இது புது வருடம், புதிய ஆரம்பம். அவற்றிற்கு மதிப்பளிக்கும் விதமாக, 2021ல் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சில ஸ்கின்கேர் டிரெண்ட்களை எதிர்நோக்கியுள்ளோம். 2021ல் நம்முடைய சரும பராமரிப்பில் நாம் எப்படி கவனித்துக் கொள்ள போகிறோம் என்ற நிலை ஏற்படும்போது, இத்தகயை டிரெண்ட்கள் வலுவான ஏதாவது முயற்சி செய்ய வேண்டி இருக்கும் என்று எங்களுடைய நம்பிக்கைக்குரிய சரும நிபுணர்களில் ஒருவரான Dr.ஷ்ரவ்யா சி திப்பிர்நேனி MD DVL கூறுகிறார். தொற்றுப் பரவல் காரணமாக நம்முடைய வாழக்கைமுறையில் ஏற்படும் சில மாற்றம் அவற்றின் நேரடியாக விளைவாகும். அழகு சிகிச்சைகள் மற்றும் பயன்படுத்துப்படும் பொருட்களின் மீது புதிய ஆர்வம் ஏற்படுவதால் மற்றவைகள் டிரெண்ட்டின் ஆவதற்கான காரணமாகும். நாம் கலந்துரையாடிய சில டிரெண்ட்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
- 01. ‘மாஸ்க்னே’ சொல்யூஷன்
- 02. சரும நோய் எதிர்ப்பு சக்தி
- 03. ப்ளூ லைட் புரொடக்ஷன்
- 04. சரும நுண்ணுயிரியலின் மீதான கவனம்
- 05. பிரபலமான பொருட்களுக்கு மாற்றான டிரெண்ட்டி
- 06. PRP சிகிச்சைகள்
01. ‘மாஸ்க்னே’ சொல்யூஷன்

முகப்பருக்களை தேய்த்தல்/கிள்ளுதலுக்கு கொடுக்கப்பட்ட புதிய பெயரே ‘மாஸ்க்னே’ என்பதாகும். எப்பொழுதும் முகக்கவசம் அணிந்து கொள்வதால் வழியும் வியர்வை மற்றும் அவை முகக்கவசத்திற்கு கீழ் மறைந்து கொள்ளும் பகுதிகளில் இது பாதிப்பை உண்டாக்கும். கன்னங்கள், மேல் உதட்டுப் பகுதி, தாடை பகுதிகள் மீது புதிய அல்லது மோசமான வெடிப்புகள் காணப்படும். ‘மாஸ்க்னே’ பிரச்னையை எதிர்கொள்ள உதவ, சில பரிந்துரைக்கப்பட்ட குறிப்புகள் மற்றும் உத்திகளை பார்ப்போம். கடினமான, எண்ணெய் சாரந்த ஃபார்முலாக்கள்,
- பிசுபிசுப்புள்ள தயாரிப்புகள்அதிகளவு சீரம்ஸ் மற்றும் முகக்கவசப் பகுதியில் மேக்கப் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சருமத் துளைகளில் அடைப்பு ஏற்படாமல் இருக்க சருமம் காற்றை சுவாசிக்கும்படி செய்ய வேண்டும்.
- முகக்கவசத்திற்கு கீழ் ஒரு மிருதுவான, முகப்பருக்களை உருவாக்காத மற்றும் ஜெல்லை அடிப்படியாகக் கொண்ட மாஸ்யரைஸர் போன்றவைகளை பயன்படுத்துங்கள். சருமத்தின் மீதுள்ள துளைகளில் அழுக்கு சேராமல் இருக்க சாலிசிலிக் அமில ஃபேஸ் வாஷ்ஷை பயன்படுத்தவும்.
- மேலும், செபம் உற்பத்தியை ஒழுங்குபடுத்த வேண்டும். வெடிப்புகள் மறைவதற்கு பெனோஸைல் பெராக்ஸைடு அல்லது பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை பயன்படுத்தவும்.
