முகப்பரு, எக்ஸிமா, பிக்மென்டேஷன், முன்கூட்டிய முதிர்வு அல்லது பெரிய துளைகள், இது போன்ற தொல்லை தரும் சருமப் பிரச்னைகளில் ஏதாவது ஒன்று அல்லது அனைத்தையும் எதிர்கொள்பவர்கள் கையை உயர்த்தவும். சரி. உங்களுக்கு உள்ளதென்பதால், நீங்கள் சரியான இடத்திற்கு வந்துள்ளீர்கள். சரும பராமரிப்பு என்று வரும்போது நாம் ஒரு நல்ல நிபுணரின் அறிவுரை பெற வேண்டும் என்பது எங்கள் நம்பிக்கை. அதைத் தான் நாங்கள் செய்தோம்.

பிரபல தோலியல் நிபுணர் மற்றும் இஸியா ஏஸ்தெடிக்ஸின் நிறுவனருமான Dr.கிரண் லோகியாவை நாங்கள் சந்தித்தோம். அவரிடம் முகப்பரு, எக்ஸிமா, நிறம் மாறுதல் மற்றும் முன்கூட்டிய முதிர்வுபோன்ற பொதுவான ஐந்து முக்கியப் பிரச்னைகளுக்கு தீர்வு கூறும்படி கேட்டுக் கொண்டோம். நீங்கள் எதிர்கொள்ளும் இத்தகைய சருமப் பிரச்னைகளை எதிர்கொள்ள தோலியல் துறையால் பரிந்துரைக்கப்பட்ட வழக்கமான சரும பராமரிப்பு, தவிர்க்க வேண்டிய உணவுகள் மற்றும் சருமப் பராமரிப்பு குறிப்புகளை பார்க்கவும்.

 

முகப்பரு

பொதுவான 5 சரும பிரச்னைகளுக்கு வழக்கமாக செய்ய வேண்டிய சிறந்த சரும பராமரிப்புப் பற்றி பகிர்கிறார் தோலியல் நிபுணர் Dr. கிரண் லோகியா

தவிர்க்க வேண்டிய உணவுகள்

சர்க்கரையை மற்றும் இன்சுலீனை அதிகமாக சுரப்பதற்கு உதவும் க்ளைஸெமிக் உணவுகளை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். உடலில் ஹார்மோன் மாற்றங்களை மோசமாக்கி, ஹார்மோன்களில் அழுத்தத்தை அதிகரிக்கும். ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தக் கூடிய பால் மற்றும் மோர் புரதத்தை தவிர்க்க வேண்டும்.

காலை முதல் மாலை வரை வழக்கமாக செய்ய வேண்டிய சரும பராமரிப்பு.

காலையில் உங்கள் சருமத்தை நன்றாக சுத்தம் செய்யவும். கொஞ்சம் பேஸ் சீரம் தடவவும். சன்ப்ளாக்கை மறக்காமல் போட்டுக் கொள்ளவும். இரவு படுக்கச் செல்வதற்கு முன், க்ளீன்ஸர், சீரம் மற்றும் மாஸ்யரைஸரை பயன்படுத்தவும்.

முகப்பருவால் பாதிக்கப்பட்ட சருமத்திற்கான சரும பராமரிப்புக் குறிப்புகள்.

வழக்கமான சரும பராமரிப்பின் போது, க்ளீன்ஸருடன் சாலிசிலிக் அமிலம் மற்றும் பெனஸோயில் பெராக்ஸைடு சேர்த்துக் கொள்ளவும்.

உங்கள் முக லோஷன்களுடன் பென்டோநைட் க்ளே சேர்த்துப் பூசிக் கொள்ளவும். தொடக்கநிலை முகப்பருவுக்கு AHAs, ஸிங்க் க்ளூகோநேட் மற்றும் ரெட்டினால் அல்லது ரெட்டினால்டீஹைட் போன்றவற்றை பரிசீலிக்கவும்.

நிறைய முறை உங்கள் முகத்தைக் கழுவதீர்கள். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று என்ற அளவோடு நிறுத்திக் கொள்ளவும். அதிக முறை கழுவும் போது உங்கள் முகத்தை வறட்சியாக்கும், மேலும் எண்ணெய் பசையை அதிகளவு வெளிப்படுத்தும் ஹேர் ஸ்டைலிங் போமேட்ஸ் மற்றும் உங்கள் தலைமுடியில் வேக்ஸெஸ் பயன்படுத்துவதை தவிர்க்கவும். அவை முகப்பருக்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமையும்.

மிகவும் மோசமான முகப்பரு ஏற்பட்டால், ஒரு தோலியல் மருத்துவரை அணுகவும்.

