ஷேவிங் செய்வதா அல்லது வாக்ஸிங் செய்வதா? எது சிறந்தது என்ற வாதம் இன்று வரை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. ஒவ்வொன்றிற்கும் ஏற்ற சாதக பாதகங்கள் இருந்தாலும், முடியை நீக்குவதில் விரைந்து செயல்படுவதற்கு நாம் ஷேவிங்கையே பரிந்துரைப்போம். ஆனால் இந்த குளிர்காலத்தில் ஷேவிங் செய்வது உகந்தது அல்ல. அது உங்கள் சருமத்தை வறட்சியாக்கி ஈரபதமற்று செய்து விடும். நீங்கள் ஷேவிங்கை விடமாட்டீர்கள் என்று தெரியும், ஆனால் உங்களது பயன்பாட்டு முறைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்தால் அது உங்கள் சருமத்தை வறட்சியடையாமல் தடுக்கும்.

 

குறிப்பு 1: எக்ஸ்ஃபாலியட்

எக்ஸ்ஃபாலியட்

பெரும்பாலானோர் குளிர்காலத்தில் எக்ஸ்பாலியட் செய்யமாட்டார்கள், ஏனெனில் அது வறட்சியை அதிகரித்துவிடக் கூடும். ஆனால் உண்மை இதற்கு நேரெதிரானதே. நமக்கு வயது ஆக, நம் சருமத்தின் மாறுபாடுகளின் வேகம் குறைவாக குறைவாக இருக்கும், அதனால் நம் சருமம் சற்று பொலிவிழந்து காணப்படலாம். தினசரி எக்ஸ்பாலியட் செய்வதன் மூலம் டெட் செல்களை நீக்கி சருமத்தை பொலிவாக மாற்றலாம்.

 

குறிப்பு 2: முதலில் குளியல் பின்பு ஷேவ்

முதலில் குளியல் பின்பு ஷேவ்

பெரும்பாலான பெண்கள் குளியலறைக்கு சென்ற உடனே ரேசர் எடுத்து ஷேவ் செய்ய தொடங்கி விடுவார்கள். ஆனால் குளித்து விட்ட பின்பு ஷேவ் செய்வதே சரியான ஒன்றாகும். குளியல் நம் சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரித்து முடியை மென்மையாக்கும். இது சிறப்பான ஷேவிங்கிற்கு வழிவகுக்கும்.

 

குறிப்பு 3: மாலையில் ஷேவ் செய்யுங்கள்

மாலையில் ஷேவ் செய்யுங்கள்

ஆமாம்! ஷேவிங் செய்வதற்கு என்று ஒரு நேரம் இருக்கிறது. பெரும்பாலானோர் அது காலையில் என்று நினைப்பார்கள் ஆனால் அது தான் கிடையாது. ஏனெனில் இரவு நேரங்களில் நம் கால்கள் சற்று வீங்கி முடிகள் துளைகளுள் மறைந்து போகலாம். அதனால் காலையில் நாம் ஷேவ் செய்தாலும் அது சிறப்பான ஒன்றாக இருக்காது.

 

குறிப்பு 4: ரேசர் ஈரத்துடன் இருக்கட்டும்

ரேசர் ஈரத்துடன் இருக்கட்டும்

உங்கள் ரேசரை பயன்படுத்துவதற்கு முன் ஓடும் தண்ணீரில் சற்று நனைத்திடுங்கள். அப்போது ஈரப்பதமிக்க ரேசர் நம் சருமத்திற்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.

 

குறிப்பு 5: ஜெல்லிற்கு பதிலாக க்ரீம் பயன்படுத்துங்கள்

ஜெல்லிற்கு பதிலாக க்ரீம் பயன்படுத்துங்கள்

க்ரீம் சார்ந்த பொருட்கள் நீர் சார்ந்த ஜெல்லை விட நன்கு ஈரப்பதத்தை தரும். என்றும் இதனை நாங்கள நினைவில் வைத்து கொள்ளுங்கள், முக்கியமாக குளிர்காலங்களில். சில நேரங்களில் இவை இரண்டும் இல்லையென்றால் நீங்கள் ஹேர் கண்டிஷனரையும் பயனப்டுத்தலாம். அது உங்கள் சருமத்தை மென்மையாகவும் மற்றும் ஷேவ் செய்யும் பொது இதமாகவும் இருக்கும்.