02. சரும நோய் எதிர்ப்பு சக்தி

சரும நோய் எதிர்ப்பு சக்தி என்பது சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றது. சருமத்தின் வெளிப்புற அடுக்குகளையே எபிடெர்மல் தடுப்பு என்று அழைக்கப்படுகின்றது. ஹைட்ரேஷன், நீர்ச்சத்து, பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற கிருமிகளிலிடமிருந்து பாதுகாப்பது முதல் புகை மற்றும் மாசுபாட்டினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து காப்பது வரை, உங்கள் சருமத்தை பாதுகாப்பத்திலும், ஆரோக்கியமாக வைத்திருப்பதில் சரும நோய் எதிர்ப்பு சக்தியின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். புற ஊதா கதிர்கள் வெளிப்பாடு மற்றும் ஃப்ரீ ரேடிக்கல் பாதிப்புகளிலிருந்து உங்கள் சருமத்தை இது பாதுகாக்கின்றது. உங்களுடைய மேல்தோல் அடுக்கு தடுப்பு சுவர் பாதிப்படைவதன் விளைவாக நீர்ச்சத்துக் குறைபாடு, நெகிழ்வுத் தன்மை இழப்பு, மெல்லிய வரிகள் மற்றும் மனஅழுத்தம் அறிகுறிகள் போன்றவைகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கின்றது. சரும நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன்,
- உங்கள் சருமத்தை பாதிக்கும் சரும பாதிப்பு அம்சங்களிலிருந்து நீங்கள் பாதுகாத்துக் கொள்வது மிக அவசியமாகிறது முடி மற்றும் அழகு சாதனப் பொருட்களில் சல்பேட்
- இருப்பு சாலிசிலிக் அமிலம் மற்றும் க்ளைகோலிக் அமிலம் போன்ற கெமிக்கல் எக்ஸ்போலியேட்டுடன் அதிகமான சரும மேற்படல வெடிப்பு ட்ரைக்ளோசான் மற்றும் வேறு
- ஆண்ட்டி-பாக்டீரியல் பொருட்கள் பித்தலாட்ஸ், பாராபென்ஸ், மற்றும் ஃபார்மல்டிஹைட் போன்றவைகளை உட்செலுத்த்தப்பட்டப் பொருட்கள்
03. ப்ளூ லைட் புரொடக்ஷன்

ப்ளூ லைட் புரொடக்ஷன் என்பது சரும பராமரிப்பாகும். இது முன்பை விட இப்போது மிகவும் பொருத்தமாக உள்ளது. தொற்றுநோய் பரவல் நம்மை கேஜெட்டுகளுக்கு முன்னால் அதிக நேரம் செலவழிக்க வைத்து விட்டது. ப்ளூ லைட் நீண்ட அலைநீளத்தை உடையது. புற ஊதா கதிர்களைக் காட்டிலும் சருமத்தில் ஊடுருவி, உங்கள் சருமத்தை அதி விரைவாக முதுமையடையச் செய்கிறது. திரையை பார்க்கும் நேரத்தை குறைத்துக் கொள்வதே மிக எளிமையான வழியாகும். இருப்பினும், இது சாத்தியப்படவில்லையெனில், சருமத்தில் படும் ப்ளூ லைட்டை பிரதிபலிக்கக் கூடிய ஒரு சிறந்த சன்ஸ்க்ரீன் சருமத்தில் தடவிக் கொள்ளும்படி Dr.ஷ்ரவ்யா பரிந்துரைக்கிறார். “டைட்டானியம் டை ஆக்சைடு, அயன் டை ஆக்சைடு மற்றும் சிலிக்கான் டை ஆக்சைடு போன்ற பொருட்களை தேடிக் கொள்ளுங்கள். ஒத்த துகள்களைக் கொண்ட மினரல் சன்ஸ்க்ரீன்களும் ஒரே மாதிரியாக உதவியாக உள்ளன. ஆன்ட்டிஆக்ஸிடெண்ட், மரைன் எக்ஸ்ட்ராக்ட் மற்றும் வேறு தாவரச் சாறுகளுடன் ஹைட்ரேட் பொருட்களை இணைத்து ப்ளூ லைட் புரொடக்ஷனுக்காக குறிப்பிட்ட சூத்திரத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்களையும் பயன்படுத்தலாம்”¸ என்று கூறுகிறார்.
04. சரும நுண்ணுயிரியலின் மீதான கவனம்

தோல் நுண்ணுயிர் என்பது நமது சருமத்தின் ஒவ்வொரு சதுர சென்டிமீட்டரிலும் உள்ள ஏராளமான பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸைக் குறிக்கிறது. நல்ல பாக்டீரியாக்களின் ஆரோக்கியமான சமநிலை முக்கியமானது, இதில் தொந்தரவு ஏற்படுவதன் விளைவாக சோரியாஸிஸ், முகப்பரு, வறண்ட சருமம், வீக்கம், தடிப்புகள், நோய்த்தொற்றுகள் மற்றும் வேறு வகையான சரும நோய்கள் போன்ற பிரச்சினைகளுக்கு இவை வழிவகுக்கும். பாதிக்கப்பட்ட சருமத்தை குணப்படுத்தவும், பாதுகாக்கவும் பேசிலி போன்ற பலவகை வித்தியாசமான பாக்டீரியாக்கள் உதவும். சரும முதிர்ச்சியைக் கூட குறைக்கக் கூடிய சில ஸ்ட்ரெய்கள் போன்ற பொருட்களின் தேவையை அதிகரிக்கின்றன. சருமத்தை மிருதுவாக வைத்தல் மற்றும் சருமத்தின் மேற்படல அடுக்கு உரியாமல் பாதுகாத்துக் கொள்வது முதலிய நல்ல பழக்கங்கள் சருமத்தின் நுண்ணுயிர்களை பாதுக்காப்பதற்கு உதவி செய்கின்றன.
