ஏற்கனவே, பல சருமப் பிரச்னைகளினால் அவதிப்படும்போது, வேறொரு புதியப் பிரச்னையை சேர்த்துக் கொள்ள நீங்கள் மட்டுமல்ல, எவருமே விரும்ப மாட்டார்கள். முதுமை என்பது இயற்கை மற்றும் தவிர்க்க முடியாதது, என்றாலும் உங்கள் சருமத்தின் மீது அது அந்தந்த காலத்தில் அல்லது அதற்குப் பிறகு ஏற்பட்டால் நல்லதாகும். ஆனால், இளமையிலேயே முதிர்ச்சியடைவது என்பது ஒன்று, மேலும் அது ஒரு ஆபத்தானதும் கூட. உங்களுக்கு தெரியாமலே, நீங்கள் அதன் பாதிப்புக்குள்ளாகலாம். எனவே, நீங்கள் முதுமையடையும் காலச்சக்கரம் வேகமாக ஓடுகின்றதா? உங்கள் 20 அல்லது 30 வயதிலேயே உங்கள் சருமம் முதிர்ச்சியடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றனவா? இந்த அறிகுறிகள் அதைப் பற்றி விளக்கும்.

 

உங்கள் சருமம் வறட்சி அடையும்

உங்கள் சருமம் வறட்சி அடையும்

உங்கள் முதுமையின் காரணமாக, உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தின் அளவு குறைகிறது. உங்கள் சருமம் சுயமாக இயற்கையான எண்ணெய் பசையை உற்பத்தி செய்து கொள்ளாத காரணத்தினால். உங்கள் சருமம் வறட்சியாகவும், இறுக்கமாகவும் இருப்பதை உணர முடியும். உங்கள் சருமத்திலிருந்து ஈரப்பதம் நீங்காமல் இருக்க ஒரு க்ளீஸரை வாங்கி பயன்படுத்தவும். அது ஹைட்ரேட்டும் செய்கின்றது.

 

பழுப்பு அல்லது கருப்புப் புள்ளிகள் ஏற்படும்

பழுப்பு அல்லது கருப்புப் புள்ளிகள் ஏற்படும்

மெலனோசைட்டுகள் எனப்படும் பிக்மெண்ட் செல்கள் இளம்வயதிலேயே விரைவாக கிளஸ்டராகத் தொடங்கி, ஒவ்வொரு முறையும் நீங்கள் வெயில் நேரத்தில் வெளியே செல்லும் போது உங்கள் தோலில் கருமையான புள்ளிகளை உருவாக்குகின்றன. உங்கள் சருமம் வெகு சீக்கிரம் முதுமையடையக் கூடாது என்று நீங்கள் நினைத்தீர்களானால், சூரிய வெப்பத்தினால் ஏற்பட்ட புள்ளிகளை நீக்க நீங்கள் வழக்கமாக செய்யக்கூடிய சருமப் பராமரிப்புடன் சூரிய வெப்பப் பாதுகாப்பு (SPF) அம்சங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

உங்கள் சருமம் சோர்வாக இருக்கும்

உங்கள் சருமம் சோர்வாக இருக்கும்

உங்கள் முகம் மிகவும் சோர்வடைந்தும், வெளிர் நிறமாகவும் காணப்படுவதோடு, நீங்கள் முகப் பொலிவையும் இழக்க்கிறீர்கள் என்று உணர்ந்தால், உங்கள் சருமப் பராமரிப்பு அம்சங்களை உடனடியாக மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது. உங்களுடைய வயதைக் காட்டிலும் உங்கள் சருமம் இறந்த செல்களை துறக்காமல் இருக்கின்ற காரணத்தினால், பொலிவை இழக்க நேரிடுகின்றது. எனவே முகப் பிரகாசத்தை மீண்டும் பெற வேண்டுமானால், தவறாமல் இறந்த செல்களை நீக்க வேண்டும்.

 

சருமத்தில் சுருக்கங்களும், மெல்லிய வரிகளும் தெரியும்

சருமத்தில் சுருக்கங்களும், மெல்லிய வரிகளும் தெரியும்

சுருக்கங்களும், மெல்லிய வரிகளுமே முதுமைக்கான முதல் மற்றும் முக்கிய அறிகுறிகளாகும். உங்கள் சருமத்தின்மீது இந்த வரிகளை கவனித்திருக்கிறீர்களா? முதுமையடைதலை தடுப்பதற்கான ஒரு சரும பராமரிப்பு சிஸ்டம் தேவை. ஒரு நல்ல நைட் கிரீம் மற்றும் கண் கிரீம் ஆகியவற்றை பயன்படுத்துங்கள்.

 

சருமம் மெலிதாவது

சருமம் மெலிதாவது

செல்கள் நிதான வளர்ச்சி , கொலாஜென் உற்பத்தி குறைவு மற்றும் கால்சியம் குறைபாடு போன்ற காரணங்களினால், சருமத்தின் மேற்பரப்பு தளர்ந்து விடும், மெலியதாக மாறிவிடும். இதன் விளைவாக காயங்களும், சுருக்கங்களும் ஏற்படும். உங்கள் சருமத்தை உறுதியாகவும், இளமையாகவும் வைத்திருக்க அமினோ அமிலங்களுடன் செறிவூட்டப்பட்ட சீரம், கால்சியம் மற்றும் பெப்டைட்களை பயன்படுத்தவும்.