வழக்கமாக செய்யப்படும் ஒவ்வொரு சருமப்பராமரிப்பிலும் சீரம்கள் ஒரு முக்கியமானப் பங்கை வகிக்கின்றன . திறன்மிக்க உட்பொருட்களை கொண்ட இத்தகைய அடர்திரவ சூத்திரத்தினால் ஏன் ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட சருமம் தொடர்பான பிரச்னைகளை திறம்பட சமாளிக்க முடியவில்லை. இருப்பினும், பெரும்பாலான சீரம்கள் எட்டமுடியாத விலைப்பட்டியலுடன் வருவதால், ஒரு சிறிய சீரம் பாட்டிலைக் கூட வாங்குவதற்கு சிந்தித்துக் கொண்டிருக்கின்ற மக்கள் அதில் பணத்தை செலவழிக்க சென்றுவிடுகின்றனர். ஆனால், சாதாரண சருமப்பராமரிப்பு பொருட்களைவிட பொதுவாகவே சீரம்கள் விலையுயர்வாகத்தான் உள்ளது என்று நாங்கள் கூறுவதை நம்புங்கள். உங்கள் கையிலுள்ள அசுத்தத்தைப் போக்குவதற்கு கையையே வெடி வைத்துத் தகர்க்க வேண்டிய அவசியமில்லை. இப்போதே உங்களுடைய விருப்பத்தை அடைவதற்கு அனைத்து சருமப் பாதிப்புகளுக்கும் பட்ஜெட்டுக்கேற்ற இந்தியாவிலேயே கிடைக்கக் கூடிய சீரம்களின் பட்டியலை வழங்குவதில் நாங்கள் ஆவலாக இருக்கிறோம். எனவே, உடனேச் சென்று உங்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொள்ளுங்கள். அதே நேரத்தில், எங்களுக்கு நன்றி சொல்ல மறந்திடாதீர்கள்.
சீரற்ற சரும நிறம்

உங்கள் வாயைச் சுற்றியுள்ள தோல் உங்கள் முகத்தின் மற்ற பகுதிகளுடன் பொருந்தவில்லை என்றால், அது உங்களுக்கான பிரச்னை மட்டுமல்ல. சீரற்ற சருமநிற பாதிப்பு ஒரு பொதுவான சருமப் பிரச்னையாகும், மேலும் சரியான சரும சீரம் பயன்படுத்துவதன் மூலம் அதை சமாளிக்க முடியும். சீரற்ற தோல்நிறப் பிரச்னைகளுக்கு, இந்தியாவிலேயேக் கிடைக்கக் கூடிய பட்ஜெட்டுக்கேற்ற மற்றும் சருமத்திற்கேற்ற ஒரு சிறந்த திறன் கொண்டது Lakmé 9 to 5 Vitamin C+ Facial Serum. சீரம் ஆகும். உலகிலேயே மிக உயர்தரமான வைட்டமின் Cஐ கொண்ட ககாடு பிளம் மூலம் செறிவூட்டப்பட்ட இந்த சீரம் இறந்த சரும செல்களை மென்மையாக வெளியேற்றி, சரும நிறமாற்றத்தை சரிசெய்கிறது. இது சருமச் சுவர்களை வலுப்படுத்துதல், முன்கூட்டிய சரும முதிர்வு, சூரியக்கதிரால் பாதிப்பு மற்றும் பொலிவற்றத் தன்மை போன்ற பலவித சருமப் பிரச்சினைகளைச் சமாளிப்பது மற்றும் சருமத்தை பொலிவுடன் தோற்றமளிக்கச் செய்வது போன்றவற்றை கையாளவதில் இது மிகவும் திறம்பட செயலாற்றும். விலை : ரூ. 549
கரும்புள்ளிகள்

முகப்பரு விட்டுச் செல்லும் கரும்புள்ளிகள் மற்றும் சருமப் பாதிப்பு வடுக்கள், உங்கள் சருமத்தை பொலிவற்றதாகவும் சீரற்றதாகவும் தோற்றமளிக்கச் செய்யும். பிரகாசமான சீரம்மைப் பயன்படுத்துவதால் இவற்றை சரி செய்ய முடியும். இந்த Lakme Absolute Perfect Radiance Skin Brightening Serum சீரம் உங்கள் முகத்திலுள்ள சருமப் பாதிப்பு அடையாளங்களை அகற்றி, முகத்திற்குப் பொலிவையும் தரக் கூடியது. சருமச் சுவர்களை பலப்படுத்தும் வைட்டமின் B 3, சருமநிறத்தை சீராக்கும் ஹெக்ஸிலெர்சோர்சினோல், சருமத்தை மிருதுவாக்கும் விட்ச் ஹெஸல், மற்றும் சருமத்தை மெருகூட்டச் செய்யும் மைக்ரோ-க்ரிஸ்டல்ஸ் போன்ற பொருட்களை இந்த சீரம் உள்ளடக்கியுள்ளது விலை : ரூ. 975.
வறண்ட மற்றும் பொலிவற்ற சருமம்

