சூரியனின் தாக்கத்திலிருந்து சருமத்தை காக்கும் விஷயத்தில் நமக்கு பிரச்சனையே இல்லை. ஆனால் கூந்தலையும் உச்சந் தலையையும் பாதுகாப்பது எப்படி… சருமம் போலவே கூந்தலும் உச்சந் தலையில் உள்ள சருமமும் சூரிய தாக்கத்தினால் பாதிக்கப்படுகிறது. இதனால் கூந்தல் வறண்டு போகும். முடி சுருண்டுகொள்ளும். தலையில் அரிப்பு ஏற்படும். சரிதானே… ஆனால் கூந்தலுக்கான சன் ஸ்கிரீன் எளிதல்ல. இந்தியாவில் அவை கிடைப்பதும் இல்லை. ஆனால் அது முடியாத காரியம் அல்ல. பாதிப்பு ஏற்படுத்தும் யு.வி கதிர்களிலிருந்து பாதுகாப்பதற்கான ஐந்து டிப்ஸ் இதோ உங்களுக்கு…

 

01. கண்டிஷனர் பயன்படுத்துங்கள்

கண்டிஷனர் பயன்படுத்துங்கள்

கூந்தல் வறண்டு போவதையும் சுருள்வதையும் தடுப்பது போக கூந்தலுக்கு ஒரு பாதுகாப்பு வளையமாகவும் கண்டிஷனர் இருக்கும். அதனால்தான் ஹேர் வாஷ் செய்த பிறகு கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். இது உங்கள் கூந்தலுக்கு ஷைன் கொடுக்கும் அலை பாயும் கூந்தலும் கிடைக்கும். ஆண்டு முழுவதும்.

பி.பி பிக்ஸ்: TRESemmé Climate Protection Conditioner

 

02. லீவ் இன் ட்ரீட்மென்ட் பயன்படுத்துங்கள்

02. லீவ் இன் ட்ரீட்மென்ட் பயன்படுத்துங்கள்

சில சமயங்களில் வெறுமனே ஷாம்பூ பயன்படுத்தினால் போதாது. இயற்கையிலேயே உங்கள் கூந்தல் ட்ரை என்றால் வேறு வழியே இல்லை. கூந்தலுக்கு கூடுதல் ஊட்டச் சத்து கொடுக்கும் பொருட்களை பயன்படுத்தியாக வேண்டும். லீவ்-இன் கண்டினஷர் பயன்படுத்தும் போது நீர்ச் சத்தின்மையும் போகும், அது போக யு.வி பாதிப்பிலிருந்து கூடுதல் பாதுகாப்பும் கிடைக்கும்.

பி.பி பிக்ஸ்: TIGI Bed Head Ego Boost Leave-in Conditioner and Split End Mender

 

03. ஏன்டி ஆன்சிடென்ட் அதிகம் கொண்ட உணவு சாப்பிடுங்கள்

03. ஏன்டி ஆன்சிடென்ட் அதிகம் கொண்ட உணவு சாப்பிடுங்கள்

கூந்தல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நல்ல உணவு முக்கியம். ஏன்டி ஆக்ஸிடென்ட்ஸ் அதிகம் கொண்ட பழங்கள் காய்கறிகளை தினசரி டயட்டில் சேர்த்துக்கொள்வது நல்லது. குறிப்பாக அடர்த்தியான நிறம் கொண்ட, பச்சை இலை மற்றும் காய்கறிகள், அந்தந்த சீஸன் பழங்கள், பல வகையான விதைகள், கொட்டைகள் சாப்பிடுவது நல்லது. உள்ளிருந்து வயதாவதன் பாதிப்பை இது குறைக்கும். இதனால் உச்சந்தலையும் கூந்தலும் ஆரோக்கியமாக, அழகாக இருக்கும்.

 

04. தொப்பி அல்லது ஸ்கார்ஃப் அணியுங்கள்

04. தொப்பி அல்லது ஸ்கார்ஃப் அணியுங்கள்

சூடான, ஈரப் பதம் அதிகம் கொண்ட பகுதிகளில், சூரியனி தாக்கம் அதிகம் கொண்ட பகுதிகளில் வசிக்கிறீர்களா… தலையில் தொப்பி அல்லது ஸ்க்ராஃப் அணிவது கூந்தலுக்கும் உச்சந் தலைக்கும் மிகவும் நல்லது. கொளுத்தும் வெய்யிலின் நேரடி தாக்கத்திலிருந்து இது பாதுகாக்கும். இதனால் கூந்தலுக்கும் உச்சந் தலைக்கும் ஏற்படும் பாதிப்பு குறையும்.