 

எக்ஸிமா

பொதுவான 5 சரும பிரச்னைகளுக்கு வழக்கமாக செய்ய வேண்டிய சிறந்த சரும பராமரிப்புப் பற்றி பகிர்கிறார் தோலியல் நிபுணர் Dr. கிரண் லோகியா

ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமுள்ள உணவுகளையே உண்ணவும்.

நெய் அல்லது தேங்காய் எண்ணெயில் சமைக்கவும்.

பால் மற்றும் பசை அழற்சி தன்மையுள்ள உணவுகளை தவிர்க்கவும். எந்த உணவு உங்களை அதிகம் உண்ணத் தூண்டுகிறது என்பதை கண்காணிக்கவும்.

காலை முதல் மாலை வரை வழக்கமாக செய்ய வேண்டிய சரும பராமரிப்பு.

ஈரமான தோலின் மீது சக்திவாய்ந்த எக்ஸிமா உடல் லோஷனை ஒரு நாளைக்கு இருமுறை தடவ வேண்டும். வாஸலைன் அல்லது நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் அதன் மீது தடவ வேண்டும்.

எக்ஸிமா பாதிப்புக்கு சரும பராமரிப்புக் குறிப்புகள்.

செராமைட்ஸ் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை கொண்ட க்ரீமை தேடவும். வாஸலைன் பெட்ரோலியம் ஜெல்லியை அதிகளவு உபயோகியுங்கள். ஃபோர்ம் பொருட்கள் எதுவாயினும் தவிர்க்கவும். அதற்குப் பதில் குளிக்கவோ,

துடைக்கவோ சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை உபயோகப்படுத்துங்கள். மிதமான சுடு தண்ணீரில் ஐந்து நிமிடத்திற்குள் குளிக்கவும்.

 

பெரிய துளைகள்

பொதுவான 5 சரும பிரச்னைகளுக்கு வழக்கமாக செய்ய வேண்டிய சிறந்த சரும பராமரிப்புப் பற்றி பகிர்கிறார் தோலியல் நிபுணர் Dr. கிரண் லோகியா

தவிர்க்க வேண்டிய உணவுகள்

உண்மையில், முறையான சரும பராமரிப்பு சகிச்சையினால், இந்த தொல்லைகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுகின்றது. ஆனால், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பால், பசையுள்ள உணவுகள் மற்றும் சர்க்கரை போன்றவற்றை தவிர்க்க வேண்டும், அவை கொலாஜென் சிதைவை மோசமாக்குகிறது அல்லது முகப்பருவை அதிகம் பரவச் செய்கிறது.

காலை முதல் மாலை வரை வழக்கமாக செய்ய வேண்டிய சரும பராமரிப்பு.

ஃபேஸ் வாஷினால் ஒரு நாளைக்கு இருமுறை முகத்தை கண்டிப்பாக சுத்தம் செய்யவும். பகல் நேரத்தில் க்ளேவை அடிப்படையாகக் கொண்ட மாஸ்யரைஸரை தடவவும், இரவு நேரத்தில் உங்களுடைய வழக்கமான சரும பராமரிப்புடன் ரெட்டினாலை சேர்த்துக் கொள்ளவும் .

பெரிய துளை பாதிப்புக்கான சரும பராமரிப்புக் குறிப்புகள்.

உங்கள் சருமத்தை அதிகம் தேய்க்காதீர்கள் சாலிசிலிக் ஆஸிட் க்ளீன்ஸர்ஸ் மற்றும் ரெட்டினாலுடன் கூடிய க்ளேவை அடிப்படையாகக் கொண்ட லோஷனை தேடிப் பார்க்கவும். இவை கொலாஜெனை அதிகப்படுத்துவதுடன், துளைகளை இறுக்கமாக்கும்.

 

பிக்மென்டேஷன்

பொதுவான 5 சரும பிரச்னைகளுக்கு வழக்கமாக செய்ய வேண்டிய சிறந்த சரும பராமரிப்புப் பற்றி பகிர்கிறார் தோலியல் நிபுணர் Dr. கிரண் லோகியா

சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

நிறைய ஆன்டிஆக்ஸிடெண்ட்-ரிச் உணவுகளுடன் நெல்லி, ஆரஞ்சு, மற்றும் பெர்ரி போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளவும்.

உங்கள் உணவுகளில் அதிகமான பச்சைக் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும். நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

காலை முதல் மாலை வரை வழக்கமாக செய்ய வேண்டிய சரும பராமரிப்பு.

