வீட்டிலேயே செய்வதற்கான பாலிஷ் ரொட்டீன்: பொலிவுக்கான ரகசியம்

Written by Team BBJul 12, 2022
வீட்டிலேயே செய்வதற்கான பாலிஷ் ரொட்டீன்: பொலிவுக்கான ரகசியம்

பாடி பாலிஷ் என்பது பணக்காரர்களுக்கான காஸ்ட்லி ரொட்டீன். இது சருமத்திற்கு புத்துணர்ச்சி கொடுத்து, பொலிவான தேகத்தையும் கொடுக்கும். ஆனால் ஸ்பாக்களில் செய்வது காஸ்ட்லியானது. செய்தாலும்கூட சில வாரங்களில் அதன் எஃபெக்ட் போய்விடும். பெரிதாக பணம் செலவிடாமல் வீட்டிலேயே செய்வதற்கான பாடி பாலிஷ் ரெட்டீன் இதோ… 

 

ஸ்டெப்#1: பாடி ஸ்கிரப்

பாடி இல்யூமினேட்டர்

தோல் உறிஞ்சு வருவது ஒரு நேச்சுரலான செல் இறந்து புது செல் பிறப்பதற்கான வழிமுறை. அதன் வேகம் உங்கள் வயது, சூழல், ஸ்கின் டைப் ஆகிய பல காரணங்களைப் பொருத்து மாறலாம். ஆனால் சருமத்தின் மேல் பகுதிக்கு வரும் இறந்த செல் நீங்காமலிருப்பதுதான் பிரச்சனையாக இருக்கும். இதனால் சருமத்திற்கு மாய்ஸ்சுரைஸர் கிடைக்காமல் போய்விடும். எக்ஸ்ஃபாலியேஷன் செய்யும் போது இறந்த செல்கள் நீங்குவதால் ஆரோக்கியமும் கிடைக்கும் பொலிவும் உறுதியாகும்.

முதலில் சருமத்தை க்ளென்ஸ் செய்ய வேண்டும். மிதமான பாடி வாஷ் பயன்படுத்தி உடம்பை க்ளீன் செய்ய வேண்டும். அடுத்து, Dove Exfoliating Body Polish Scrub with Kiwi Seeds and Cool Aloe போன்ற ஜென்டிலான ஸ்கிரப் பயன்படுத்தி, வட்ட வடிவில் இறந்த செல்களை நீக்க வேண்டும். இது இறன்த செல்களை நீக்குவதோடு பொலிவையும் தரும் அலோ வேவா, கிவி எக்ஸ்ட்ராக்ஸ் கொண்டது. அதிக அழுத்தம் கூடாது. இரண்டு நிமிடத்திற்கு மேல் செய்யவும் கூடாது. மிதமான சூட்டில் தண்ணீரில் வாஷ் செய்ய வேண்டும். வாரம் இரு முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

 

ஸ்டெப்#2: ஷேவ்

பாடி இல்யூமினேட்டர்

அடுத்து உடம்பில் உள்ள முடியை நீக்க ஷேவ் அல்லது வேக்ஸ் செய்யலாம் (தேவைப்பட்டால்). எக்ஸ்ஃபாலியேஷன் மூலம் இறந்த செல்கள் நீக்கப்பட்டுவிட்டதால் ஷேவ் செய்யும் போது சருமம் ஸ்மூத்தாக மாறும். முடி எந்த திசையில் வளர்ந்திருக்கிறதோ அதற்கு எதிர் திசையில் ஷேவ் செய்ய வேண்டும். வேக்ஸ் செய்தால் கூந்தல் உடைவது குறையும்.

 

ஸ்டெப்#3: அலோவேரா ஜெல்

பாடி இல்யூமினேட்டர்

நல்ல கூலிங் ஏஜென்ட் மூலம் சருமத்தை கூல் செய்ய வேண்டிய நேரமிது. Lakmé 9to5 Naturale Aloe Aqua Gel நன்றாக சருமம் முழுக்க அப்ளை செய்ய வேண்டும். சருமத்திற்கு ஊட்டச் சத்து கிடைப்பதற்கான முதல் ஸ்டெப்பாகவும் இது இருக்கும். சுற்றுச்சூழலிலிருந்து ஈரப் பதத்தை ஈர்த்து சருமத்திற்கு கொடுக்கக்கூடியது அலோவேரா. குறைந்த அளவில் அப்ளை செய்து, சருமத்தில் ஊற விடலாம். அல்லது அதிக அளவில் மேஸ்க் போல அப்ளை செய்து 10-15 நிமிடத்தில் ரிமூவ் செய்யலாம்.

 

ஸ்டெப்#4: பாடி லோஷன்

பாடி இல்யூமினேட்டர்

சாஃப்ட்டான, பொலிவான சருமம் வேண்டும் என்றால் மாய்ஸ்சுரைசர்தான் எல்லாம். Love Beauty & Planet Natural Murumuru Butter & Rose Glow Body Lotion பயன்படுத்திப் பாருங்கள். சில நொடிகளில் சருமத்தில் உறிஞ்சப்படக்கூடியது இது. ஸ்கின் ஹெல்தியாக இருப்பதற்கான முருமுரு பட்டர் இதில் உள்ளது. இது ஆழமாகச் சென்று ஊட்டமளிக்கும். பொலிவும் கிடைக்கும். மிருதுவான சருமம் பல்கேரிய ரோஜாக்களின் நறுமணமும் கூடுதல் ப்ளஸ்.

 

ஸ்டெப்#5: பாடி இல்யூமினேட்டர்

பாடி இல்யூமினேட்டர்

படுக்கும் முன்பு செய்கிறீர்கள் என்றால் மாய்ஸ்சுரைஸரை கடைசியாக வைத்துக்கொள்ள வேண்டும். பகலில் எல்லாம் முதலில் ஹைலைட்டர் அப்ளை செய்ய வேண்டும். இது சூப்பர் மாடல் போன்ற தோற்றத்தைத் தரும். லிக்விட் இல்யூமினேட்டரையும் மாய்ஸ்சுரைஸரையும் கலந்து பயன்படுத்தலாம். Lakmé Absolute Liquid Highlighters எங்களின் ஃபேவரைட். எல்லா ஸ்கின் டோன் கொண்டவர்களும் பயன்படுத்தும் வகையில் இது மூன்று ஷேட்களில் வருகிறது. 

Team BB

Written by

Team efforts wins!!!!
821 views

Shop This Story

Looking for something else