வறட்சி என்பது சரும நிறத்தை பொலிவற்றதாகவும், மெல்லியதாகவும் மாற்றக்கூடிய ஒரு பொதுவான சருமப் பிரச்னையாகும். சில சமயங்களில், சருமத்தின் தடிமனான தன்மையினால் மாய்ஸ்சரைசர்களால் சருமத்தின் ஆழமான அடுக்குகளில் ஊடுருவ முடியாது. சீரம்மை பயன்படுத்தும்போது, அதன் சீரான தன்மை சருமத்தின் தடிமனான பகுதிக்குள் ஆழமாகவும் எளிதாகவும் ஊடுருவிச் சென்று, அதன் ஆழமான மட்டத்திலேயே, அதற்கு நல்ல ஊட்டத்தை அளிக்கின்றது. அனைத்துவித வறண்ட சருமப் பாதிப்புகளுக்கும் ஒரு சிறந்தப் பாதுகாப்பைத் தரக் கூடியது இந்த Lakme Absolute Argan Oil Radiance Overnight Oil-in-Serum ஒரு சிறந்த தயாரிப்பு ஆகும். இந்த ஆர்கானினால் உங்களுடைய சருமத்தை நீண்ட நேரம் ஊட்டத்துடன் வைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியமான பொலிவையும் தரக் கூடியது. விலை : ரூ. 975
முதிர்வடைந்த சருமம்

துரதிர்ஷ்டவசமாக, புறஊதா கதிர்கள் மற்றும் மாசுகள் போன்ற சுற்றுச்சூழல் தாக்குதலினால், உங்கள் சருமத்திற்கு முன்கூட்டியே முதிர்வை ஏற்படுகின்றது. ஆனால், உங்களின் வழக்கமான சருமப்பராமரிப்புடன் Ponds Age Miracle Double Action Serum போன்ற முன்கூட்டிய சரும முதிர்வை தடுக்கக் கூடிய சீரம் உங்கள் சருமத்தை சரி செய்யவும், சரும முதிர்வு அறிகுறிகளை தாமதப்படுத்தவும் உதவும். வைட்டமின் B3 மற்றும் ரெட்டினோல் ஆகியவற்றால் உட்செலுத்தப்பட்ட இந்த சீரம், நீங்கள் இரவில் தூங்கும்போது சுருக்கங்களையும் சரும வரிகளையும் சரிசெய்வது மட்டுமல்லாமல் வறட்சி, சீரற்ற சருமநிற மாற்றம் போன்ற பிரச்னைகளையும் குணப்படுத்துக்கின்றது.
விலை : ரூ. 999
பெரும்பாலும் கேட்கப்படும் கேள்விகள்:
1) முகச் சீரம்கள் உண்மையிலேயே நன்றாக வேலை செய்யுமா?
ஆமாம், மற்ற சருமப்பராமரிப்புப் பொருட்களைவிட முகச் சீரம்கள் மிகவும் சிறப்பாக வேலை செய்யும். ஏனெனில், ஒரு குறிப்பிட்ட சருமப் பிரச்னைகளை கையாள்வதற்கான உட்பொருட்களை உள்ளடக்கிய ஒரு ஆற்றல் வாய்ந்த தயாரிப்பாகும்.
2) சீரம்மை பயன்படுத்த துவங்குவதற்கான சிறந்த வயது எது?
நம்மைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் தொடர்ந்து மாசுப்பட்டுக் கொண்டே வருவதால், சுற்றுச்சூழல் தாக்குதலிலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, சீரம்மை 20 வயதுக்கு முன்பிருந்தே பயன்படுத்தலாம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
3) அன்றாடம் பயன்படுத்தக் கூடிய ஒரு சிறந்த சீரம் எது?
அன்றாடம் பயன்படுத்தக் கூடிய ஒரு சிறந்த சீரம் வைட்டமின் C ஆகும். இது முன்கூட்டிய சரும முதிர்வு, கரும்புள்ளிகள் மற்றும் சீரற்ற சருமநிறம் போன்ற சருமப் பிரச்னைகளிலிருந்து பாதுக்காக்கக் கூடிய சருமப் பாதுகாப்பு அடுக்குகளை பலப்படுத்தவும், பலவித சருமப் பிரச்னைகளையும் சமாளிக்கிறது.
Written by Kayal Thanigasalam on Aug 02, 2021
Author at BeBeautiful.