பருவங்கள் மாறுபடலாம், ஆனால், நம்முடைய சருமப் பராமரிப்பு வழக்கங்களில் மீதுள்ள நம்பிக்கை எப்போதும் போல் அப்படியே இருக்க வேண்டும். இருப்பினும், மழைக்காலங்களில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால், வருடம் முழுக்க நாம் பின்பற்றும் சருமப் பராமரிப்பு வழக்கங்களை ஒரேமாதிரி நிலையாகப் பராமரிப்பது மிகவும் கடினமானதாகும். அது முழுக்க சரிதான். ஒருவருடைய சருமப் பராமரிப்பு வழக்கங்களில் சிறிய மாற்றம் செய்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல, ஆனால், அது உண்மையாக இருக்க வேண்டும். சருமத் துவாரங்களில் அழுக்குகள் சேர்வதை தடுப்பதற்கு, நடைமுறைக்கேற்றபடி ஏதாவது செய்தாக வேண்டும். உங்களுடைய சருமம் வறண்ட அல்லது எண்ணெய், மிருதுவானது அல்லது சாதாரணமானது என்று எந்தவகையாக இருந்தாலும், உங்கள் சருமத்தைப் நன்றாக பராமரிப்பதற்கு ஒரு சில வழிகள் உள்ளது, அதற்கு நீங்கள் ஒரு சில சிறு தவறுகள் செய்வதை தவிர்த்தாலே போதுமானது. பருவகாலத்திற்கேற்ற சருமப் பராமரிப்பு வழக்கங்களை மாற்றுவதற்கு தயாராக இருங்கள். மழைக்காலங்களில் முற்றிலும் தவிர்க்க வேண்டிய சில சருமப் பராமரிப்பு தவறுகளைப் பற்றி இப்போது படித்து தெரிந்து கொள்ளுங்கள்

 

தவறு 01: அதிகப்படியாக சுத்தம் செய்தல்

தவறு 01: அதிகப்படியாக சுத்தம் செய்தல்

ஆமாம், மழைக்காலங்களில் உங்களின் சருமம் பிசுபிசுப்பாகவும், எண்ணெய்ப பசையுடன் இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஈரப்பத்ததின் அளவு அதிகரிக்கின்ற காரணத்தினால் இவ்வாறு ஏற்படுகின்றது. அதை சரிசெய்வதற்காக மீண்டும் மீண்டும் முகத்தை கழுவும் உங்களுடைய இயல்பான வழக்கம் அதற்கான தீர்வாகாது. அடிக்கடி முகத்தை கழுவும் போது முகத்திலுள்ள இயற்கையான எண்ணெய் சத்து போய் வறட்சி ஏற்படும். அப்போது வறட்சியை சமன் செய்வதற்காக உங்களுடைய சருமம் அதிகமான எண்ணெய்யை உற்பத்தி செய்யும். இது மிகவும் மோசமான நிலையை உருவாக்கும். அதற்கு பதிலாக, ஜெல்லை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட Lakmé Blush & Glow Lemon Freshness Gel Face Wash னால் ஒரு நாளைக்கு இரண்டு முறை முகத்தை கழுவினால் போதுமானது. மென்மையான ஸ்க்ரப்பிங் பீட்ஸ்ஸூடன் கூடிய எலுமிச்சை மற்றும் ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்கள் இதில் அடங்கியுள்ளதால், அழுக்குகள் மற்றும் அசுத்தங்களை நீக்கி, . நாள் முழுவதும் புத்துணர்ச்சியைத் தரும்.

 

தவறு 02 : ஸன்ஸ்க்ரீன் போட்டுக் கொள்ளாமலிருத்தல்

தவறு 02 : ஸன்ஸ்க்ரீன் போட்டுக் கொள்ளாமலிருத்தல்

மழையோ, வெய்யிலோ எந்த பருவகாலமானாலும், ஸன்ஸ்க்ரீன் உங்கள் கையிருப்பில் எப்போதுமே வைத்திருக்க வேண்டும் என்பதை நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டும். ஒரு மேகமூட்டமாக இருக்கும் நாட்களில் கூட, சூரியனின் கதிர்கள் உங்கள் சருமத்தை சேதப்படுத்தும், எனவே நீங்கள் ஏற்கனவே சன்ஸ்கிரீன் பயன்படுத்தவில்லையென்றால், அதைத் தொடர்ந்து பயன்படுத்தத் தொடங்குங்கள். Lakmé Sun Expert SPF 50 PA+++ Ultra Matte Lotion Sunscreen, ஐ பயன்படுத்தவும். இது சூரியக் கதிர்கள் விளைவிக்கும் 97% பாதிப்புகளை தடுக்கிறது, அதே நேரத்தில் மென்மையாகவும், பிசுபிசுப்பு ஏற்படாமலும் காக்கின்றது.

