சூடான டீ. அதோடு போர்வை போர்த்திக் கொண்டு கையில் ஒரு நல்ல புத்தகத்தை வைத்துக்கொண்டால் போதும். வெளியே புயல் வீசினாலும் நமக்குக் கவலை இல்லை. ஆனால் இந்த சீஸனில்தான் பூஞ்சை (ஃபங்கஸ்) பிரச்சனை அதிகமாக இருக்கும். காற்றில் ஈரப் பதம் அதிகம் இருக்கும் போது பேக்டீரியாவும் கிருமித் தொற்றுக்களும் ஈஸியாக பரவும். குறிப்பாக சென்சிடிவ் ஸ்கின் கொண்டவர்களுக்கு இது சகஜம். இன்ஃபெக்ஷன், அரிப்பு ஏற்படலாம். மழையிடமிருந்து தப்ப முடியாது என்றாலும்கூட அந்த பருவத்தில் ஏற்படும் பூஞ்சைத் தொல்லையிலிருந்து விடுபட வழி உள்ளது. இதோ டிப்ஸ்…
- 01. கழுவக்கூடிய காலணி
- 02. மேட் மாய்ஸ்சுரைசர்
- 03. டீடாக்ஸ் பாடி வாஷ்
- 04. ஈரத் துணிகளுக்கு டாட்டா
- 05. டால்கம் பவுடர்
01. கழுவக்கூடிய காலணி

மழைக் காலம் என்று வரும் போது, கழுவக்கூடிய காலணியை தயார் செய்து வைத்திருப்பது நல்லது. ரப்பர் பூட்ஸ் போன்ற காலணிகள் அணியும் போது ஷூவுக்குள் தண்ணீர் புகும் வாய்ப்புகள் குறையும். பூஞ்சை இன்ஃபெக்ஷன்கள் ஏற்படாமலும் இது தடுக்கும்.
02. மேட் மாய்ஸ்சுரைசர்

ஆயில் ஸ்கின் கொண்டவர்களுக்கு மேட் மாய்ஸ்சுரைசர் ஒரு அருமையான மருந்து. ஈரப் பதம் அதிகம் இருப்பதால் மாய்ஸ்சுரைஸர் வேண்டாம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் சருமத்திற்கு அது நல்லதல்ல. பருக்கள், சரும வெடிப்புகள் போன்றவை ஏற்படலாம். லைட் வெயிட், மேட் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தும் போது இத்தகைய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். Lakmé Matte Moist Mattifying Moisturiser ஒரு நல்ல சாய்ஸ். க்ரீன் டீ உட்பொருட்கள் ஏன்டி ஆக்ஸிடென்ட் மட்டுமல்ல, பூஞ்சைக்கு எதிராகவும் போரிடும். அதோடு விட்ச் ஹேசல் (வெடிப்புகளை சரி செய்யும் இயற்கை மருந்து) பயன்படுத்தலாம். இது 12 மணி நேரத்திற்கு உங்கள் சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர் தரும். நாள் முழுவதும் மேட் ஃபினிஷ் கிடைக்கும்.
03. டீடாக்ஸ் பாடி வாஷ்

ஈரப் பதம் அதிகம் கொண்ட மழைக் காலங்களில் பேக்டீரியா, ஃபங்கஸ் பிரச்சனை அதிகமாக இருக்கும். அதனால் உடலை சுத்தமாக வைத்துக்கொள்வது இந்தக் காலக் கட்டத்தில் மிகவும் முக்கியமானது. அரிப்பு, சிவப்பு திட்டுக்கள், தொற்று ஏற்படாமல் தடுக்க இது உதவும். டீ ட்ரீ ஆயில், லெமன் கிராஸ், யூகிளிப்டஸ் போன்ற பூஞ்சைக்கு எதிராகப் போரிடும் உட்பொருட்கள் கொண்ட பிராண்ட்களை பயன்படுத்தலாம். Love Beauty & Planet Tea Tree and Vetiver Aroma Daily Detox Body Wash எங்கள் ஃபேவரைட். சரியான முறையில் சேகரிக்கப்பட்ட டீ ட்ரீ ஆயில், வெட்டி வேர் கொண்ட டீடாக்ஸ் இது.
04. ஈரத் துணிகளுக்கு டாட்டா

மழையில் மாட்டிக்கொள்வதைத் தவிர்க்க முடியாது. முடிந்த வரை சீக்கிரமாக ஈரத் துணிகளை மாற்றிவிட வேண்டும். ஈரத் துணிகளை நீண்ட நேரம் அணிந்திருப்பது அரிப்பு பிரச்சனைகளுக்கும் பூஞ்சை தொற்றுக்கும் காரமாகலாம். லூஸான, காற்று புகும்படியான ஆடைகள் அணிவது ஒரு தீர்வு. அது வசதியாகவும் இருக்கும் தொல்லை கொடுக்கும் அரிப்பிலிருந்தும் காப்பாற்றும்.
05. டால்கம் பவுடர்

பூஞ்சை பாதிப்பு வந்த பிறகு டால்கம் பவுடர் பயன்படுத்துவதுதான் ஒரே தீர்வு. Pond’s Dreamflower Fragrant Talc Powder ஒரு நல்ல சாய்ஸ். இது நல்ல பலன் தரும். நறுமணத்தை மட்டுமே பார்க்காதீர்கள், ஆயில் நீக்குதல், ஈரப் பதம், கெட்ட நாற்றமின்மை போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.
Written by Kayal Thanigasalam on Jul 20, 2021
Author at BeBeautiful.