சருமம் கருப்பது என்பது வழக்கமான சரும பிரச்சனையாகும். வேகமான வாழ்வியல் மற்றும் உஷணமான பருவநிலை இது மேலும் மோசமாக்குகிறது.

நம்முடைய சரும பகுதிகள் சில, கைகளுக்கு கீழே உள்ள பகுதி மற்றும் தொடைகளுக்கு கீழே உள்ள பகுதி, உராய்வு மற்றும் வியர்வை காரணமாக, சருமம் கருப்பாகும் பிரச்சனைக்கு உள்ளாகின்றன. இந்த பிரச்சனைக்கு தீர்வாக அமையக்கூடிய எளிய வீடு மருத்துவ குறிப்புகளை தொகுத்து அளிக்கிறோம்.
 

கழுத்தில் பாதிப்பு

கழுத்தில் பாதிப்பு

கழுத்துப்பகுதி கருப்பது சரும பிரச்சனை அல்ல என்றாலும் சங்கடம் தருவதாகவே இருக்கும். கழுத்து சருமத்தை சீராக்க எளிய வழி பாதம் பூசுவதாகும். பாதாமில், வைட்டமின் இ அதிகம் உள்ளது சரும நலனை மேம்படுத்தி, சருமம் மென்மையாகவும் உதவுகிறது.

5 அல்லது 8 பாதம் கொட்டைகளை எடுத்துக்கொண்டு, கெட்டியான கலவையாக்கி கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் பால் பவுடர் மற்றும் தேன் கலக்கவும். இதை நன்றாக கலந்து கருப்பாக உள்ள இடங்களில் தடவவும்.

30 நிமிடங்கள் கழித்து, அதை அகற்றி கழுவிக்கொள்ளவும். வாரத்தில் 3 அல்லது 4 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

 

கைகளுக்கு கீழ்ப்பகுதி

கைகளுக்கு கீழ்ப்பகுதி

கைகளுக்கு கீழ்ப்பகுதி கருப்பாக இருந்தால் ஸ்லீவ்லெஸ் அணியும் போது அல்லது கைகளை உயர்த்தும் போது அசெளகர்யமாக உணரலாம். இதை சரி செய்ய எளிய வழி இருக்கிறது. அரிசு மாவு மற்றும் வினிகரை பயன்படுத்தவும். அரிசு மாவுக்கு எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும் தன்மை இருக்கிறது. வினிகர் சரும நிறத்தை சீராக்கி, துர்நாற்றம் வீசச்செய்யும் கிருமிகளை கொல்கிறது.

4 ஸ்பூன் அரிசு மாவுடன் 2 ஸ்பூன் வினிகரை கலந்து நன்றாக குழைவாக்கி கொள்ளவும். கைகளுக்கு அடிப்பகுதியை சுத்தமாக்கி கொண்டு இதை தடவிக்கொள்ளவும். 20 நிமிடம் அப்படியே இருக்கட்டும். நன்றாக உலர்ந்த பின், தண்ணீரால் கழுவவும். வாரும் 3 அல்லது 4 முறை செய்தால் நல்ல பலன் தெரியும்.

 

இருண்ட உள் தொடைகள்

இருண்ட உள் தொடைகள்

ஆம்! ஆண்கள் பெண்கள் இருவருக்குமே, தொடைப்பகுதிக்கு கீழே கருப்பது சங்க்டமானது. இது தனிப்பட்ட சுகாதார குறைவுடன் தொடர்பு கொண்டிருந்தாலும் அது காரணமாக இருக்க வாய்ப்பில்லை. தொடையின் உள்பகுதியில், பிக்மெண்டேஷன் ஏற்படுவதற்கு பருமன், உராய்வு, ஹார்மோன் சமநிலையின்மை, நீரிழிவு என பல காரண்க்கள் இருக்கலாம். இதை போக்க ஒரு வழி, தேன், எலுமிச்சை மற்றும் சர்க்கரை கலைவையை பயன்படுத்துவதாகும்.

தேன் உலர் சருமத்திற்கான நிவாரணி என அறியப்படுகிறது. சர்க்கரை இறந்த செல்களை அகற்றக்கூடியது. இந்த கலவை தயாரிக்க ஒரு ஸ்பூன் தேன், எலுமிச்சையை 2 ஸ்பூன் சர்க்கரையுடன் கலக்கவும்.

இந்த கலவையை தொடை உள்பகுதியில் தடவி வட்ட வடிவில் மென்மையாக தேய்க்கவும்ன். 15 நிமிடம் விட்டு, இதமான நீரில் கழிவுக்கொள்ளவும். இரு வாரங்களுக்கு சில முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.