 

தவறு 03 : போதுமானளவு ஹைட்ரேட் செய்யாதிருத்தல்

தவறு 03 : போதுமானளவு ஹைட்ரேட் செய்யாதிருத்தல்

ஒரு வேளை நீங்கள் இதை செய்ய தவறவிட்டிருந்தீர்களென்றால் தெரிந்து கொள்ளுங்கள், சருமப் பராமரிப்புக்கு தண்ணீர் மிகச் சிறந்த நண்பனாகும். வெளியில் மழை பெய்து கொண்டிருக்கும் போது வெப்பநிலை சிறிது குறைந்து. உங்களுக்கு நீர் அருந்த வேண்டாம் என்ற குழப்பமான எண்ணத்தை உருவாக்கும். அதற்காக நீர் அருந்தாமல் இருந்தாமல் இருப்பதற்கான காரணமாக அது அமையக் கூடாது. எனவே, நன்றாக சாப்பிடுங்கள், நன்றாக நீர் அருந்துங்கள், நீண்ட நாள் இதற்காகவே உங்கள் சருமம் நன்றி சொல்லிக் கொண்டே இருக்கும்.

 

தவறு 04: இறந்த செல்களை சருமத்திலிருந்து நீக்குதல்

தவறு 04: இறந்த செல்களை சருமத்திலிருந்து நீக்குதல்

மழைக்காலத்தில் பொதுவாக சருமத்தில் மேடு பள்ளங்கள் மற்றும் பிளவுகள் ஏற்பட்டு எரிச்சலடையச் செய்யும். அதற்காக நாம் சருமத் துவாரங்கள் அடைந்திருப்பதை குறைக்கூறிக் கொண்டிருப்போம். முகப்பரு, பருக்கள் மற்றும் நீங்கள் நினைப்பது போல் திடீரென்று தோன்றக்கூடிய பயங்கரமான பாதிப்புகள் இவையனைத்திற்கும் மழைக்காலத்தில் அதிகப்படியாக எண்ணெய் சுரப்பதேயாகும். ஆனால் இறந்த செல்களை நீக்குதுவது தான் அவற்றை தவிர்க்கலாம். வாரத்திற்கு இருமுறை இறந்த செல்களை நீக்குவதற்கு St. Ives Fresh Skin Apricot Scrub ஐ தவறாமல் பயன்படுத்தவும். புத்துணர்ச்சியூட்டும் இத்தகைய ஸ்க்ரப்களுடன் பாதாம் மற்றும் வால்ந்ட பருப்புகளும் சேர்ந்து சருமத்திற்கு ஆழ்ந்த சுத்தத்தை தருகிறது, மேலும்,மழைக்காலத்தில் நீண்ட நேரம் உங்கள் சருமத்தை மென்மையாகவும் உறுதியாகவும் வைத்திருக்க உறுதியளிக்கிறது.

 

தவறு 05: மாஸ்யரைஸிங் செய்யாதிருத்தல்

தவறு 05: மாஸ்யரைஸிங் செய்யாதிருத்தல்

மாஸ்யரைஸிங் உங்களின் எதிரி போல் உங்களுத் தோன்றலாம், ஆனால், அது உங்களுக்காக வேலை செய்கிறது என்று நாங்கள் கூறுவதை கொஞ்சம் நம்புங்கள் . உங்கள் சருமம் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதால் இருந்தால், நீங்கள் மாஸ்யரைஸிங் செய்துக் கொள்ளத் தேவையில்லை என்று ஒரு பொதுவான அழகியல் கட்டுக்கதை உள்ளது - ஆனால் அது முற்றிலும் தவறான எண்ணமாகும். உண்மையில், மழைக்காலத்தில் உங்கள் சருமத்தை மாஸ்யரைஸிங் செய்யமாலிருந்ததினால், அது உங்கள் சருமம் வறட்சியடைந்து, மேலும் அதிகப்படியான எண்ணெய்யை சுரப்பதால். யாரும் அதை விரும்புவதில்லை. Simple Kind To Skin Hydrating Light Moisturiser. போன்ற மென்மையான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தவும். இதனுடைய மென்மையான மற்றும் வேகமாக உறிஞ்சும் தன்மையைக் கொண்டுள்ளதால், சருமத் துவாரங்களை அடைக்காது அல்லது பிசுபிசுத்து ஒட்டக்கூடிய எச்சத்தையும் விடாது. கூடுதலாக, புரோ-வைட்டமின் பி 5, வைட்டமின் ஈ, கிளிசரின் மற்றும் போரேஜ் விதை எண்ணெய் போன்ற சருமத்தை விரும்பும் பொருட்கள் மாய்ஸ்சரைசரில் நிறைந்திருக்கும், இது உங்கள் சருமத்தை 12 மணி நேரம் வரை நீரேற்றமாக வைத்திருக்கும். மேலும் இது பாராபென்ஸ், ஆல்கஹால், செயற்கை வண்ணங்கள் மற்றும் சாயங்கள் போன்ற உட்பொருட்கள் சேர்க்கப்படவில்லை. இது அனைத்து தோல் வகைகளுக்கும், குறிப்பாக மென்மையான சருமத்திற்கும் ஏற்றதாக இருக்கும்.