ஆஹா! வந்துவிட்டது குளிர்காலம்... கதகதப்பான உடைகள், குளுமையான இடங்கள், கொஞ்சம் சாக்லேட் ... ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். ஆனால் உங்கள் தலைமுடிக்கும் சருமத்திற்கும் அவ்வாறு அல்ல. மாய்ஸ்டரைசர், சாப்ஸ்டிக் மற்றும் கதகதப்பான எண்ணெய் மசாஜ் இவைகள் இல்லாமல் உங்களால் குளிரின் கடுமையை தாங்க முடியாது. இதற்கு நீங்கள் சூடான ஸ்டைலிங் பொருட்களை பயன்படுத்தினால் உங்களது கூந்தல் அதனால் பாதிக்கப்படும். எனவே இந்த குளிர்காலத்தில் உங்களது கூந்தல் பாதிக்கப்படாத குளிர்கால ஹேர்ஸ்டைல்களை இதில் நாம் கற்றுக்கொள்ளலாம்.

வருகின்ற நாட்களில் உள்ள முக்கிய நிகழ்ச்சிகளுக்கு எவ்வாறு நம் கூந்தலை அலங்காரம் செய்வது என்ற குழப்பத்தோடு நீங்கள் இருப்பீர்கள். இதில் வேற சூடான ஸ்டைலிங் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று கூறிவிட்டோம், அப்பொழுது என்ன தான் செய்வது? ஹேர் ஸ்ட்ரெய்ட்னர் மற்றும் கார்லேர் இல்லாமல் உங்களது கூந்தலை உங்களால் அழகுப்படுத்த இயலாது அல்லவா? இந்த சமயத்தில் நாங்கள் எந்த ஸ்டைலிங் பொருட்களும் இல்லாமல் உங்களது சிகையை மாற்றலாம் என்று கூறினால்... தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறதா? மேலும் படியுங்கள்…

 

1. பப்பில் போனி டெயில்

பப்பில் போனி டெயில்

டிஸ்னி இளவரசிகளை பார்த்துதான் பப்பிள் போனி டெயில் ஸ்டைல்களை செய்ய வேண்டுமென்று விரும்பியிருப்போம். உங்களுக்கு கூந்தல் நீளமாக மற்றும் இது போன்ற குளிர்கால சிகை அலங்காரத்தை விரும்பினால் இந்த ஸ்டைலிஷ் போனிடெயில் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். உங்கள் கூந்தலை நன்கு குவித்து போனிடைல் போட்டு ஹேர் டையினால் கட்டுங்கள். பின்பு உங்கள் போனிடைலின் ஒவ்வொரு அடியிலும் ஹேர் டையை கட்டுங்கள். டையால் கட்டப்பட்ட ஒவ்வொரு அடுக்கையும் விரல்களால் சற்று களைத்து அடர்த்தியாக மாற்றுங்கள்.

 

2. முற்றுப்பெறாத பின்னல்

முற்றுப்பெறாத பின்னல்

இந்த பெண்ணின் சிகையை எளிமை மற்றும் அழகு ஆகிய இரு வார்த்தைகளால் குறிப்பிடலாம். குளிர்காலத்தில் உங்களது கூந்தல் சொரசொரப்பாக மாறும், இதனை தவிர்க்க கூந்தலை பின்னுவது நல்லது. எனவே மேலே குறிப்பிட்டுள்ள சிகை அலங்காரத்தை முயற்சித்து பாருங்கள். உங்கள் கூந்தலை முகத்திற்கு கீழ் விழும்படி நன்கு பின்னுங்கள். சிற்சில இடங்களில் மட்டும் பின்னலை இறுக்கிக்கொண்டு இந்த அலங்காரத்தோடு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

 

3. அரை முடி மேல் முடிச்சு

அரை முடி மேல் முடிச்சு

படியாத கூந்தலா? இந்த சிகை அலங்காரத்தை சொரசொரப்பான படியாத கூந்தல் அனைத்திற்கும் பயன்படுத்தலாம். உங்கள் கூந்தல் எவ்வளவு நீளமானதாக இருந்தாலும் இந்த எளிதான சிக் ஹேர்ஸ்டைல் உங்களுக்கு நிச்சயம் பொருந்தும். தலைக்கு மேலே உங்கள் கூந்தலை சிறிது பண் போல முடித்து மீதமிருக்கும் முடியை தலைக்கு இரு பக்கமும் களைத்து விழும்படி செய்யுங்கள். அந்த பண் கலையாமல் இருக்க பின்னை பயன்படுத்தலாம்.

