2020ஆம் ஆண்டின் ஃபெஸ்டிவல் சீஸன் ஒரு விதமாக ஸ்பெஷலாக இருக்கும். வெவ்வேறு இடங்களில் இருந்தபடி பலர் ஆன்லைனில் கொண்டாடுவார்கள். குடும்ப விருந்துகள் நான்கு பேரின் டேஸ்ட் அடிப்படையில் மிக ஸ்பெஷலாக தயாரிக்கப்படும். இந்த டிஜிட்டல் கொண்டாட்டங்களின் நினைவை நீங்கள் இன்ட்ஸ்டாகிராம் மூலம் மறக்க முடியாத தருணங்களாக மாற்ற ஆசைப்படுவீர்கள். நண்பர்களுடன், குடும்பத்தினருடன் ஷேர் செய்வதற்கான செல்ஃபீ இல்லாத மறக்க முடியாத தருணங்களா… குறிப்பாக எண்ணெய்ப் பசை அதிகம் கொண்ட ஸ்கின் கொண்டவர்களுக்கு இது ஒரு பிரச்சனையை உண்டாக்கும். ஜிகுஜிகுவென்று ஓவராக பளிச்சிடும் முகம் உங்கள் அழகைக் கெடுக்கக்கூடும். செல்ஃபீ அதை மறைக்க முடியாததாக மாற்றிவிடும். முகத்தில் தெரியும் ஓவர் பளபளப்பை சரி செய்ய உதவும் இந்த டிப்ஸ் உங்களுக்கு மிகவும் யூஸ்ஃபுல்லாக இருக்கும். மேக்கப் செய்தாலும் செய்யாவிட்டாலும் இது பயனுள்ளதாக இருக்கும்.

 

01. ஆயில் சேர்வதைத் தடுக்க வேண்டும்

01. ஆயில் சேர்வதைத் தடுக்க வேண்டும்

வெளியே சென்றாலும் சரி, செல்லாவிட்டாலும் சரி, பண்டிகைக்கு முன்பு முகத்தை க்ளென்ஸ் செய்ய வேண்டும். விடாமல் பேசுவது, டான்ஸ் ஆடுவது, ஆயில் கொண்ட உணவுகளை சாப்பிடுவது சகஜம்தானே. அதனால் சருமத்தை க்ளென்ஸ் செய்வது மூலம் சில மணி நேரங்களுக்கு அதிகப்படியான எண்ணெய் படிவதைத் தடுக்கலாம். இது பண்டிகைக்கு உங்களை சூப்பராக தயார் செய்யும். எண்ணெய்ப் பசையை உறிஞ்சும் உட்பொருட்கள் கொண்ட க்ளென்ஸர் பயன்படுத்துவது இதை ஈஸியாக செய்ய உதவும்.

BB picks: Pond's Oil Control Face Wash

 

02. க்ளே மாஸ்க் பயன் தரும்

02.  க்ளே மாஸ்க் பயன் தரும்

பத்தே நிமிடங்களில் க்ளியரான, பிசிரு இல்லாத சருமம் வேண்டுமா… க்ளே மாஸ்க் பயன்படுத்துங்கள். நெருக்கமானவர்களுடன் கொண்டாடச் செல்லும் போது ஃபிரெஷ் ஆக இருக்க விரும்பினால் அதுதான் சிறந்த சாய்ஸ். உங்கள் சரும துளைகள் சேர்ந்திருக்கும் பிசுபிசுப்பையும் கழிவுகளையும் நீக்குவது மூலம் ஓவர் பளபளப்பு தருவதோடு மேட் ஃபினிஷ் கொண்ட முகமும் கிடைக்கும்.

BB picks: Lakme Absolute Perfect Radiance Mineral Clay Mask

 

03. டோனர் பயன்படுத்துவது கட்டாயம்

03. டோனர் பயன்படுத்துவது கட்டாயம்

களி மண் மாஸ்க் பயன்படுத்திய பிறகு கண்டிப்பாக டோனர் பயன்படுத்த வேண்டும். இழந்த ஈரப் பதத்தை சருமம் மீண்டும் பெற இது உதவும். அதோடு சருமத்தில் ஆயில் அதிகம் உற்பத்தியாவதைத் தடுத்து ஓவர் பளபளக்கை குறைக்கும். ஃபிரெஷ் ஆக வைத்திருக்கும். லேசான மேக்கப் என்றால் நீர்ச் சத்து கொண்ட டோனர் அவசியம். அது உங்கள் சரும துளைகளை சீல் செய்து, அடைப்பு ஏற்படாமல் காக்கும்.

BB picks: Dermalogica Multi-Active Toner

 

04. மேட் ஃபினிஷ் கொண்ட மேக்கப்

04. மேட் ஃபினிஷ் கொண்ட மேக்கப்

லேசான மேக்கப், அசத்தலான மேக்கப் என எதுவாக இருந்தாலும் மேட் ஃபினிஷ் கொடுக்கும் பொருட்களை பயன்படுத்துவது அவசியம். மேட் ஃபவுண்டேஷன், செட்டிங் பவுடர், சருமத்தில் உள்ள ஆயில் உறிஞ்சும் பொருட்கள் என எதுவாகவும் இருக்கலாம். அதே போல ப்ரைமர் பயன்படுத்தத் தவறாதீர்கள். சி.சி க்ரீம், ப்ளஷ் பயன்படுத்தினால்கூட அதை மறக்காதீர்கள். ஓவர் ஷைன் வராமலிருக்க ப்ரைமர் மிகவும் அவசியம்.

BB picks: Lakme Absolute Under Cover Gel Primer + Lakme 9 to 5 Primer + Matte Powder Foundation

 

05. அவசர தேவைகளின் போது ப்ளாட் செய்தல்

05. அவசர தேவைகளின் போது ப்ளாட் செய்தல்

இவை எல்லாம் தோற்றுப் போனால் கையில் கொஞ்சம் ப்ளாட் பேப்பர் வைத்துக் கொள்ளுங்கள். ஃபோட்டோ எடுக்கும் முன்பு ஓவர் ஷைனை துடைத்துவிட முடியும். அங்கங்கே திட்டு திட்டாக இருக்கும் ஆயில் பேட்ச்களை சரி செய்ய ரைஸ் பேப்பர் உபயோகமாக இருக்கும். அதுவும் மேக்கப்பை கெடுக்காமலே.

Main image courtesy: @sanyamalhotra_