மழைக்காலத்தில் காற்றில் அதிக அளவு ஈரப்பதம் இருப்பதால், பாக்டீரியா மற்றும் தொற்றுநோய்கள் செழித்து வளர அனுமதிக்கிறது, அதனால்தான் மழைக்காலத்தில் பூஞ்சை, வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் மிகவும் சாதரணமாக் வந்து விடுகிறது. குறிப்பாக சென்சிடிவ் சரும வகை சார்ந்தவர்களுக்கு மழைக்காலத்தில் சரும நோய்த்தொற்றுகளை கையாள்வது மிக கடினம்.

யாராக இருந்தாலும் மழையிலிருந்து தப்பிக்க முடியாது, ஆனால் இந்தப் பருவமழையில் பூஞ்சை தொற்றுநோயிலிருந்து தப்பிக்க சில வழிகள் உள்ளன.

 

01. காற்றோட்டமான காலணிகளை அணியுங்கள்

01. காற்றோட்டமான காலணிகளை அணியுங்கள்

உங்கள் கால்களை மூடி மறைக்கும் காலணிகளை மழைக்காலத்தில் மாற்றவும். இல்லையென்றால், அழுக்கு நீர் காலணிகளில் தேங்கி, உங்கள் கால் சருமத்தில் பூஞ்சை தொற்றுநோய்களை உருவாக்கிவிடும். நீங்கள் ஒரு குட்டையில் அடியெடுத்து வைத்தால், சருமத் தொற்று ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க உங்கள் இலக்கை அடைந்தவுடன் உடனடியாக உங்கள் கால்களைக் கழுவவும் அல்லது துடைக்கவும்.

 

02. ஈரமான ஆடைகளை உடனே மாற்றவும்

02. ஈரமான ஆடைகளை உடனே மாற்றவும்

ஈரமான உடைகள், சாக்ஸ் மற்றும் உள்ளாடைகளை விரைவில் மாற்ற வேண்டும். இல்லையென்றால், அவை சருமத்தை உலர வைக்க விடாமல் கடுமையான அரிப்பு ஏற்படக்கூடும், இது பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கும். ஈரமான ஆடைகளை மாற்றி, உங்கள் உடலையும் முகத்தையும் நன்கு சுத்தப்படுத்தி, மோசமான தொற்றுநோய்களைத் தடுக்க புதிய ஆடைகளை அணியுங்கள்.

 

03. மாசு எதிர்க்கக் கூடிய நோய்திர்ப்பு பவுடர் பூசவும்

03. மாசு எதிர்க்கக் கூடிய நோய்திர்ப்பு பவுடர் பூசவும்

மாசு மற்றும் தூசுகளில் பூஞ்சைதொற்று அதிகமாக தங்கியிருக்கும், குளித்தபின்னும், சாக்ஸ் அணிவதற்கு முன்பும், இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன்பும் நோய்திர்ப்பு பவுடர் பயன்படுத்துங்கள். இது சருமப் பகுதியை உலர வைக்கும் மற்றும் பாக்டீரியா பரவுவதை தடுக்கும்.

 

04. அரிப்பு மற்றும் சொரிதலை தவிர்க்கவும்

04. அரிப்பு மற்றும் சொரிதலை தவிர்க்கவும்

உங்களுக்கு அரிப்பு உணர்வு இருந்தால், அந்த பகுதியை சொரிய வேண்டாம். அதற்கு பதிலாக, நீர் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புடன் அந்த பகுதியை நன்கு சுத்தம் செய்யுங்கள். அரிப்பு தொடர்ந்தால், உடனடியாக ஒரு மருத்துவரை சந்தித்து சரியான சிகிச்சையை எடுத்துக்கொள்ளுங்கள்.