காலையில் வைட்டமின் C க்ளீன்ஸரையும், இரவில் ஆல்ஃபா- ஹைட்ராக்ஸி ஆஸிடுடன்(AHAs) கூடிய ஒரு க்ளீன்ஸரையும் பயன்படுத்தவும். உங்களுடைய அன்றாட செய்யும் வழக்கமான சரும பராமரிப்புடன் இவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் Cயுடன் சீரம்ஸ் அல்லது க்ரீம்ஸ் அல்லது லோஷன்ஸ்களை பயன்படுத்தவும். சன்ஸ்க்ரீனை பயன்படுத்தவும்.

இரவில், சுத்தம் செய்தபின்பு, உங்கள் முகத்திற்கு ஆன்டி-பிக்மென்டேஷன் தடவிக் கொள்ளவும், அதைத் தொடர்ந்து தூக்கத் தொடங்குவதற்கு முன் மாஸ்யரைஸரையும் தடவிக் கொள்ளவும்.

பிக்மென்டேஷனுக்கான சரும பராமரிப்புக் குறிப்புகள்.

ஆன்டி-பிக்மென்டேனுக்கு, கோஜிக் ஆஸிட், ஆல்ஃபா-அர்புடின், ரெடினால், மதுபானச் சாறு, ஆல்ஃபா- ஹைட்ராக்ஸி ஆஸிட் உள்ள க்ரீம்களை ஒரு நாளைக்கு இருமுறை பயன்படுத்தவும்.

ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கு ஒரு முறை சன் புரொடக்ஷன் 30 உள்ள கனிம சன்ப்ளாக்கை அணியுங்கள். 10 உங்கள் சருமத்தை சூரிய ஒளியின் பாதிப்பிலிருந்து பாதுகாக்க, பாலிபோடியம் லூகோடமஸ் சப்ளிமெண்ட்ஸுகளையும், மினுமினுப்பான சருமத்திற்கு, க்ளூடாதையோன் மற்றும் வைட்டமின் Cயுடன் கூடிய சப்ளிமெண்ட்களை ஒரு நாளைக்கு இருமுறை பயன்படுத்தவும்.

 

முன்கூட்டிய முதிர்ச்சி

பொதுவான 5 சரும பிரச்னைகளுக்கு வழக்கமாக செய்ய வேண்டிய சிறந்த சரும பராமரிப்புப் பற்றி பகிர்கிறார் தோலியல் நிபுணர் Dr. கிரண் லோகியா

தவிர்க்க வேண்டிய உணவுகள்

முதிர்ச்சி குறைக்கவும், கொலாஜென் சிதைவைத் தடுக்க சர்க்கரையை தவிர்க்கவும். வீக்கம் தரக் கூடிய எத்தகைய உணவையும் தவிர்க்கவும். நிறைய தண்ணீர் குடிக்கவும்

இடைவெளி விட்டு உண்ணாவிரதத்தை பயிற்சி செய்யுங்கள்.

காலை முதல் மாலை வரை வழக்கமாக செய்ய வேண்டிய சரும பராமரிப்பு.

காலை, மாலை ஆகிய இருநேரங்களும் மென்மையான க்ளீன்ஸரை பயன்படுத்தவும். பகல் நேரத்தில் வைட்டமின் C மற்றும் ஃபெரூலிக் ஆஸிட் சீரம்ஸ், மாலையில் ரெட்டினாலைப் பயன்படுத்தவும். அதைத் தொடரந்து ஹைலூரோனிக் அமிலம் பிளம்பிங் சீரம் மற்றும் பெப்டைட் கிரீமையும் பயன்படுத்தவும்.

முன்கூட்டிய முதிர்ச்சி பாதிப்புக்கான சரும பராமரிப்புக் குறிப்புகள்.

நுரை வராத க்ளீன்ஸரை மட்டுமே பயன்படுத்தவும். முதிர்ச்சியை எதிர்க்கும் ஆற்றலையும், சக்திவாய்ந்த ஆன்ட்டிஆக்ஸிடண்டிற்காக ஃபெரூலிக் ஆஸிடுடனோ அல்லது இல்லாமலோ கிடைக்கக் கூடிய வைட்டமின் Cயை பயன்படுத்தவும்.

ரெட்டினால், பாகுச்சியோயெல் அல்லது ஆல்ஃபா- ஹைட்ராக்ஸி ஆஸிட் ஆகியவற்றை இரவு நேரங்களில் பயன்படுத்தவும். பெப்டைட்டை அடிப்படையாகக் கொண்ட க்ரீம்களில் முதிர்ச்சி எதிராக செயல்படும் ஆற்றல் உள்ளது.

உங்களுடைய முன்கூட்டிய முதிர்ச்சிக்கு எதிரான வழக்கமான சரும பராமரிப்புகளின் ஒரு பகுதியாக லைன் ப்ளம்பிங் ஹைலூரோனிக் அமிலம் மற்றும் ஸ்டெம் செல் உட்பொருட்களும் இருக்க வேண்டும்.