05. பிரபலமான பொருட்களுக்கு மாற்றான டிரெண்ட்டி

ரெட்டினாய்டுகள், ஆன்ட்டிஆக்ஸிடெண்ட், முதிர்ச்சி எதிர்ப்பு மற்றும் பிரகாசமாக்குதல் பொருட்களுக்கான மாற்று 2021 காணப் போகிறது. ஏற்கனவே பெரும் டிரெண்டிலுள்ள சில பொருட்களைப் பற்றி பார்ப்போம்:
01: பக்குசியோல்: வைட்டமின் A நிறைந்த தாவர எண்ணெயாகும், இது ரெட்டினோலை உணரும் மக்கள், தங்களுடைய சருமம் முதிர்ச்சித் தன்மையை எதிர்ப்பதற்காக அதை பயன்படுத்தலாம். மேலும் இது ரெட்டினோலால் போலல்லாமல், எரிச்சலுக்கெதிராகவும், பாக்டீரியா கிருமி நாசினி பொருட்களும் இதில் உள்ளது.
02: சென்டெல்லா ஏசியாடிக்கா : சீனா மற்றும் கொரியாவில் சரும பராமரிப்புக்கான மிகவும் பிரபலமான ஒரு ஆயுர்வேத மூலிகையாகும். இதில் ஃபேட்டி அமிலங்கள், அமினோ அமிலங்கள் மற்றும் நியூரோ டானிக் பயனைக் கொண்ட பைட்டோகெமிக்கல்ஸ் போன்றப் பொருட்களும் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின் C, A, B1 மற்றும் B2, பேட்டா-கரோட்டின் போன்றவை அடங்கியுள்ளது. சருமத்தை பளபளப்பாக்குதல், வீக்கத்தைக் குறைத்தல் மற்றும் சூரிய வெப்பத்திலிருந்து காத்தல் போன்ற பயன்களைத் தரக்கூடிய மிகச் சிறந்த பொருளாகவும் உள்ளது.
03: ரோஸ்ஷிப் ஆயில்: அழகியல் நிபுணர்களிடையே மிகவும் பிரசித்திப்பெற்ற ரோஸ்ஷிப் ஆயில் ஒரு ஆன்ட்டிஆக்ஸிடெண்ட் நிறைந்த மற்றும் சரும முதிர்ச்சி எதிரான பொருட்கள் அடங்கியுள்ளது. வைட்டமின் E, A & C, ஒமேகா அமிலம் மற்றும் லினோலெனிக் அமிலம் ஆகியவை நிறைந்த இந்த மூலப்பொருளில் ஒரு கொலாஜனை மறுதூண்டுதல் செய்யும் பொருளைக் கொண்டுள்ளது.
04: ரெஸ்வெராட்ரோல் : திராட்சை, பெர்ரி மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றில் தாவர அடிப்படையிலான கலவை உள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆன்ட்டிஆக்ஸிடெண்டாகும். இது முன்கூட்டிய சரும முதிர்ச்சி அறிகுறிகளை எதிர்த்து போராடுகிறது. மேலும் புதிய உயிரணு வளர்ச்சி, உயிரணுக்கு புத்துணர்ச்சி மற்றும் உயிரணு பெருக்கம் முதலியவற்றிற்கு பெரிதும் உதவுகின்றன. மிகவும் சோர்வடைந்த சருமத்தை பிரகாசமாக்குகிறது, சருமத்தில் சிவத்தல் மற்றும் அரிப்பை குறைக்கிறது. ரோசாசியாவால் பாதித்தவர்களுக்கு இது பொருத்தமாக இருக்கும்.
05: மேட்ரிக்ஸில் : மேட்ரிக்ஸில் 3000 ஒரு சரும முதிர்ச்சியை எதிர்க்கும் மற்றுமொரு டிரெண்ட்டான பொருளாகும். இது கொலாஜென் மற்றும் எலாஸ்டின் ஆகியவற்றை தூண்டுதலில் மிகவும் அறியப்பட்டதாகும். இது சருமத்தில் ஏற்படும் மெல்லிய வரிகள், சுருக்கங்களை நீக்குவது மட்டுமல்லாமல் சருமத்திற்கு ஹைட்ரேஷனையும் ஊக்கப்படுத்துகிறது. இது ரெட்டினோலைவிட மிகவும் மிருதுவானதாக அறியப்படுகிறது. மேலும், சருமத்தை ஆரோக்கியமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது.
