குளிர்கால பாத பராமரிப்பு முறை: உங்கள் பாதங்களை இந்த குளிர்காலத்தில் சந்தோசமாக வைத்திருப்பது எப்படி?

Written by Team BBFeb 22, 2022
குளிர்கால பாத பராமரிப்பு முறை: உங்கள் பாதங்களை இந்த குளிர்காலத்தில் சந்தோசமாக வைத்திருப்பது எப்படி?

உடல் ரீதியாக பனிக்காலம் சற்று அசவுகரியங்களை ஏற்படுத்தலாம். ஏனெனில் நம் சருமம் மற்றும் கைகள் காய்ந்தும் சொரசொரப்புடன் இருக்கும். இதனை சரிசெய்ய தலைமுடிக்கு எண்ணெய் தேய்ப்பது, கைகளுக்கு ஹாண்ட் க்ரீம் தடவுவது, சருமத்திற்கு மாய்ஸ்தரைசர் அப்பளை செய்வது போன்றவற்றில் நாம் ஈடுபடுகையில் நமது பாதங்களை நாம் மறந்துவிடுவோம்.

குளிர்காலத்தில் பெரும்பாலான நேரங்களில் காலணிகள் போன்றவை அணிந்து நம் பாதங்களை மறைத்தாலும், அதற்காக அதனை நாம் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடக்கூடாது. ஏனெனில் வீட்டிற்குள்ளும் வெளியிலும் ஏற்படும் வெப்ப மாறுதல்களால் நாம் கால்கள் உறைந்து, காய்ந்து வெடிப்புகள் ஏற்படும். அது மிகவும் வலி மிகுந்தது. எனவே சரியான குளிர்கால பராமரிப்பு முறைகளை பின்பற்றுவதன் மூலமாக நம் பாதங்களை பளபளப்புடன் மற்றும் மென்மையாகவும் வைத்திருக்கலாம்.

 

ஈரப்பதத்துடன் வைத்திருங்கள்

உங்கள்  காலணிகளை நன்கு உலர்த்துங்கள்

சிறந்த மாய்ஸ்தரைசரை நாளுக்கு இருமுறை பயன்படுத்தி உங்கள் பாதங்களை ஈரப்பதத்துடன் வைத்திருங்கள். அது பாதங்களை சொர சொரப்பாக மற்றும் காய்ந்து போக விடாமல் காக்கும். அப்ளை செய்த சிறிது நேரம் கழித்து காலுறை அல்லது காலணிகளை அணியுங்கள். குளிர்காலத்தில் படுப்பதற்கு முன் கால்களுக்கு மாய்ஸ்தரைசர் அல்லது லோஷனை போடுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

 

தேன் மற்றும் சுடுநீர் சிகிச்சை முறை

உங்கள்  காலணிகளை நன்கு உலர்த்துங்கள்

தேன் அனைத்து விதமான சரும பிரச்னைகளை தீர்க்கும் ஒரு சிறந்த மூலப்பொருளாகும். பாக்டீரியாக்களை அழிக்கும் மற்றும் கிருமிநாசினியாக கருதப்படும் இது ஒரு சிறந்த மாய்ஸ்தரைசரும் கூட. பாதங்களை தேனில் நன்கு முக்கியெடுத்து பின்பு சுடுநீரில் குளிப்பதன் மூலம் நம் கால்களின் வறட்சி நீங்கி நம் கால்கள் மென்மையாகவும் வழவழப்பாகவும் இருக்கும். இந்த சிகிச்சை முறையை வாரம் ஒருமுறை பின்பற்றுவதன் மூலம் நம் பாதங்களை குளிர்காலம் முழுவதும் நாம் பாதுகாக்கலாம்.

 

ஆலிவ் ஆயிலை பயன்படுத்துங்கள்

உங்கள்  காலணிகளை நன்கு உலர்த்துங்கள்

நம் சருமத்தால் எளிதில் உறிஞ்சப்படும் ஆலிவ் ஆயில் நிறைய ஊட்டச்சத்து தன்மைகளைக் கொண்டது. தினசரி ஆலிவ் ஆயிலில் கால்களுக்கு மசாஜ் செய்வதால் நம் கால்கள் ஈரப்பதத்தோடு நல்ல ரத்த ஓட்டத்துடன் இருக்கும். இந்த குளிர்காலத்தில் ஆலிவ் ஆயிலை பயன்படுத்தி உங்கள் கால்களில் ஏற்படும் மாற்றங்களை நீங்களே பாருங்கள்!

 

காலுறைகளை அணியுங்கள்

உங்கள்  காலணிகளை நன்கு உலர்த்துங்கள்

இந்த குளிர்காலத்தில் கதகதப்பாக இருக்க வண்ண வண்ண காலுறைகளை அணிந்து ஒரு நல்ல சாக்லெட்டோடு தங்களுக்கு பிடித்த புத்தகத்துடன் உட்காருவது அனைவருக்குமே பிடித்தமான ஒன்று. காலுறைகள் காற்று மாசிலிருந்து காப்பதோடு நம் பாதங்களை கதகதப்பாகவும் வைத்திருக்கும். நல்ல காற்றோட்டத்திற்கு காட்டன் காலுறைகளை பயன்படுத்துங்கள்.

 

உங்கள் காலணிகளை நன்கு உலர்த்துங்கள்

உங்கள்  காலணிகளை நன்கு உலர்த்துங்கள்

ஈரமான காலணிகள் மற்றும் காலுறைகளை பயன்படுத்துவது நம் கால்களுக்கு நிறைய பிரச்னைகளை ஏற்படுத்தும். ஈரத்தோடு இருக்கும் பொருள்களில் கிருமிகள் தங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம், மேலும் அதனால் தொற்றும் ஏற்படலாம். எனவே நீங்கள் அணியும் முன் உங்கள் காலணிகள் மற்றும் காலுரைகளை நான்கு உலர்த்துங்கள்.

Team BB

Written by

501 views

Shop This Story

Looking for something else