 

4. ஹாஃப் அப் டிவிஸ்ட்

ஹாஃப் அப் டிவிஸ்ட்

ஹாஃப் அப் டிவிஸ்டானது மெனக்கெடாத அழகான கூந்தல் அலங்காரமாகும். இந்த அலங்காரத்தோடு எந்த விசேஷங்களுக்கும் நாம் செல்லலாம். இந்த சிகை அலங்காரத்தோடு பொருந்துகிற நல்ல ஆடைகளையும் அணியுங்கள். உங்கள் கூந்தலின் தடிமன், வகை மற்றும் நீளத்தை பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டியதில்லை. அனைத்திற்குமே இந்த அலங்காரம் பொருந்தும். உங்கள் கூந்தலை இரு பகுதியாக பிரித்து அந்த பகுதிகளை லாவகமாக இணைத்து கட்டுங்கள். பின்பு அந்த இணைப்பை நன்கு பின்னி அது கலையாமல் இருக்க ஹேர் டை போன்றவையை பயன்படுத்தலாம்.

 

5. டச் தேசத்து ஸ்டைல் பின்னல்

டச் தேசத்து ஸ்டைல் பின்னல்

மேலே குறிப்பிட்ட அலங்காரங்களை விட டச் தேசத்து ஸ்டைல் பின்னல் சற்று கடினமானதாக இருக்கலாம். நல்ல விஷயம் என்னவென்றால் இதனை நீங்கள் செய்துவிட்டால் உங்கள் கூந்தல் மிகவும் அழகாக இருக்கும். உங்கள் கூந்தலை மேல் பக்கமாக நன்கு குவித்து, நன்கு வாரி சிக்குகளை எடுத்து மூன்று பகுதியாக பிரித்து நன்கு பின்னுங்கள். ஹேர் டையினால் நன்கு இறுக்கி மீதமிருக்கும் கூந்தலை போனிடைலாக மேலே சுழித்து கட்டுங்கள்.

 

6. ஸ்கேர்ப் போனிடெயில்

ஸ்கேர்ப் போனிடெயில்

உங்கள் சிகை அலங்காரத்தை மேம்படுத்த ஏதேனும் ஒரு ஹேர் அக்செஸ்சரியை நாம் பயன்படுத்தலாம். அதற்கு குளிர்காலம் சரியான நேரமே! நீங்கள் ஒரு அடர்நிற அங்கியை அணிந்திருந்தால் அதற்கு இணையாக உங்கள் போனிடைலை ஒரு ஸ்கேர்ப்பாள் இணைத்து கட்டுங்கள். அது பண்ணிலிருந்து கூந்தலின் இறுதி வரை இருக்க வேண்டும்.

 

7. ஹை ஸ்ப்ளிட் போனி

ஹை ஸ்ப்ளிட் போனி

போனிடைல்கள் அழகானதே! அது என்றும் மாறாத மற்றும் மிக சுலபமான ஹேர்ஸ்டைலாகும். ஆனால் அது எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்க வேண்டுமா? நமக்கு இல்லை என்று தான் தோன்றும். பெல்லா ஹாடிட் தன்னுடைய நீளமான மற்றும் நேர்த்தியான போனிடைல்களுக்காக அனைவராலும் அறியப்படுகிறார், மேலும் இது போன்ற நேர்த்தியை கருவிகளின் துணையின்றி நம்மால் கொண்டு வர முடியாது. ஆனால் இயற்கையாகவே உங்கள் முடி நேர்த்தியாக இருந்தால் இது சாத்தியப்படலாம். முதலில் முடியை நன்கு வாரி சிக்கெடுத்து பின்பு உயர்த்தி போனிடைல் போடுங்கள். பின்பு அந்த போனிடைலை இரு பகுதியாக பிரித்து ஒவ்வொன்றையும் ஒரு டையினால் கட்டுங்கள்.

குளிர்கால ஹேர்ஸ்டைல்களை பற்றி அதிகம் கேட்கப்பட்ட கேள்விகள்:

1.  பின்னல் இந்த குளிர்காலத்திற்கேற்ற சிறந்த ஹேர்ஸ்டைலா?
பதில்:
பின்னல் குளிர்கால சிறந்த ஹேர்ஸ்டைலே... இந்த பின்னல் உங்கள் கூந்தலை குளிர், வறட்சியிலிருந்து பாதுகாத்து சொரசொரப்பு ஏற்படாமல் தடுக்கும். நீங்கள் விதவிதமான பின்னல்களான பிஷ்டைல், டச் அல்லது பிரெஞ்சு  போன்றவையை முயற்சித்து பார்க்கலாம்.

2. குளிர்காலத்திற்கு எது சிறந்த ஹேர்கலர்?
பதில்:
 நிறைய கலர்களை தேர்ந்தெடுக்கலாம். சின்னமோன், கேரமல் க்ராஸ், சாக்லட் ப்ரவுன் ஆகியன...

3. குளிர்காலத்தில் கூந்தலை படிய வைத்திருப்பது எப்படி?
பதில்:
கூந்தல் விறைத்து படியாமல் போவது குளிர்காலத்தில் சாதாரண ஒன்றாகும். இதனை சரிசெய்ய உங்களது கூந்தல் பராமரிப்பு முறைகளில் சில மாற்றங்களை செய்தால் போதுமானது. பிளாஸ்டிக் சீப்பை பயன்படுத்துங்கள், சிறிது சீரமை அப்ளை செய்யுங்கள். சூடான ஆயில் மசாஜும் நல்ல சாய்ஸ்..