மென்மையான சருமம் கொண்டவர்கள் மேக்கப் செய்து கொள்ளும் ஒவ்வொரு முறையும் ஏதோ கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற மனநிலையில் இருப்பார்கள். அதே நிலையில் நீங்களும் இன்று இருக்கிறீர்களா? எந்த காரணமும் இல்லாமல் உங்கள் தோல் சிவப்பாக மாறுமா? மறுநாள் அவைகள் செதில் செதில்களாக மாறுமா? இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் என்னவென்றால் மேக்கப் செய்து கொண்ட பின் நீங்கள் மேற்கொள்ளும் சருமப் பராமரிப்பைப் பொறுத்தது. மென்மையான சருமத்தையுடையவர்கள் மேக்கப்பிற்கு பின் சருமப் பராமரிப்பு வழக்கத்தை பழக்கமாக்கிக் கொள்வது பலவித காரணங்களுக்காக மிகவும் முக்கியமானதாகும் . அழுக்குகளையும், அசுத்தங்களையும் திறம்பட அகற்றுவதைத் தவிர, இது சருமத்தில் எரிச்சல் மற்றும் சரும பிளவுபடுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது. நீங்கள் மென்மையான சருமம் உடையவர்கள் தங்களுடைய மேக்கப்பிற்கு பிந்தைய சருமப் பராமரிப்பு வழக்கத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நாங்கள் உங்களுக்கு அளித்துள்ளோம். மென்மையான சரும மேக்கப்பிற்கு பிந்தைய சருமப் பராமரிப்பு வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள நீங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைப் பற்றி படித்துத் தெரிந்து கொள்ளவும்.

 

ஸ்டெப் 01: மென்மையான க்ளீன்ஸர்களினால் சுத்தம் செய்வதிலிருந்து துவங்கவும்

ஸ்டெப் 01: மென்மையான க்ளீன்ஸர்களினால் சுத்தம் செய்வதிலிருந்து துவங்கவும்

மிகவும் எளிமையான வழிமுறைகளுடன் தொடங்குங்கள். மேக்கப்பின் மேல்ப் பூச்சுகளை ஃபேசியல் வைப்ஸ்ஸின் உதவியால் துடைத்தெடுக்கவும். மிருதுவான சருமத்திற்கேற்றாற் போல் இந்த Simple Kind To Skin Cleansing Facial Wipes தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் உங்கள் சருமத்திற்கு எரிச்சல் ஏற்படுத்தாமலும், மேக்கப் எளிதாக போட்டுக் கொள்வதும் ஏதுவாக இருக்கவும் உதவி செய்கிறது. இதில் சருமத்திற்கு நீரேற்றத்தை அளிப்பதற்காக மூன்று முறை சுத்திகரிக்கப்பட்ட நீர், அசுத்தங்களை அகற்ற புரோ வைட்டமின் B5, மற்றும் சருமத்திற்கு ஊட்டத்தை அளிக்கக் கூடிய வைட்டமின் Eயும் இந்த க்ளீன் வைப்ஸ்ஸில் அடங்கியுள்ளது. மென்மையான சருமத்தைத் பாதிக்கக்கூடிய ஆல்கஹால், வாசனை திரவியங்கள் மற்றும் நச்சுத்தன்மைக் கொண்ட இரசாயனங்கள் போன்ற சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்தப் பொருட்களும் இதில் கலக்கப்படவில்லை என்பது கூடுதல் பயனாகும்.

 

ஸ்டெப் 02 : மென்மையான மேக்கப் ரிமூவரைப் பயன்படுத்தவும்

ஸ்டெப் 02 : மென்மையான மேக்கப் ரிமூவரைப் பயன்படுத்தவும்

மஸ்காராப் போன்ற கொஞ்சம் விடாப்பிடியான மற்றும் கடினமான மேக்கப் பூச்சுக்களை அகற்றுவதற்கு உங்களுக்கு மைக்கேலர் தண்ணீர் தேவை. இதற்கு சருமத்திற்கு Simple Kind To Skin Micellar Cleansing Water மிகவும் பொருத்தமாக இருக்கும்! வறட்சியைத் தடுக்கும் வைட்டமின் சி, சுத்திகரிப்படுத்த வைட்டமின் பி, மென்மையாக்குவதற்கு வைட்டமின் பி3, ஊட்டமளிக்க க்ளைகோல், நீரேற்றத்திற்கு மும்மடங்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் மற்றும் அசுத்தங்களை நீக்க ஹெக்சிலீன் உள்ளிட்ட வைட்டமின்களும், தாதுப் பொருட்களும் நிறைந்துள்ளன. உடனடியாக சருமத்திற்கு ஊட்டச்சத்து அளிக்கவும், சருமத்தை சுத்தம் செய்யவும் இந்த க்ளீன் ப்யூட்டி மைக்கேலர் தண்ணீரை நீங்கள் பயன்படுத்திப் பார்க்கலாம்.

