கையான சுகர் சாப்பிடலாம். அது சருமத்தின் மீது எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. பதப்படுத்தப்பட்ட சர்க்கரையை தவிர்ப்பதே தீர்வு.

அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் செய்ய வேண்டும். உடம்பில் சுகர் சேர்வதை இது தடுக்கும்.

சர்க்கரை அதிகம் எடுத்துக்கொள்வதை சமநிலைப்படுத்த அதிக கார்போஹைட்ரேட்கள், காய்கறிகள், ப்ரோட்டீன்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கேரட் ஜூஸ், க்ரீன் டீ போன் ஏன்டி-ஆக்ஸிடென்ட் கொண்ட பானங்கள் குடிக்கலாம். இது அதிக சுகர் எடுத்துக்கொள்வதன் தாக்கத்தைக் குறைக்கும்.

உங்களின் அன்றாட ஸ்கின்கேர் வழக்கங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். ஒவ்வொரு நாள் முடிவிலும் மேக்கப் நீக்க மறக்கக்கூடாது. மாய்சுரைஸர் பயன்பாட்டை இரட்டிப்பாக்க

வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது மேட் ஃபினிஷ் கொடுக்கும் டோனர் பயன்படுத்த வேண்டும். Lakme Absolute Pore Fix Toner அதற்கு நல்ல சாய்ஸ். ஹேஸல் போன்ற இயற்கை

உட்பொருட்கள் அதில் உள்ளது. அதிக சுகர் எடுத்துக்கொள்வதால் சருமத்தில் அதிக ஆயில் சேர்வதை இது தடுக்கும்.

Main image courtesy: @kritisanon