பருவ மழை முழு வேகத்தில் அடிக்கிறது. இந்தப் பருவத்தோடு வரும் சரும பிரச்சனைகள் பற்றி புலம்பாமல் இருக்க முடியாது. அதிக ஈரப் பதம், அழுக்கு படிந்த மழை நீர் எல்லாம் சேர்ந்து அரிப்பு உள்ளிட்ட தோல் பிரச்சனைகளை உண்டாக்கும். எல்லாம் சரி. இந்தப் பருவத்தில் சருமத்தை பாதுகாப்பது எப்படி. இந்த பருவத்திற்கேற்ப ஸ்கின்கேர் பராமரிப்பையும் மாற்ற வேண்டியதுதான்.
- ஸ்டெப்#1: முகத்தை க்ளென்ஸ் செய்யுங்கள்
- ஸ்டெப்#2: வாரம் ஒரு முறை எக்ஸ்ஃபாலியேட் செய்யுங்கள்
- ஸ்டெப்#3: டோனர் பயன்படுத்துங்கள்
- ஸ்டெப்#4: களங்கங்களை போக்கும் சிகிச்சை
- ஸ்டெப்#5: சரியான மாய்ஸ்சுரைஸர்
- ஸ்டெப்#6: சூரியனிலிருந்து பாதுகாப்பு
ஸ்டெப்#1: முகத்தை க்ளென்ஸ் செய்யுங்கள்

சருமத்தை எல்லா நேரத்திலும் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். குறிப்பாக பருவ மழைக் காலங்களில். ஏனென்றால் அந்த பருவத்தில் காற்றில் இருக்கும் அதிக ஈரப் பதமும் அழுக்கான மழை நீரும் சுத்தம் செய்யப்பட்டாக வேண்டும். குறிப்பாக Pears Pure And Gentle Daily Cleansing Facewash. போன்ற மென்மையான ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். இதில் 98% க்ளிசரின் உள்ளது. சோப் சேர்க்கப்படவில்லை. மிகவும் மென்மையாகவும் ஆழமாகவும் சருமத்தை சுத்தம் செய்யக்கூடியது இது. சருமத்திற்கு நீர்ச் சத்தும் கொடுப்பதால் ஸ்கின் மென்மையாக, வளவளப்பாக இருக்கும்.
ஸ்டெப்#2: வாரம் ஒரு முறை எக்ஸ்ஃபாலியேட் செய்யுங்கள்

சரும் செதில் செதிலாக மாறுவது, ஆயில் அதிகம் சேர்வது ஆகியவை பருவ மழைக் காலத்தில் சகஜமாக ஏற்படும் பிரச்சனை. அதனால் வாரத்தில் 1-2 முறை எக்ஸ்ஃபாலியேட் செய்ய வேண்டும். Simple Daily Skin Detox Clear Pore Facial Scrub போன்ற மென்மையான ஃபேஸ் ஸ்கிரப் பயன்படுத்தி எக்ஸ்ஃபாலியேட் செய்வது சிறந்தது. தைம், ஜிங், விட்ச் ஹேசல், பேம்பூ எக்ஸ்ஃபாலியேட்டர் போன்ற சருமத்தை நேசிக்கும் உட்பொருட்கள் இதில் இருப்பதால் சருமம் ஆழமாக சுத்தமாகும். சருமத்தில் உள்ள மாறுபட்ட நிறம் சீராகும். மோசமான வேதிப் பொருட்கள், சாலிசிலிக் அமிலம், பாராபென், ஆல்கஹால் இதில் சேர்க்கப்படவில்லை என்பதால் எல்லா வகை சருமத்திற்கும் இது ஏற்றது.
ஸ்டெப்#3: டோனர் பயன்படுத்துங்கள்

சருமத்தின் துளைகள் பெரிதாகவோ, திறந்தோ இருந்தால் பருவ மழைக் காலத்தில் பிரச்சனைதான். அதனால் ஃபேஸ் வாஷ் செய்த பிறகு டோனர் பயன்படுத்த மறக்காதீர்கள். Lakmé 9to5 Moist Matte Mattifying Face Toner பயன்படுத்திப் பார்க்கலாம். க்ரீன் டீ, ஹேசல் சாறு கொண்டிருப்பதால் இது சருமத்தால் வேகமாக உறிஞ்சப்படும். சருமம் இறுகுவதால் துளைகள் அடைபடும். இதனால் எண்ணெய் பிசுபிசுப்பில்லாத சருமம் கிடைக்கும்.
ஸ்டெப்#4: களங்கங்களை போக்கும் சிகிச்சை

பருவ மழைக்காலத்தில் கொழுப்புத் திரவத்தை சுரக்கும் சுரப்பி பல மடங்கு வேலை செய்யும். அதனால்தான் பருவ மழைக் காலத்தில் சருமத்தைப் பாதுகாக்க மெனக்கெட வேண்டியிருக்கிறது Simple’s Daily Skin Detox SOS Clearing Booster பயன்படுத்திப் பாருங்கள். சாலிசிலிக் அமிலம், ஆல்கஹால், பாராபென், பேத்லெட்ஸ் இதில் சேர்க்கப்படவில்லை. சருமத்தில் சிவப்பு சிவப்பாக ஏற்படுவதையும் களங்கம் தெரிவதையும் இது தடுக்கும். அரிப்பையும் குறைக்கும். சருமத்தை தூய்மைப்படுத்துவதோடு ஃபிரெஷ்ஷாகவும் தெரிய வைக்கும். மாய்ஸ்சுரைஸர் பயன்படுத்திய பிறகு டி-ஜோன் பகுதியில் சிறிய அளவில் பயன்படுத்த வேண்டும்.
ஸ்டெப்#5: சரியான மாய்ஸ்சுரைஸர்

மழைக் காலத்தில் மாய்ஸ்சுரைஸர் நிறுத்திவிட வேண்டும் என நினைக்கிறீர்களா. அங்குதான் தவறு செய்கிறீர்கள். மாய்ஸ்சுரைஸ் செய்யாவிட்டால் கொழுப்புச் சுரப்பி இன்னும் வேகமாக வேலை செய்யும். அதிக ஆயில் சுரக்கும். சருமத்தில் நீர்ச் சத்து குறையும். Pond’s Light Moisturiser Non-Oily Fresh Feel With Vitamin E + Glycerine போன்ற லைட் வெயிட் மாய்ஸ்சுரைஸர் உங்களது சருமத்தை பிசுபிசுப்பு இல்லாமலே ஈரப் பதமாக வைத்திருக்கும்.
ஸ்டெப்#6: சூரியனிலிருந்து பாதுகாப்பு

மழைக் காலத்தில் சூரியன் வெளியே தெரியவில்லை என்பதாலேயே சன்ஸ்கிரீன் தேவை இல்லை என்று கருதிவிட முடியாது. அதிக எஸ்.பி.எஃப் கொண்ட Lakmé Sun Expert Tinted Sunscreen with SPF 50 சன் ஸ்கிரீன் நல்ல ஆப்ஷன். வெளியே கிளம்புவதற்கு 30 நிமிடம் முன்பாக பயன்படுத்தலாம். கெடுதல் விளைவிக்கும் சூரியக் கதிர்களை 97% வரை தடுக்கக்கூடிய இந்த சன் ஸ்கிரீன் சருமத்தை நேச்சரலாகவும் வைத்திருக்கும்.
Written by Kayal Thanigasalam on Sep 17, 2021
Author at BeBeautiful.