சிலருக்கு ஆயில் ஸ்கின் அல்லது பருக்கள் தலைவலியாக இருக்கும். சிலருக்கு இரண்டும் சேர்ந்தே இருக்கும். அதற்கு க்ளே மேஸ்க் சிறந்தது. முகத்தில் உள்ள தூசியையும் பிசுபிசுப்பை உறிஞ்சி எடுப்பதால் இது ஒரு சிறந்த சாய்ஸ். Pond’s Bright Beauty Mineral Clay Mask அதை அற்புதமாக செய்யக்கூடியது. 100 சதவீத சுத்தமான மொரோக்கோ மினரல் க்ளே கொண்டது இது. அது போக விட்டமின் பி3. இது சருமத்தில் ஆழமாக ஊடுருவி சுத்தம் செய்யும். இதனால் எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாத ஜொலிக்கும் சருமம் கிடைக்கும். மேஸ்க் பரிந்துரை செய்தாச்சு. ஆனால் சரியான வகையில் அப்ளை செய்தால் மட்டும்தான் க்ளே மேஸ்க் நல்ல பலன் கொடுக்கும் தெரியுமா… அந்த ரகசியத்தைத்தான் இங்கே தரப் போகிறோம். இதோ அந்த ஐந்து ரகசியங்கள்.

 

01. முன்கூட்டியே எக்ஸ்ஃபாலியேட் செய்வது

01. முன்கூட்டியே எக்ஸ்ஃபாலியேட் செய்வது

அழுக்கான முகத்தில் க்ளே மேஸ்க் பயன்படுத்தலாமா… சருமத்தில் தேங்கி நிற்கும் இறந்த செல்கள், அசுத்தங்கள் ஆகியவை க்ளே மேஸ்க் கொடுக்கும் பலனைத் தடுப்பவை. அதனால் க்ளே மேஸ்க் பயன்படுத்தும் முன்பே எக்ஸ்ஃபாலியேட் செய்வது அதன் பலன்களை அதிகரிக்கச் செய்யும்.

 

02. வெகுசில உட்பொருட்கள் சேர்ப்பது

02. வெகுசில உட்பொருட்கள் சேர்ப்பது

பருக்கள் பிரச்சனை அதிகம் இருக்கிறதா… க்ளே மேஸ்க் மட்டுமல்ல அதோடு ஒரு சொட்டு ஆப்பிள் சிடர் வினிகர், கொஞ்சம் தண்ணீர் சேர்க்க வேண்டும். வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீருக்கு பதில் ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம். இது சருமம் பொலிவாகத் தெரிய உதவும்.

 

03. சரியான விதத்தில் அப்ளை செய்வது

03. சரியான விதத்தில் அப்ளை செய்வது

க்ளே மேஸ்க் அப்ளை செய்வதற்கு என்று ஒரு முறை இருக்கிறது. இல்லாவிட்டால் எல்லாம் வீண். அதற்கு சரியான அப்ளிகேட்டர் பயன்படுத்த வேண்டும். ஸ்மூத்தாக அப்ளை செய்ய வசதியாக நல்ல வளைவு கொண்ட பிரஷ் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்ததாக, மெல்லிய லேயர் மட்டுமே அப்ளை செய்ய வேண்டும். அடர்த்தியாக அப்ளை செய்வதால் எந்தப் பலனும் இல்லை. ஆயில் சருமமும் பருக்கள் பிரச்சனையும் சேர்ந்தே இருப்பவர்கள் டி-பகுதியில் மட்டுமே க்ளே மேஸ்க் அப்ளை செய்ய வேண்டும்.

 

04. கண்கள், உதடுப் பகுதிகளைத் தவிர்ப்பது

04. கண்கள், உதடுப் பகுதிகளைத் தவிர்ப்பது

கண் பகுதியும் உதடுப் பகுதியும் சென்சிடிவ் மட்டுமே அல்ல. பிற பகுதிகளைவிட அதில் ரியாக்ஷன் உடனடியாகத் தெரியும். இதனால் க்ளே மேஸ்க் பயன்படுத்தும் போது பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக புருவங்களை திருத்தியிருந்தாலோ, உதடுகளில் அழகூட்டியிருந்தாலோ பிரச்சனை ஏற்படலாம்.

 

05. நன்றாகக் கழுவுவது

05. நன்றாகக் கழுவுவது

நன்றாக உலரும் வரை க்ளே மேஸ்க் இருக்க வேண்டும் என்று உங்களிடம் சொன்னார்களா. அது ஒரு கற்பனை. வெடிப்பு விடும் வரை க்ளே மேஸ்க் இருக்கக்கூடாது. பிசுபிசுப்பாக மாறி, உலரத் துவங்கும் போதே க்ளே மேஸ்க் நீக்கிவிடலாம். இல்லாவிட்டால் சருமம் நீர்ச் சத்தை இழந்துவிடும். க்ளே மேஸ்க் ரிமூவ் செய்யும் போது அதே க்ளே மேஸ்க் வைத்து எக்ஸ்ஃபாலியேட் செய்ய வேண்டும். மிருதுவான மசாஜ் டவல் எடுத்துக்கொள்ளவும். வட்ட வடிவத்தில் ஸ்கிரப் செய்யவும். இதன் மூலம் ஆழமாக க்ளென்ஸ் செய்ய முடியும்.