கோடைக்காலமும், சன்ஸ்கிரீனும் பிரிக்க முடியாதவை. இதை ஒப்புக்கொள்ள முடியாமல், நிழலே சிறந்தது என நினைப்பவர்கள் முக்கியமாக இந்த கட்டுரையை வாசிக்கவும்.

கடுமையான யு.வி கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தை காக்க குடை எடுத்துச்செல்வது அல்லது ஸ்கார்ப் அணிவது நல்ல யோசனை என்றாலும், இது போதுமானதல்ல. கருத்துப்போகச்செய்வது முதல் சரும புற்றுநோய் வரை, சூரிய ஒளியின் தாக்கம் மோசமாக மற்றும் நீங்கள் கற்பனை செய்யாத வகையில் இருக்கலாம். உங்கள் சருமத்தில் ஏற்படும் பெரும்பாலான மாற்றங்கள் ( நீங்கள் இவற்றை இயல்பான வயோதிக செயல்முறையால் ஏற்படுபவை என நினைத்திருக்கலாம்),சருமத்தில் உள்ள எலாஸ்டின் எப்படும் நார்களை சூரியனின் அல்ட்ரா ஒயிலெட் கதிர்கள் தாக்குதவதால் ஏற்படுபவை. இந்த நார்கள் பாதிக்கப்படும் போது, சருமம் தொய்வடைகிறது. இது உங்கள் சருமத்தின் மீது உடனடியாக பிரதிபலிக்க விட்டாலும் கூட, பின்னாட்களில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.  

உங்கள் சருமத்தை பாதுகாப்பதற்கான சரியான வழியை அறிவதற்கு நீங்கள் இந்த விஷயங்களை எல்லாம் அறிந்திருக்க வேண்டும்...

 

சூரிய ஒளிக்கதிர்களின் பாதிப்பு

சூரிய ஒளிக்கதிர்களின் பாதிப்பு

மூன்று வகையான அல்ட்ரா ஒயிலெட் கதிர்கள் ( யு.வி) இருப்பது உங்களுக்குத்தெரியுமா? அவை யு.வி.ஏ, வி.வி.பி மற்றும் யுவிசி ஆகும். யுஏவி இவற்றில் மிகவும் பரவலாக ஏற்படக்கூடிய சூரிய ஒளி தாக்கமாக அமைகிறது. யு.வி.பி சூரிய ஒளிக்கதிர்களில் குறைவாக இருந்தாலும் தாக்கம் அதிகமாகும். யு.வி.சி மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் நல்லவேளையான பூமியின் ஓசோன் படலம், இந்த கதிர்களை தடுப்பதால்  யுவிசி கதிர்கள் பாதிப்பு பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். யு.வி கதிர்கள் கண்களுக்கு புலப்படாவிட்டாலும் கூட, சூரிய ஒளிக்கு அதிகமாக இலக்காவது இந்த கதிர்கள் சருமத்தின் உள் பகுதிகளுக்கு செல்ல வழி செய்கிறது. இதனால் சன் பர்ன் பாதிப்பு உண்டாகிறது. சன் பர்ன் பாதிப்பு, செல்களை இறக்கச்செய்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. புற்றுநோய் பாதிப்பும் ஏற்படலாம். தோல் சிவப்பாகி எரிச்சல், வலி, தோல் உரிவது , நீர்த்தன்மை இல்லாமல் போவது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால் அது சன்பர்ன் பாதிப்பாகும்.

 

சரும பாதுகாப்பு ஏன் முக்கியம்?

சரும பாதுகாப்பு ஏன் முக்கியம்?

சிறிய அளவில் யு.வி கதிர்கள் உடலுக்கு நல்லது தான் என்றாலும், அது சில ஆரோக்கிய குறைபாடுகளை போக்கும் என்றாலும் கூட, அதிக அளவிலான தாக்கம் சிக்கலை ஏற்படுத்தலாம். இதனால் கீழ் கண்ட சரும பாதிப்புகள் உண்டாகலாம்:

  • முன்கூட்டியே வயோதிக தன்மை: சூரிய ஒளியின் தீங்கான கதிர்கள் உங்கள் சருமம் வழக்கத்தை விட சீக்கிரம் வயோதிக தன்மையை பெற வைக்கிறது. இதனால் சுருக்கங்கள், நுண் கோடுகள், கரும் திட்டுகள் உண்டாகின்றன.
  • சரும மாற்றங்கள்: மெலானின் கொண்ட சில சரும செல்கள் ஒன்றாக திரண்டு, மச்சங்களாகலாம். காலப்போக்கில் இவை புற்றுநோயாக மாறும் வாய்ப்பும் இருப்பது தான் மோசமானது.
  • நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்பு: இரத்த வெள்ளை அணுக்கள் உங்கள் உடலை காக்க பாடுபடுகின்றன. சருமம் சன்பர்னால் பாதிக்கப்படும் போது இவை புதிய செல்கள் உருவாக உதவுகின்றன. இதனால் மற்ற பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படலாம்.
  • கண்களில் பாதிப்பு: யு.வி கதிர்கள் உங்கள் கண்களை பாதிக்க கூடியவை. வெளிப்புற பகுதியான கார்னியாவை இவை பாதிக்க கூடும். இதனால் பார்வை மங்கலாகலாம். கவனிக்காமல் விடப்படும் போது, காலப்போக்கில் இது காட்ராக்ட் மற்றும் பார்வை இழப்பை உண்டாக்கலாம்.  
 

ஸ்கார்ப்கள் Vs சன்ஸ்கிரீன்கள்

ஸ்கார்ப்கள் Vs சன்ஸ்கிரீன்கள்

தீங்கான யுவி கதிர்கள் உங்கள் சருமத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், சூரிய ஒளியின் பாதிப்பை கட்டுப்படுத்துவது என்பது முழுவதும் உங்கள் கைகளில் இருக்கிறது. கோடைக்காலத்தில் ஸ்கார்ப்கள் மற்றும் தொப்பிகள் மிகவும் அவசியம் என நீங்கள் நினைத்தால் முற்றிலும் சரி தான். ஆனால் ஸ்கார்ப்கள் மற்றும் தொப்பிகள் யுவி கதிர்களில் இருந்து காக்க உதவினாலும் சருமத்தை பாதுகாக்க உங்களுக்கு இவை மட்டும் போதுமானவை அல்ல.

சூரிய ஒளியில் இருந்து சருமத்தை நீங்கள் பாதுகாத்து கொள்வதற்கான வழிகள் இதோ:  

சன்ஸ்கிரீன்: சன்ஸ்கிரீனை உங்கள் வாழ்நாள் தோழனாக மாற்றிக்கொள்ளுங்கள். எஸ்பிஅப் பாதுகாப்பு அதிகம் இருந்தால் இன்னும் நல்லது. பரவலான தன்மை கொண்ட சன்ஸ்கிரீன் யுஏவி மற்றும் யுவிபி கதிர்களை தடுக்கிறது.  லாக்மே சன் எக்ஸ்பெர்ட் எஸ்பிஎப் 24 பிஏ ++ யுவி லோஷன் லடி பீல்  சன்ஸ்கீரினை பயன்படுத்த நாங்கள் பரிந்துரைக்கிறோம். இதை வெளியே செல்லும் முன் 20 நிமிடங்களுக்கு முன்னதாக பூசிக்கொள்ளவும். கண்கள், உதடுகள், தலைமுடிப்பகுதி என அதிகம் கவனிக்கப்படாத பகுதிகளில் பயன்படுத்த மறக்க வேண்டாம். நல்ல பலன் பெற 2 அல்லது 3 மணி நேரத்திற்கு ஒரு முறை மீண்டும் பயன்படுத்தவும்.

  • சூரிய ஒளி பாதிப்பை குறையுங்கள்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சூரிய ஒளி கதிர்கள் வலுவாக இருக்கின்றன என்பது உங்களுக்குத்தெரியுமா? எனவே இந்த நேரத்தில் சூரிய ஒளியில் நேரடியாக படும்படி செல்வதை தவிர்ப்பது நல்லது. இந்த நேரத்தில் வெளியே செல்ல நேர்ந்தால் இடையே ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.  உள்ளுக்குள் சென்று நிழலில் அமரவும். ஸ்கார்ப் அல்லது தொப்பி அணியவும். யுவி கதிர்களை தடுக்கும் குளிர் கண்ணாடி அணிவது நல்லது.  உடலை துணியால் மறைந்துக்கொள்வது கடினமான சூரிய ஒளிக்கதிர்களில் இருந்து கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்.