கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கமும், ஈரப்பதமும் அதிகரிப்பதாலும், உங்களுடைய உடலிலிருந்து வியர்வை அதிகமாக வெளியேறும். கோடை காலத்தில் உங்களுடைய சருமம், தலைமுடி மற்றும் உடலை ஆகியவற்றை பாதுகாப்பது மிகவும் இன்றியமையாததாகும். உலகளவில் தங்களுடைய தலைமுடிக்கும், முகத்திற்கும் அதிக கவனம் கொடுக்கும் மக்கள், தங்களுடைய அக்குளின் மீது அதிக கவனம் செலுத்துவதில்லை.

உங்கள் அக்குளை நன்றாக ஈரமில்லாமல் உலர்த்தியும், துர்நாற்றம் அடிக்காமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். கோடை மற்றும் ஈரப்பத பருவ காலத்தில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். வியர்வை, அழுக்கு, எண்ணெய் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் எச்சம் போன்றவை உங்கள் அக்குளில் அதிகம் சேரும்போது, எரிச்சல் மற்றும் வீக்கம் ஏற்படும். வருடத்தின் இந்த சமயத்தில் உங்களுடைய அக்குளில் நச்சுத்தன்மை சேராமல் பாதுகாப்பது அவசியம். அக்குளில் சேர்ந்திருக்கும் நச்சுத்தன்மை நீக்குவதால் விளையும் நன்மைகள் பற்றியும், வீட்டிலேயே அதை எப்படிச் செய்வது என்பது பற்றியும் தெரிந்து கொள்வோம்.

கோடைகாலத்தில் உங்கள் அக்குளில் ஏற்படும் நச்சுத்தன்மையை அகற்ற வேண்டிய அவசியம்

01.  அதிக வியர்வை வடிவதை குறைப்பது

நச்சுத்தன்மையை நீக்கியபின், முதலில் உங்கள் அக்குளிலிருந்து அதிகமான வியர்வை வெளியேறும்.   உங்கள் அக்குளிலில் தங்கியிருக்கும் நச்சுத்தன்மை வெளியேற்றப்படுவதால், அதைப் பற்றி கவலையடைய வேண்டாம்.  சிறிது நாட்களில், உங்கள் உடலிலிருந்து வெளியேறும் வியர்வையின் அளவை வெகுவாக குறைந்து வருவதை நீங்கள் கவனிக்கலாம்.   எனவே, இந்த கோடையில் காலத்தில் அதிகளவு வியர்த்துக் கொட்டினால்,  அக்குளிலை எப்போதும் உலர்ந்தபடியே வைத்துக் கொண்டு நச்சுத்தன்மை சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

02.  உங்களுடைய அக்குள் பழைய நிலையை அடைய முயற்சிக்கவும்.
கோடைகாலத்தில் துர்நாற்றத்தைப் போக்கும் பொருட்களை உபயோகப்படுத்துவதைப் பற்றி எந்த விவாதமும் செய்யத் தேவையில்லை.  ஆல்கஹால்  போன்ற உட்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட துர்நாற்றத்தை நீக்கும் பொருட்களால், உங்களுடைய மென்மையான அக்குள் சருமத்தின் மீது  மிக கடுமையைக் காட்டும்.  பாக்டீரியாக்கள் மற்றும்  வேறு சில அசுத்தங்களை அக்குளிலிருந்து அகற்றி, உங்களுடைய சருமத்திற்கு புத்துணர்ச்சியையும், அதை பழைய நிலைக்கு மீட்டெடுக்கவும் உதவுகிறது.  நச்சுத்தன்மையை நீக்கிய பிறகு, மாஸ்யரைஸிங், ஆல்கஹால் இல்லாத துர்நாற்றத்தை நீக்கும் பொருட்களை பயன்படுத்துவதைப் பற்றி யோசிக்கவும்.  ஆல்கஹால் கலக்காத, பாரபென் இல்லாத சருமத்திற்கேற்ற துர்நாற்றத்தை நீக்கக்கூடிய பிரத்யேகமான பெண்களுக்கென்றே டோவ் ஒரிஜினல் ஆன்டிஸ்பெர்ஸன்ட் டியோடரண்ட்டின் தயாரிப்பாகும். மேலும், மிகவும் உங்கள் சருமத்தை நாள் முழுக்க வாசனையாக வைத்திருக்க  உதவும்.

03. உடல் துர்நாற்றமடிக்காமல் வைத்திருக்க உதவும்.
நாள் முழுக்க  நம்முடைய உடலிலிருந்து இயற்கையாகவே உடல் துர்நாற்றம் உருவாகும்.  இருப்பினும், ஒரு சில சமயங்களில், அதிக வியர்வை வெளியேற்றம் காரணமாக அதிக துர்நாற்றம் அடிக்கும். அக்குளுக்குள்  மறைந்திருக்கும் அசுத்தங்களையும், பாக்டீரியாக்களையும் சோப் மற்றும் தண்ணீர் சுத்தம் செய்து அவற்றை அகற்ற முடியாது.  ஒரு துர்நாற்றம் அகற்றும் பொருட்களால் மட்டுமே அவற்றை முழுமையாக சுத்தம் செய்து, உடலின் துர்நாற்றத்தைப் போக்க முடியும்.

 

கோடைகாலத்தில் உங்கள் அக்குளில் ஏற்படும் நச்சுத்தன்மையை அகற்ற வேண்டிய அவசியம்

துர்நாற்றத்தை அகற்றும் பொருட்களை செய்வது எப்படி

வழிமுறை 01 :   பென்டோநைட் க்ளே, ஆப்பில் ஸைடர் வினிகர், மற்றும் தண்ணீர் ஒரு சில துளிகள் சேர்த்து ஒரு பசையை தயாரிக்கவும்.
வழிமுறை 02 :   தண்ணீர் மற்றும் பாடிவாஷைக் கொண்டு உங்கள் அக்குளை மென்மையாக சுத்தம் செய்யவும்
வழிமுறை 03:   அந்தப் பகுதியை ஒத்தி உலர வைத்தப்பின், உங்கள் அக்குளில் இந்த பசையை சீராக தடவவும்
வழிமுறை 04:   10-15 நிமிடங்கள் வரை அப்படியே உலர விட்டப்பின், தண்ணீர் கொண்டு நன்றாக கழுவ வேண்டும்

வாரத்திற்கு ஒருமுறை இப்படி உங்கள் அக்குளில் தங்கும் நச்சுத்தன்மையை எளிமையாக நீக்குவதால் உங்களின் அக்குள் இந்தக் கோடைக்காலம் முழுவதும் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.