இப்போது நாம் யதார்த்தமாக சிந்திப்போம். மழைக்காலம் என்னதான் குதூகலமாகவும், அழகாகவும் இருந்தாலும், அது அதிகளவில் சருமப் பிரச்னகளை கொண்டு வந்து சேர்க்கும். பொலிவற்ற சருமம் மற்றும் வெடிப்புகளால் மட்டும் நீங்கள் பாதிப்படையவில்லை, அதைவிட பல்வேறு சருமப் பிரச்னைகளுக்கு உள்ளாகின்றீர்கள். உங்கள் பாதங்கள் ஈரமாகவும், அடிக்கடி அழுக்காகவும், வியர்த்தும், துர்நாற்றம் மற்றும் சிலசமயம் வீக்கம் போன்ற பாதிப்புகளும் ஏற்படும். இவையனைத்தும் பெருமழையின் சீதனமாகும். இந்த பாதிப்புகளிலிருந்து உங்கள் பாதங்களை பாதுகாத்து அவற்றை எப்போதும் ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க வேண்டுமானால், இத்தகைய மழைக்காலத்தில் பின்வரும் சருமப்பராமரிப்புக் குறிப்புகளை பின்பற்றுங்கள்.

 

உங்கள் பாதங்களை சுத்தம் செய்யவும்

உங்கள் பாதங்களை சுத்தம் செய்யவும்

மழைக்காலத்தில் பாதங்களை மிகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது மிக முக்கியம். துர்நாற்றமடிக்க விடாதீர்கள், அழுக்கு சேர விடாதீர்கள், உங்கள் பாதங்களை தினசரி சுத்தம் செய்யுங்கள், மேலும் நன்கு சுத்தம் செய்யக்கூடிய பொருட்களில் பாதங்களை நன்றாக சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். மேலும், வாரத்திற்கொரு முறை புட் ஸ்க்ரப்பை பயன்படுத்துங்கள்.

 

சரியான பாதணிகளை அணியுங்கள்

சரியான பாதணிகளை அணியுங்கள்

ஸ்னீக்கர்ஸ் மற்றும் ஹீல்ஸ் போன்ற செருப்புகளை அணியாமல், மழைப் பொழிகின்ற சமயத்தில், மழைக்காலத்திற்கேற்ற கம்பூட்ஸ், ரப்பர் சாண்டல் அல்லது ஃப்லிப் ஃப்ளாப் போன்ற செருப்புகளை அணிந்து கொண்டு வெளியில் செல்லுங்கள். அத்தகைய பாதணிகள் தண்ணீரிலிருந்து உங்கள் பாதங்களை பாதுகாப்பதுடன், உங்கள் பாதங்களை ஈரமில்லாமல் உலர்ந்திருக்க உதவும். அதுமட்டுமல்லாமல், வழுக்கலான சாலைகளில் நடக்கும் போது வழுக்கி விடுவதில்லை. அதுவே நமக்கு மிகப் பெரிய வெற்றிதானே.

 

கால் விரல் நகங்களை அவ்வப்போது வெட்டி சீராக வைத்திருங்கள்

கால் விரல் நகங்களை அவ்வப்போது வெட்டி சீராக வைத்திருங்கள்

உங்கள் நகங்கள் உடையக்கூடியதாகவும், பலவீனமானதாகவும் மாறும். மேலும், நீண்ட நேரம் ஈரத்துடன் இருந்தால் உங்கள் நகங்கள் சீக்கிரம் உடைந்து விடும். அதைத் தவிர நீண்ட நகங்களுக்குள் சேறு மற்றும் அழுக்குகள் உட்புகுந்து கொள்ளுவதால் பாக்டீரியாக்கள் பெருகுவதற்கு வாய்ப்புள்ளது. மழைக்காலத்தில் கால் விரல் நகங்களை நன்றாக வெட்ட வேண்டும். மேலும், நகங்களை சிறியதாகவும், சுத்தமாகவும் வைத்திருங்கள்.

 

உங்கள் பாதங்களை எப்போது உலர்ந்தபடியே வைத்திருங்கள்.

உங்கள் பாதங்களை எப்போது உலர்ந்தபடியே வைத்திருங்கள்.

ஈரமாகி நன்றாக வெளிரிப் போன பாதங்களால் தொற்று ஏற்படக் காரணமாகின்றன. மழையில் நன்றாக நனைந்த பிறகு கடைசியில் உங்களுக்கு ஏற்படும் அதிகபட்ச பாதிப்பாகும். வெளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பியவுடன், உங்கள் கால்களை நன்றாகக் கழுவ வேண்டும். உலர்ந்த துணியால் நன்றாகத் துடைக்க வேண்டும். தொற்று ஏற்படாமலிருக்க நன்றாக மாஸ்யரைஸிங் செய்து சருமத்தை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

 

லேவெண்டர் ஆயிலை தடவிக் கொண்டு தூங்கச் செல்லுங்கள்

லேவெண்டர் ஆயிலை தடவிக் கொண்டு தூங்கச் செல்லுங்கள்

எப்போதுமே ஒரு உடலுக்கு மாஸ்யரைஸிங் செய்யக்கூடிய லோஷனுடன் உங்கள் பாதங்கள் மாஸ்யரைஸ் செய்து கொள்ளவும் மற்றும் லேவெண்டர் ஆயிலை பாதங்கள் முழுக்கத் தடவிக் கொண்டபின் இரவு தூங்கச் செல்ல வேண்டும்.