சுட்டெரிக்கும் வெப்பத்தினால் ஏற்பட்ட புழுக்கத்திலிருந்து கொஞ்சம் விடுதலை கிடைத்துள்ளது. ஆனால், வானிலை மாற்றம் ஏற்படும் போது, நம்முடைய சருமத்திற்கு புதிய வகையானப் பிரச்னைகளைகொண்டு வரும். மழைக்காலத்தில் நம்முடைய எதிர்ப்பு சக்தி, சருமம் இரண்டுமே உச்சகட்டப் பாதிப்பை எட்டும். மிகச் சிறந்த வழியை உங்களுக்குக் காட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, மழைக்காலத்தில் அழகுத் தொடர்பாக பொதுவாக ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி பீ ப்யூட்டிபுல் வாசகர்களிடம் கேட்டோம். அவர்கள் பின்வரும் கேள்விகளை எங்களிடம் கேட்டனர்.
- @kamakshee: (காமாட்சி): என்னுடைய உச்சந்தலை வெகு சீக்கிரம் எண்ணெய் படிந்து விடுகிறது. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
- @iqra.memon1: (இக்ரா மேமன்) - மழைக்காலம் வந்தவுடன் என்னுடைய சருமம் கருத்து விடுவதோடு, மிகவும் பொலிவற்றும் தோன்றத் தொடங்கவிடுகின்றது.
- @tanvi_8313: (தன்வீ) - சுருண்டு சிக்கு முடியாக மாறிவிடுகின்றது.
- @intihaz: (இன்திஹாஸ்) - என் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் வடிகின்றது. அதனால், சரும விரிசல்கள் ஏற்படுகின்றது.
@kamakshee: (காமாட்சி): என்னுடைய உச்சந்தலை வெகு சீக்கிரம் எண்ணெய் படிந்து விடுகிறது. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

பிபீ: எண்ணெய் வடியும் தலைமுடிக்கும், உச்சந்தலைக்கும் ஒரு மரணப் போராட்டத்தை உண்டாக்கக் கூடியது இந்த மழைக்காலமாகும். ஏனெனில், அதிகமான அழுக்குகளையும் ஈர்ப்பதாலும், ஈரப்பதம் அதிகமுள்ள வானிலையின் காரணமாக மோசமான நிலையையும் உண்டாக்கும். உயர்தரமான கண்டிஷர்களை தலைமுடி முழுவதும் தடவுவதைத் தவிர்த்துவிட்டு, அவற்றை மயிர்க்கால்களில் மட்டும் தடவவும். தினமும் தலைக்கு குளிப்பதனால் உச்சந்தலையில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பிசிபிசுப்பை போக்குவதற்கு ஒரு ட்ரை ஷேம்பூவை பயன்படுத்தவும்.
@iqra.memon1: (இக்ரா மேமன்) - மழைக்காலம் வந்தவுடன் என்னுடைய சருமம் கருத்து விடுவதோடு, மிகவும் பொலிவற்றும் தோன்றத் தொடங்கவிடுகின்றது.

பிபீ: இருண்ட வானிலையானது உங்கள் சருமத்தின் இயற்கையானப் பொலிவை மங்கச் செய்து விடும். ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல் ஈரப்பதம் அதகரித்துவிட்டால், உங்களுடைய சருமம் கருத்து போவதும், பொலிவற்றும் தோற்றமளிக்கும். ஆகையால், இறந்த செல்களை அகற்றுவதற்கு St. Ives Energizing Coconut & Coffee Scrub போன்ற மிருதுவான எக்ஸ்ஃபாலியேட்டர்களை பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம். உங்களுடையப் பழையப் பொலிவைப் பெற க்ரிட்க் ஆஸிட் உயர்தரமான ஆண்டிஆக்ஸிடெண்ட் நைட் க்ரீம்களையும் பயன்படுத்தலாம்.
@tanvi_8313: (தன்வீ) - சுருண்டு சிக்கு முடியாக மாறிவிடுகின்றது.

பிபீ: முடி சுருண்டு சிக்காகி விடுவது என்பது ஒரு மழைக்காலத்தில் பொதுவான முடிப் பிரச்னையாகும். உங்களால் முடி சுருண்டு சிக்காகுவதை முழுமையாக தவிர்க்க முடியாவிட்டாலும், இந்தச் சிக்கை கட்டாயமாக கட்டுப்படுத்த முடியும். இந்த முடி சுருண்டு சிக்காவதைத் தடுக்க வாரத்திற்கு ஒருமுறை the Toni&Guy Damaged Repair Reconstruction Hair Mask ஐ போன்ற ஆழ்ந்த கண்டிஷனிங்கை பயன்படுத்துங்கள். ஈரமானத் தலைமுடியை கடினமாக டவலால் அழுத்தி துடைப்பதற்குப் பதிலாக காட்டன் துணியினால் நீரை அழுத்தி ஒற்றி உறிஞ்சி எடுங்கள்.
@intihaz: (இன்திஹாஸ்) - என் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் வடிகின்றது. அதனால், சரும விரிசல்கள் ஏற்படுகின்றது.

பிபீ: முகப்பரு மற்றும் சரும் வெடிப்புகளுக்கு காரணமான அதிக அழுக்கு மற்றும் பாக்டீரியாக்களை எளிதாக ஈர்க்கக் கூடிய எண்ணெய் சுரத்தல், பிசுபிசுத்தல் போன்றவைகள் மழைக்காலத்தில் உங்கள் சருமத்தில் நன்றாகப் படிந்துவிடும். clay based face masks. பயன்படுத்துவதினால் அதிகப்படியான ஆயில் சுரக்கக் கூடிய பாதிப்பை எதிர்கொள்வதற்கான ஒரு எளிமையான சிறந்த வழியாகும். அதிகப்படியான எண்ணெய் சுரப்பதை மொத்தமாக நிறுத்துவதறகு, நல்ல பயன்தரக் கூடிய ஒரு சக்திவாய்ந்த மற்றும் எளிமை கிடைக்கக் கூடிய ஃபுல்லர்ஸ் எர்த் பிரபலமானவற்றில் ஒன்றாகும்
Written by Kayal Thanigasalam on Jul 29, 2021
Author at BeBeautiful.