மற்ற பருவங்களை போல் இல்லாமல் குளிர்காலத்தில் சரும பராமரிப்பை எதிர்கொள்வது மிகவும் அத்தியாவசியமானதாகும். உங்கள் சருமத்திற்கு நீர்ச்சத்தை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு அதிகமாக்க வேண்டும். கடுமையான வானிலை, குளிர்ந்தக் காற்று மற்றும் காற்றில் ஈரப்பதமின்மை போன்றவற்றிலிருந்து சக்தி வாய்ந்த லிபிட் பாதுகாப்பு சுவர் உங்கள் சருமத்தை காப்பாற்றுகின்றது. குளிர்காலத்தில் காற்றினால் உங்களுடைய சருமம் தொடர்ந்து நீர்ச்சத்தை இழக்கிறது. இதனால், உங்களுடைய சருமத்தில் வறட்சி, சுருக்கம் ஏற்படலாம். நமைச்சலும், தடிப்புகளும்கூட ஏற்படலாம். அதிகமாக க்ரீம்களை பூசிக் கொள்வதால், நீங்கள் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணமுடியாது. குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சியை தடுப்பதற்கு நீங்கள் முழுமையான ஸ்கின்கேர் வழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

 

01. ஒரு ஹைட்ரேட்டிங் க்ளென்சர்

ஒரு ஹைட்ரேட்டிங் க்ளென்சர்

சுத்தம் செய்யும்போது, உங்களுடைய சருமத்திலுள்ள இயற்கையான எண்ணெய் சத்தும் போய்விடுகின்றது. எனவே, உங்கள் முகத்தில் அதிக வறட்சி ஏற்படுவதை தடுப்பதற்கு, ஒரு மிருதுவான, மென்மையான க்ளென்ஸர் அவசியம் தேவை. சுத்தம் செய்த பின்பு உங்கள் சருமத்தில் ஏற்படும் இறுக்கமும், வறட்சியும் ஏற்படாதவாறு தடுக்க க்ளிஸரின், விட்டமின் இ, விட்டமின் சி மற்றும் விட்டமின் இ கொண்ட பொருட்களை பயன்படுத்தலாம்.

பி.பி. பிக்ஸ்: Simple Kind To Skin Moisturising Facial Wash

 

02. ஒரு ஊட்டமளிக்கும் சீரம்

ஒரு ஊட்டமளிக்கும் சீரம்

சீரம்கள் ஒரு உன்னதமான தயாரிப்பாகும். ஏனெனில் அவற்றில் சருமத்தை பாதுகாக்கக் கூடிய பொருட்கள் அடங்கியுள்ளன. அவை, க்ரீம்கள் மற்றும் லோஷன்கள் விட உங்கள் சருமத்திற்குள் மிகவும் சிறப்பாக ஊடுருவிச் செல்லக் கூடியவை. எண்ணெய் வகையான சீரம்கள் குளிர்காலத்தில் சருமத்தில் ஏற்படும் வறட்சிக்கு எதிராக மிகவும் சிறப்பாக செயல்படக் கூடியவை.

பி.பி. பிக்ஸ்: Dermalogica Phyto Replenishing Oil

 

03. ஒரு சுகமளிக்கும் மாய்சுரைஸர்

ஒரு சுகமளிக்கும் மாய்சுரைஸர்

குளிர்காலத்தின் கடுமையை எதிர்த்து உங்கள் சருமத்தை பாதுகாப்பதற்கு மாய்சுரைஸர் ஒரு சிறந்த பாதுகாப்பு அரணாகும். வறண்ட, நமைச்சல் எடுக்கும் சருமத்திற்கு சுகமளிக்க உதவ எமோலியன்ட் தயாரிப்புகளை பயன்படுத்துவதை உறுதி செய்யவும். வெளியில் அதிகமாக குளிர் எடுக்கும்போது பொதுவாக சருமத்தை பாதிக்கும் நமைச்சல், சிவத்தல் மற்றும் வெடிப்பு போன்ற பிரச்னைகளுக்கு எமோலியண்ட்ஸ் நல்ல சிகிச்சையளிக்கும்.

பி.பி. பிக்ஸ்: Pond’s moisturising cold cream

 

04. சூரியஒளி பாதுகாப்பு (எஸ்.பி.எஃப்)

சூரியஒளி பாதுகாப்பு (எஸ்.பி.எஃப்)

மற்ற பருவகாலங்களைவிட குளிர்காலத்தில் உங்களுடைய சருமம் சூரியஒளியிலினால் சேதமடைவதற்கான வாய்ப்புள்ளது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? பொலிவை மங்கச் செய்யும் தவறான எஸ்.பி.எஃப் தயாரிப்புகளை உபயோகிப்பதன் மூலம் சருமங்கள் வறண்டு அரிப்பு, தேமல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். எஸ்.பி.எஃப்-ஐ ஆதாரமாக கொண்டு தயாரிக்கப்பட்ட லோஷன்களை பயன்படுத்தி, குளிர்காலத்தில் உங்கள் சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்து அளவை உயர்த்திக் கொள்ளவும்.

பி.பி. பிக்ஸ்: Lakme Peach Milk Moisturiser SPF 24 Sunscreen Lotion

 

05. ஒரு மல்டி-பர்பஸ் லிப் பாம்

ரு மல்டி-பர்பஸ் லிப் பாம்

மல்டி-பர்பஸ் என்று நாம் பேசும்போது, சூரியஒளி தாக்குதலையும் எதிர்த்து போராடக்கூடிய ஊட்டச்சத்து தரக்கூடிய லிப் பாம் என்று புரிந்துகொள்ள வேண்டும். உதடுகளை சீராகவும், இரத்த ஓட்டத்துடன் வைத்திருக்கவும், நீண்ட நாட்கள் நீர்ச்சத்தை வழங்கக் கூடிய கலர் பூசப்பட்ட லிப் பாம்கள் மிகவும் சிறந்தது. மேலும், குறைந்தது 15 நாட்கள் ஒரு எஸ்.பி.எஃப்-ஐ பயன்படுத்தும்போது வேலை சுலபமாக முடிந்துவிடும்.

பி.பி. பிக்ஸ்: Lakme Lip Love Gelato Collection

 

06. ஒரு மென்மையாக்கும் ஹேண்ட் க்ரீம்

ஒரு மென்மையாக்கும் ஹேண்ட் க்ரீம்

உங்களுடைய சருமபாதுகாப்புக்கான வழக்கங்களில் அதிகம் கவனிக்கத்தவற விடுவது உங்களுடைய கைகளாகும். ஏனெனில், நாம் முகத்திற்கு பயன்படுத்தும் போதெல்லாம், கைகளுக்குத் தேவையான பொருட்கள் போதுமானளவு பயன்படுத்துகிறோம் என்ற எண்ணம் இருந்து கொண்டிருக்கிறோம். ஆனால், தொடர்ந்து கைகளை கழுவுகிறோம், கைகளினால் தரையை தொடுகிறோம். அதனால், சருமத்திற்கு வறட்சியையும், இறுக்கத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, குளிர்காலங்களில் உங்கள் மேஜைக்கருகில் கைகளில் தடவிக் கொள்வதற்காக நல்ல ஹேண்ட் க்ரீமை வைத்துக் கொள்ளவும்.

பி.பி. பிக்ஸ்: Dove DermaSpa Cashmere Comfort Hand Cream