பகல் நேரம் சுருங்கி, இரவு நீளமாவதை உணர்கிறீர்களா? இரவு படுக்கும் முன்பு ஒரு டம்ளர் சூடான பால் குடிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? வேறென்ன குளிர் காலம் ஹாய், ஹலோ சொல்லி உள்ளே வந்துவிட்டது. யெஸ். குளிர் காலம் இதோ வந்துவிட்டது. ஆனால் உங்கள் சருமம் அதற்குத் தயாராக இருக்கிறதா?
குளிர் காலத்திற்கே உரிய பிரச்சனைகள் பல. நடுங்க வைக்கும் குளிர், குறைவான ஈரப் பதம் ஆகியவை சருமத்தின் நீர்ச் சத்தை திருடிவிடும். இதனால் வறண்டு போன, பொலிவில்லாத சருமம்தான் மிச்சம். அதனால் இப்போதே உங்கள் சருமத்தை குளிர் காலத்திற்கு தயார் செய்வது அவசியம். கடுமையான குளிரை எதிர்கொள்ள இது உதவும்.
- இன்னும் மென்மையான க்ளென்ஸ் செய்யுங்கள்
- டோன், ஸ்கிரப் ட்ரீட்மென்ட் இப்போது வேண்டாமே
- தினமும் சருமத்திற்கு ஊட்டச் சத்து தர வேண்டும்
- அடர்த்தியான சன்-ஸ்கிரீன்
- உடம்பை உதாசீனப்படுத்தாதீர்கள்
இன்னும் மென்மையான க்ளென்ஸ் செய்யுங்கள்

குளிர் காலத்தில் ட்ரை சருமம் ஏற்படாமலிருக்க மென்மையான, சோப் இல்லாத க்ளென்ஸருக்கு மாறுங்கள். காற்றில் ஈரப் பதம் குறைவாக இருக்கும் என்பதால் சருமத்தில் ஆயில் வறண்டு போகாமல் இருக்க உதவும் க்ளென்ஸர் பயன்படுத்தவும். க்ளைகோளிக் ஆசிட் அல்லது சாலிசிலிக் ஆசிட் உட்பொருட்கள் கொண்ட பொருட்களை தவிர்க்கவும். குளிருக்கு சருமம் பழகிக்கொள்ள இதைச் செய்ய வேண்டும். க்ரீம் அதிகம் கொண்ட ஊட்டச் சத்து கொடுக்கும் க்ளென்ஸர் சருமத்தில் உள்ள நீர்ச் சத்தை நீக்காது.
BB picks: Lakme Blush & Glow Strawberry Creme Face Wash
டோன், ஸ்கிரப் ட்ரீட்மென்ட் இப்போது வேண்டாமே

குளிர் காலத்தில் சும்மாவே உங்கள் சருமம் எங்கே தண்ணி என தேடிக்கொண்டிருக்கும். அதனால் இந்த காலத்தில் சருமம் அதிக ட்ரை ஆக இருக்கக்கூடாது. முதலில் டோனர் பயன்படுத்துவதை கட் செய்யுங்கள். ஃபேஸ் வாஷ், சோப் பயன்பாட்டையும் நிறுத்த வேண்டும்.
தினமும் சருமத்திற்கு ஊட்டச் சத்து தர வேண்டும்

சருமத்திற்கு நல்ல ஈரப் பதம் கொடுப்பதுதான் குளிர் காலத்தை சமாளிப்பதற்கான சீக்ரெட். என்ன செய்தாலும் உங்கள் சருமம் உலர்வாக மாறிக்கொண்டிருக்கும் என்பதால் அதற்குத் தேவையான ஊட்டச் சத்துக்களைக் கொடுக்க வேண்டும். சேராமைட் கொண்ட மாய்ஸ்சுரைஸர் அதற்கு சிறந்தது. நீர்ச் சத்து இன்னும் ஆழமாகச் செல்ல வேண்டும் என்றால் ஹயாலுரானிக் ஆசிட் உட்பொருட்கள் கொண்டவற்றை பயன்படுத்தலாம். சருமத்தில் உள்ள ஊட்டச் சத்தை லாக் செய்யும் உட்பொருட்களை சேர்ப்பது கட்டாயம்.
BB picks: Dermalogica Intensive Moisture Balance Moisturiser
அடர்த்தியான சன்-ஸ்கிரீன்

குளிர் காலங்களில் சன் அலர்ஜி, டேன் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா? குளிர் காலங்களில் சூரியன் இருப்பதே தெரியாது. இதனால் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை தவிர்ப்பீர்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா? மேகங்கள் யு.வி.பி கதிர்களை மட்டுமே தடுக்கும். அதிக பாதிப்பு ஏற்படுத்தும் யு.வி.ஏ கதிர்களை தடுக்காது. 15 என்ற அளவில் எஸ்.பி.எஃப் பயன்படுத்துவதே இதற்கான தீர்வு. நாள் முழுவதும் 2-3 மணி நேரங்களுக்கு ஒரு முறை அதைப் பயன்படுத்த வேண்டும்.
BB picks: Pond’s Sun Protect Non-Oily Sunscreen SPF 50
உடம்பை உதாசீனப்படுத்தாதீர்கள்

ஹீட்டருக்கு அருகில் அமராமல், உடம்பு முழுக்க மாய்ஸ்சுரைஸ் க்ரீம் பயன்படுத்தாத குளிர் காலம் எல்லாம் குளிர் காலமா? குளிர் காலங்களில் உங்கள் உடலைப் போலவே முகமும் பாதிக்கப்படும். அதனால் தினமும் முகத்தில் மாய்ஸ்சுரைஸர் பயன்படுத்தத் தவறாதீர்கள்.
BB picks: Dove Deep Moisturisation Cream
Written by Kayal Thanigasalam on Nov 09, 2020