பருவ மழைக் காலத்துடன் நம்முடைய உறவு கலவையானது. ரசிக்கும் தருணங்களும் உண்டு, வெறுத்த தருணங்களும் உண்டு. எல்லாம் சரி. ஆனால் அரிப்பு ஏற்படுத்தும் அந்த ஃபங்கஸ் தொற்றை மட்டும் நம்மால் வெறுக்காமல் இருக்க முடியாது. ஈரப் பதம் அதிகம் இருப்பது பாக்டீரியாக்கள் செழித்து வளர சரியான சூழல். ஆனால் இதை சரி செய்ய ஒரு அற்புதமான தீர்வு உள்ளது. அதுதான் டீ ட்ரீ ஆயில்.
பாரம்பரியமாகவே இதை ஏன்டி-செப்டிக் மருந்தாக, ஃபங்கஸ் எதிர்ப்பு மருந்தாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். உடம்பு முழுவதும் உள்ள இன்ஃபெக்ஷன்களை போக்க இது உதவுகிறது. டீ ட்ரீ ஆயிலில் உள்ள நல்ல கெமிக்கல்ஸ் பாக்டீரியாக்களைக் கொல்ல உதவுகிறது. இதனால் சருமத்தில் ஏற்படும் எதிர்வினைகள் குறையும். இதோ டிப்ஸ்.
- 01. சருமத்திற்கு இதமளிக்கும்
- 02. கூந்தலில் உள்ள டான்ட்ரஃப், எண்ணெய்யை கட்டுப்படுத்த உதவும்
- 03. நல்ல மவுத்வாஷ்
- 04. நகத்தில் ஏற்படும் ஃபங்கஸ் தொற்றுக்கும் தீர்வு
- 05. சுரப்பிக் கட்டிகளுக்கும் நல்ல தீர்வு
01. சருமத்திற்கு இதமளிக்கும்

பெரும்பாலான ஃபங்கஸ் தொற்றுக்களுக்கு தீர்வு தரும் டீ ட்ரீ ஆயில், உடனடியாகவும் பலன் கொடுக்கத் துவங்கும். எங்களின் பரிந்துரை: இது ஒரு நல்ல பாடி வாஷ். Love Beauty & Planet Daily Detox Body Wash with Tea Tree and Vetiver Aroma பயன்படுத்திப் பாருங்கள். வேகன் தயாரிப்புப் பொருளான இதில் தீங்கு ஏற்படுத்துபவை இல்லை. டீடாக்ஸ் செய்வதற்கும் மென்மையாக சருமத்தை சுத்தம் செய்வதற்கும் இது பயன்படும். வெட்டிவேர், சிட்ரஸின் அற்புத நறுமணம் கூடுதல் ப்ளஸ். ஃபிரெஷ்ஷாக அறுவடை செய்யப்பட்டு, நன்று ப்ராசஸ் செய்யப்பட்ட உயர் தரமான பொருள் இது. அதனால், ஃபங்கஸ் தொற்றுக்களுக்கு எளிதில் குட்பை சொல்லிவிடலாம்.
02. கூந்தலில் உள்ள டான்ட்ரஃப், எண்ணெய்யை கட்டுப்படுத்த உதவும்

