குளிர்காலம் நெருங்கியிருக்கிறது. எப்போதும் போல, ஏற்கனவே நம் சருமம் அதை வெறுக்கத்துவங்கிவிட்டது. குளிர் நிறைந்த பருவநிலை, நம்முடைய சருமத்தை உலர் தன்மை மிக்கதாக்கி, அதன் நீர்த்தன்மையையும் பாதித்து மங்கச்செய்கிறது. உங்களுக்கே தெரிந்திருக்கும், இத்தகைய சருமத்தில் எந்த மேக்கப்பும் அத்தனை சிறப்பாக இருக்காது. உலர் சருமத்தை கொண்டிருக்கும் பெண்களுக்கு உதவக்கூடிய நான்கு மேக்கப் குறிப்புகள் இதோ:

 

#1 எப்போதும் பவுண்டேஷன் முன் மாய்ஸ்ரசைஸ் செய்யவும்

#1 எப்போதும் பவுண்டேஷன் முன் மாய்ஸ்ரசைஸ் செய்யவும்

நீங்கள் உலர் சருமம் கொண்டவர் எனில் உங்கள் சருமத்தை மாய்ஸ்சரைஸ் செய்வது மிகவும் முக்கியம். மேக்கப் பயன்படுத்துவதற்கு முன் உங்கள் சருமத்தை ஒரு மாய்ஸ்சரைசர் கொண்டு நீர்த்தன்மை மிக்கதாக செய்ய மறக்க வேண்டாம். இது உங்கள் சருமத்தை நாள் முழுவதும் நீர்த்தன்மை மிக்கதாக செய்வதோடு, உங்கள் மேக்கப் சருமத்தின் மீது நன்றாக நிலைப்பெறவும் உதவும். விஷீவீ

 

#2 ஹைலைட்டரை மறக்க வேண்டாம்

#2 ஹைலைட்டரை மறக்க வேண்டாம்

உங்கள் சருமம் உலர் தன்மையுடன் இருந்தால், அது மங்கலாக, ஜீவனில்லாமல் இருக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே ஹைலைட்டரை பயன்படுத்துவதன் மூலம் அதன் பொலிவை மீண்டும் கொண்டு வாருங்கள். இது உங்கள் சருமத்திற்கு புதிய பிரகாசத்தை அளிக்கும். அதிகப்படியான பொலிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதால் நீங்கள் ஹைலைட்டரை அதிக அளவில் கூட பயன்படுத்தலாம். 

 

#3 உதடுகளை எக்ஸ்போலியேட் செய்யவும்

#3 உதடுகளை எக்ஸ்போலியேட் செய்யவும்

நீங்கள் பயன்படுத்தும் லிபஸ்டிக் எத்தனை செழுமையாக இருந்தாலும் சரி, உதடுகள் பாதிக்கப்பட்டிருந்தால் அதனால் அதிக பயன் இருக்காது. எனவே, உங்கள் உதடுகளை எக்ஸ்போலியேட் செய்து, அதன் மீதுள்ள இறந்த செல்களை அகற்ற மறக்க வேண்டாம். லிப் ஸ்கிரப் அல்லது எக்ஸ்போலியேட்டை உங்கள் டூத்பிரெஷுடன் கூட பயன்படுத்தலாம். 

 

#4 லேசு ரக மேக்கப் சாதனங்கள்

#4 லேசு ரக மேக்கப் சாதனங்கள்

உங்களுக்கு உலர் சருமம், எனில் முழு மேக்கப் அல்லது கணமான மேகப்பை நிச்சயம் தவிர்க்க வேண்டும். லேசுரக மேக்கப் சாதனங்களுடன் பவுண்டேஷன் மற்றும் கன்சீலர்களுக்கு மாறவும். கணமான பார்முலாக்கள் உங்கள் சருமத்தை சிறைபிடித்தது போல் தோன்றச்செய்யும். மேலும் இவை சருமத்தின் காய்ந்த பகுதிகளில் ஒட்டிக்கொள்ளும்.