06. PRP சிகிச்சைகள்

வேம்பயர் ஃபேசியல் வடிவத்தில் கிம் கார்தஷியனால் பிரபலப்படுத்தப்பட்டது இந்த PRP (பிளேட்லெட் ரிச் பிளாஸ்மா) ஆகும். இது 2021ம் ஆண்டில் நடைமுறையிலுள்ள மிகவும் விரைவாக பலனை தரக்கூடியதாகும். மேலும் குறைந்த வலியையை ஏற்படுத்தும். PRP சிகிச்சை என்றால் உங்கள் இரத்த மாதிரியை ஒரு டெஸ்ட் ட்யூபில் சேகரித்து, அதை நன்கு தேர்ந்த ஒரு சென்டர்ஃப்யூஜில் சிகிச்சை அளித்தப்பின், மீண்டும் அதை உங்கள் சருமத்திற்குள் செலுத்துவதாகும். குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே இந்த செறிவூட்டப்பட்ட ப்ளாஸ்மாவை பயன்படுத்தப்படுகிறது. உள்ளூர் மயக்க மருந்து கொடுக்கப்பட்டப்பின் சருமத்திற்கு கீழ் மேலோட்டமாக ஊசி போடப்படும். சரும அமைப்பு முன்னேற்றம், துளைகள் ஏற்படுவது குறைதல், சரும முதிர்ச்சி எதிர்ப்பு, கொலாஜென் வளர்ச்சி, சருமப் புத்துணர்ச்சி, சரும பளபளப்பு மற்றும் ஹைட்ரேஷன் போன்ற சில நன்மைகள் இதில் உள்ளது. உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்த உங்களுக்கு சில அமர்வுகள் அவசியம் தேவைப்படுவதால், இந்த சிகிச்சை மிகவும் பிரபலமானது.
BOX 1 - Immunity-boosting ingredients for the skin.
சருமத்திற்கு தேவையான எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்கள்
புரோபயாட்டிக்ஸ் – நல்ல பாக்டீரியாக்கள் எரிச்சலை குறைத்து சரும நோய்களுக்கு சிகிச்சையளிக்கிறது.
சன்ஸ்க்ரீன் – துத்தநாக ஆக்ஸைடு மற்றும் டைட்டானியம் டையாக்ஸைடு ஆகியவற்றை உள்ளடக்கிய மினரல் சன்ஸ்க்ரீன்கள்
செராமைட்ஸ் – சரும செல்கள் அனைத்தையும் ஒன்றாக வைத்திருக்க உதவும் ஹைட்ரேஷன் அதிகரிக்கும் லிபிட்கள் வைட்டமின் B3- செல்களை புதுப்பிக்கும் செயல்கள், சரும புத்துணர்ச்சி மற்றும் சரும தடுப்புகளை பலப்படுத்தல் ஆகியவற்றை நையாசினாமைட் ஊக்குவிக்கிறது வைட்டமின் A – சருமத்தில் ஃப்ரீ ரேடிக்கல் சேத்ததினால் உருவாகும் அறிகுறிகளை குறைப்பதற்கு, இந்த ரெட்டினோல் ஒரு சக்திவாய்ந்த ஆன்ட்டிஆக்ஸிடெண்டாகும்.
ஹையலூரோனிக்அமிலம் – சருமத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவ ஹைட்ரேஷன் மற்றும் மாஸ்யரை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. வைட்டமின் B5 - சருமத்தை மீட்பதற்கும், ஈரப்பதம் ஆழமாக வைத்திருப்பதற்கும் பாந்தோதேனிக் உதவுகிறது.
Box – 2 Components of skin microbiome
தோல் நுண்ணுயிரியின் கூறுகள்
புரோபயாட்டிக்ஸ் – சருமத்தை விரும்பும் உயிரினங்களுக்கு இந்த ஜீரணமாகாத பொருட்கள் உதவுகின்றன.
புரோபயாட்டிக்ஸ் – பலவிதமான சரும செயல்பாட்டிற்கு இத்தகைய உயிரனங்களே உதவுகின்றன. பிந்தைய
பயாட்டிக்ஸூக்கு– பயாட்டிக்ஸூக்கு முந்தைய மற்றும் புரோபயாட்டிக்குகளின் தயாரிப்புகள்
Written by Kayal Thanigasalam on Mar 10, 2021
Author at BeBeautiful.