பருவ மழைக் காலம் ஒன்று தலையை பிசிபிசுப்பாக்கலாம். அல்லது மிகவும் வறண்டு போகச் செய்யலாம். இதனால் டான்ட்ரஃப் ஏற்படும். இந்த இரண்டு நேர் எதிர் பாதிப்புகளுக்கும் டீ ட்ரீ ஆயில் நல்ல பலன் கொடுக்கும். டான்ட்ரஃப், பிசுபிசுப்பு, ஏன் அரிப்பையும்கூட நீக்குவதில் டீ ட்ரீ ஆயில் நல்ல பன் கொடுக்கும். அதில் ஏராளமான சாய்ஸ் இருக்கிறதே, அதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று கேட்கிறீர்களா… Love Beauty & Planet Tea Tree and Vetiver Aroma Radical Refresher Shampoo and Conditioner ஒரு நல்ல சாய்ஸ். அறநெறிகளுக்கு உட்பட்டு சேகரிக்கப்பட்ட வெட்டிவேர், இயற்கையான டீ ட்ரீ ஆயில் கொண்டு தயாரிக்கப்பட்டது இது. புத்துணர்வு தரும் இந்த ஷாம்பூ-கண்டிஷனர் ஒரு காம்பினேஷன். பருவ மழைக் காலத்தின் எல்லா பிரச்சனைகளுக்கும் இது தீர்வு கொடுக்கும்.
03. நல்ல மவுத்வாஷ்

மவுத் வாஷ் என்றால் இரண்டு விதமாகப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். சிலருக்கு அதன் மீது அவ்வளவு காதல். சிலர் அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள். ஆனால் கெமிக்கல்ஸ் கலந்த மவுத் வாஷ் நம்பத்தகுந்தது அல்ல. பல் சொத்தை, துர்நாற்றம் ஏற்படுத்தும் கிருமிகளைக் கொல்லக்கூடியது டீ ட்ரீ ஆயில். மவுத் வாஷ் பொருட்களில் க்ளோர்ஹெக்ஸிடின் பயன்படுத்தப்படும். அதைவிட சிறந்த பலன் தரக்கூடியது இது. முயற்சி செய்து பார்க்க விரும்புகிறீர்களா.. கெமிக்கல் பொருட்கள் சேர்க்காத மவுத் வாஷ் நீங்களே தயார் செய்யலாம். மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில் ஒரு சொட்டு டீ ட்ரீ ஆயில் சேர்க்கவும். நன்கு கலக்கவும். நன்கு வாயில் கொப்பளிக்கவும்.
04. நகத்தில் ஏற்படும் ஃபங்கஸ் தொற்றுக்கும் தீர்வு

நகத்தில் ஃபங்கல் தொற்று ஏற்பட்டால் சர்ஜரி செய்ய ஓடுவீர்களா என்ன… அதை குணப்படுத்த நல்ல மருந்துகள் உள்ளன. இயற்கையாகவே சரி செய்ய வேண்டும் என விரும்புகிற டைப் என்றால் டீ ட்ரீ ஆயில்தான் தீர்வு. அதை சில சொட்டு விடவும். அதோடு தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். பாதிக்கப்பட்ட இடங்களில் பயன்படுத்தவும். சீக்கிரமே குணமாகும்.
05. சுரப்பிக் கட்டிகளுக்கும் நல்ல தீர்வு

சுரப்பிக் கட்டி என்றாலே பலருக்கு பயம்தான். எல்லாவிதமான ட்ரீட்மென்ட் பயன்படுத்திப் பார்த்தும் பயனில்லை என்கிறீர்களா… Dermalogica Breakout Clearing Foaming Wash ஃபேஸ் வாஷ் நல்ல பலன் தரும். இது அத்தனைவிதமான சுரப்பிக் கட்டிகளுக்கும் தீர்வு தரும். இதில் உள்ள சாலிசிலிக் ஆசிட் சரும துளைகளுக்குள் ஆழமாக ஊடுருவி இறந்த செல்களை நீக்கும், அழுக்குகளை போக்கும், சரும அடைப்புகள் நீங்கும். டீ ட்ரீ ஆயில் உள்ள எட்டு மூலிகைகள் இதில் உள்ளன. அரிப்பு ஏற்படும் சருமத்திற்கு இதம் தரக்கூடியது இது. சுரப்பிக் கட்டிகளுக்கு குட் பை சொல்ல இது ஒரு நல்ல சாய்ஸ்.
Written by Kayal Thanigasalam on Aug 28, 2021
Author at BeBeautiful.