உங்கள் சரும டைப்பிற்கு ஏற்ற பொருட்களைப் பயன்படுத்தும்படி அத்தனை அழகு பத்திரிகைகளும் கூறுகின்றன. உங்கள் ஸ்கின் எந்த டைப்பை சேர்ந்தது என்று கண்டறிவதற்கு அவர்கள் பல வழிகாட்டுதல்கள் கொடுத்தாலும், அந்த ஸ்கின் டைப்பிற்கு எந்த பொருட்களை பயன்படுத்துவது என்பதை சொல்வதில்லை. இதனால் பல விஷயங்களை செய்து சொதப்ப வேண்டியிருக்கிறது. இது சரும பிரச்சனைகளை அதிகரிக்கலாம். இந்தக் குழப்பங்களுக்கு ஒரேயடியாக முற்றுப் புள்ளி வைக்க உதவும் டிப்ஸ் இதோ.
நீங்கள் புதிதாக ஒரு ஸ்கின்கேர் வழக்கங்களை ஆரம்பிப்பதாக இருந்தாலும் சரி, இப்போது பயன்படுத்தி வரும் அழகு சாதனங்கள் பயன் அளிக்காவிட்டாலும் சரி… கவலைப்பட வேண்டாம். ஆயில் அதிகம் சுரக்கும் சருமம் கொண்டவர்களுக்கான பின்வரும் ஸ்கின்கேர் ஸ்டார்ட்டர் பேக்கேஜ் எல்லா சரும கவலைகளையும் தீர்க்கும்.
க்ளென்ஸர்

முகத்தில் அதிகப்படியான ஆயில் வடிவதுதான் எண்ணெய்ப் பசை அதிகமுள்ளவர்களின் பெரிய பிரச்சனை. சருமத்தை ரொம்பவும் உலர்வாக்காமல் அதிகப்படியான ஆயில் நீக்கும் க்ளென்ஸர்தான் உங்களுக்குத் தேவை. சார்கோல் போன்ற உட்பொருட்கள் கொண்ட ஃபேஸ் வாஷ் நல்ல பலன் தரும். சரும துளைகளில் உள்ள தூசி, எண்ணெய், அசுத்தம் எல்லாவற்றையும் இது நீக்கும்.
BB picks: Ponds Pure White Anti Pollution Face Wash
டோனர்

ஒரு டோனர் இல்லாமல் ஸ்கின்கேர் இல்லை. முகத்தில் க்ளென்ஸர் பயன்படுத்திய பிறகு டோனர் பயன்படுத்துவது சருமத்தில் படிந்திருக்கும் மிச்சமுள்ள தூசியை நீக்கும். அது மட்டுமல்ல, சரும துளைகளை சுருங்க வைப்பதோடு, ஆயில் சுரப்பியையும் கட்டுப்படுத்தும். இந்த பலன்களால் ஆயில் அதிகம் சுரக்கும் சருமம் கொண்டவர்கள் அனைவரும் டோனர் பயன்படுத்த வேண்டும். ஆனால் ஆல்கஹால் கொண்ட டோனர் பயன்படுத்தினால் சருமம் உலர்வாகக்கூடும். அதனால் எப்போதும் ஆல்கஹால் இல்லாத டோனர் பயன்படுத்துங்கள்.
BB picks: Lakme Absolute Pore Fix Toner
மாய்ஸ்சுரைஸர்

நிஜம்தான். மற்ற எல்லா ஸ்கின் வகைகளைப் போலவே ஆயில் அதிகம் சுரக்கும் சருமம் கொண்டவர்களுக்கும் மாய்ஸ்சுரைஸர் அவசியம். ஆனால் அடர்த்தியான மாய்ஸ்சுரைஸர் பயன்படுத்தினால் சரும துளைகள் அடைத்துக்கொள்ளும், ஜாக்கிரதை. குறைந்த எடை கொண்ட ஜெல் ஃபார்முலா கொண்ட மாய்ஸ்சுரைஸர் பயன்படுத்தினால் ஆயில் விரைவாக உறிஞ்சப்படும், பிசுபிசுப்பும் இருக்காது.
BB picks: Ponds Super Light Gel Oil Free Moisturiser With Hyaluronic Acid + Vitamin E
ஸ்கிரப்

இறந்த செல்களை நீக்கவும் சரும துளைகள் அடைபடுவதைத் தவிர்க்கவும் வாரத்தில் இரு முறையாவது முகத்தை ஸ்கிரப் செய்ய வேண்டும். இது அதிகப்படியான ஆயில் நீக்க உதவும். மிருதுவான, பொலிவான தோற்றமும் கிடைக்கும்.
BB picks: St. Ives Gentle Smoothing Oatmeal Scrub & Mask
மாஸ்க்

வாரம் இறு முறை ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்த மறக்காதீர்கள். இது சருமத்தை இளைப்பாறச் செய்வதோடு முகத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய்யை நீக்கும். எனினும் உங்கள் ஸ்கின் டைப் என்ன என்று தெரிந்து மாஸ்க் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆயில் அதிகம் சுரக்கும் ஸ்கின் கொண்டவர்களுக்கு க்ளே மாஸ்க் சிறந்தது.
BB picks: Dermalogica Sebum Clearing Masque
சன்ஸ்கிரீன்

ஒரு போதும் சன் ஸ்கிரீன் அப்ளை செய்ய மறக்காதீர்கள். சீக்கிரமே வயதான தோற்றம் தெரிவது, ஸ்கின் டோன் சமநிலை இழப்பது, பொலிவற்ற சருமம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும் யு.வி.ஏ, யு.வி.பி கதிர்களிலிருந்து இது உங்களைக் காக்கும். சருமம் பிசுபிசுப்பாகாமலே இதைச் செய்யும் ஜெல் சன் ஸ்கிரீன் இதற்கு ஏற்றது.
BB picks: Lakme Sun Expert Spf 50 Pa+++ Ultra Matte Gel Sunscreen
நைட் க்ரீம்

ஒரு நைட் க்ரீம் அல்லது சீரம் இல்லாமல் உங்களின் ஸ்டார்ட்டர் பேக்கேஜ் நிறைவடையாது. இரவில்தான் சருமம் தன்னைத் தானே சரி செய்துகொள்கிறது. இந்த குணமாக்கும் ஆற்றலை அதிகரிக்கும் உட்பொருட்களை இரவில் பூசிக்கொள்வது நல்ல பலன் தரும்.
BB picks: Dermalogica PowerBright TRx Pure Night
Written by Kayal Thanigasalam on Nov 16, 2020
Author at BeBeautiful.