 

ஸ்டெப் 03 : சோப்பு இல்லாத ஃபேஸ் வாஷைத் தேர்ந்தெடுக்கவும்

ஸ்டெப் 03 : சோப்பு இல்லாத ஃபேஸ் வாஷைத் தேர்ந்தெடுக்கவும்

மைக்கேலர் தண்ணீர் உங்கள் மேக்கப்பை கவனித்துக் கொள்வது உறுதியானதால், நீஙகள் உங்கள் முகத்தின் மற்றப் பகுதிகள் எதை பற்றியும் நீங்கள் கவலைப்படுவதில்லை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்,. ஆனால் அது சரியான வழியில்லை! உங்கள் சருமத்தின் மீது விடுபட்டுள்ள மேக்கப் எச்சங்களை கொஞ்சம்கூட மிச்சமில்லாதபடி உங்கள் சருமத்தை சுத்தம் செய்ய வேண்டும்.மென்மையான சருமத்தில் பல அற்புதங்களைச் செய்யும் வழக்கமான ஃபேஸ் வாஷ்களுக்கு மாற்றாக சோப்பு இல்லாத இந்த Simple Kind To Skin Refreshing Facial Wash ஐப் பயன்படுத்தவும். நீரேற்றம் மற்றும் மென்மையான பயன்களைக் கொண்ட, ஊட்டமளிக்கும் இந்தக் க்ளீன்சர் அனைத்து அழுக்குகளையும் அசுத்தங்களையும் நீக்கி, மற்ற எதையும்விட இது சருமத்திற்கு புத்துணர்ச்சியையும், புத்துயிரையும் அளிக்கிறது.

 

ஸ்டெப் 04 : ஆல்கஹால் இல்லாத டோனரைப் பயன்படுத்தவும்

ஸ்டெப் 04 : ஆல்கஹால் இல்லாத டோனரைப் பயன்படுத்தவும்

பலர் சருமத்தில் சுருக்கத்தையும்,எரிச்சலையும் ஏற்படுத்தும் என்பதால், மென்மையான சருமம் கொண்ட பெண்கள் டோனரைப் பயன்படுத்துவதை நினைத்து அச்சப்படுகிறார்கள். அதற்காக நீங்கள் கவலைக் கொள்ளத் தேவையில்லை. மென்மையான சருமத்திற்காகவே தயாரிக்கப்பட்ட Simple Kind To Skin Soothing Facial Toner தினசரி நீங்கள் செய்யும் சுத்தம், டோனிங் மற்றும் மாஸ்யரைஸிங் போன்ற வழக்கமான சருமப் பராமரிப்பைத் தவறவிடாமல் இருக்க உதவி செய்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த கெமோமில், மென்மையாக்கும் அலன்டோனின், வீக்கத்தைத் தடுக்கும் விட்ச் ஹேசல் மற்றும் நீரேற்றத்தை அளிக்கும் ப்ரோ விட் பி5 போன்றவை இந்த கலவையில் சேர்ந்திருப்பதால், இந்த ஆல்கஹால் இல்லாத டோனர் உங்கள் சருமத்தை மென்மையாக்கவும், மற்றும் அதன் இயற்கையான pH அளவை காரத்தன்மையின் எச்சமில்லாமல் மீட்டெடுக்கவும் உதவி செய்கிறது.

 

ஸ்டெப் 05 : மென்மையான மாய்ஸ்சரைசரால் தடவிக் கொள்வதுடன் இந்தப் பராமரிப்பு முறையை நிறைவு செய்யவும்

ஸ்டெப் 05 : மென்மையான மாய்ஸ்சரைசரால் தடவிக் கொள்வதுடன் இந்தப் பராமரிப்பு முறையை நிறைவு செய்யவும்

நீங்கள் கிட்டத்தட்ட வழிமுறையின் இறுதி செய்முறையில் உள்ளீர்கள்! இறுதியாக, இன்றைய தினத்தின் மேக்கப்பை நிறைவு செய்வதற்குமுன், Simple Kind To Skin Hydrating Light Moisturiser. போன்ற மென்மையான காமெடோஜெனிக் அல்லாத மாய்ஸ்சரைசரினால் ஹைட்ரேட் செய்யவும். இதில் அடங்கியுள்ள சருமத்திற்கு ஊட்டமளிக்கும் போரேஜ் விதை எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ, நீரேத்தை அளிக்கும் க்ளிசரின் மற்றும் மென்மைத் தன்மையை அளிக்கும் புரோ-வைட்டமின் பி5 ஆகியவை உங்கள் முகத்தை பிசுபிசுப்பில்லாமல் ஈரப்பதத்துடன் வைத்திருக்க செய்கிறது.