நம் அனைவருக்கும் மூங்கில் சார்ந்த அறிமுகம் சற்று இருக்கும், ஆனால் மூங்கில் ஒரு சிறந்த எக்ஸ்பாலியாண்டாக நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? நம் சருமத்திலுள்ள டெட் செல்களை அகற்றுவதற்கு முன் நாம் அதற்கு பயன்படுத்தும் மூலப்பொருளின் தன்மையினை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் மூங்கில் ஒரு சிறந்த எக்ஸ்பாலியாண்டா? வாருங்கள் பார்க்கலாம்...

 

மூங்கில் ஒரு சிறந்த எக்ஸ்பாலியாண்டா?

மூங்கில் ஒரு சிறந்த எக்ஸ்பாலியாண்டா?

ஒரு பொருள் எவ்வளவு சிறந்ததாக கருதப்பட்டாலும் அதனை பற்றிய ஆராய்ச்சியே அதன் முழுத்தன்மையை விளக்குகிறது. வால்நட் ஸ்கரப்கள் உடனடி பயனை தந்தாலும், பிற்கால சரும பாதிப்பிற்கு அவை முக்கிய காரணமாக விளங்குகிறது. நிபுணர்களின் கருத்துப்படி, அதனுடைய வீரியத்தினால் சருமத்திற்கு பெருத்த பாதிப்பினை ஏற்படுத்தும். சரி நாம் மூங்கிலுக்கு வருவோம். மற்ற எக்ஸ்பாலியண்டை போல் அல்லாமல் சருமத்தினை பளபளப்பாகவும், பாதிப்புகள் இன்றியும் செயல்படும். இது சருமத்தில் நன்கு ஊடூருவி உள்ளேயுள்ள எண்ணெய் பிசுக்கை அகற்றி நல்ல பொலிவினை தரும்.

 

மூங்கிலை எக்ஸ்பாலியாண்டாக பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்

மூங்கிலை எக்ஸ்பாலியாண்டாக பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்

மூங்கிலிலுள்ள சிலிக்கா என்னும் மூலப்பொருள் முகப்பருக்களை நீக்கி, சருமத்திற்கு நல்ல ஊட்டமளித்து, முகத்திலுள்ள சுருக்கங்களை வெகுவாக குறைக்கும். அப்போது இது ஒரு சிறந்த மூலப்பொருள் தானே? மேலும் இது முகப்பருக்கள் மிக்க, மென்மையான போன்ற அனைத்து வகையான சருமங்களுக்கும் பொருந்தும். இது முதிர்ச்சி குறிகள், முகப்பருக்கள், முகச்சுருக்கங்கள் போன்ற சுவடுகளை முகத்திலிருந்து மொத்தமாக நீக்கிவிடும். நமக்கு ஒரு இயற்கையான எக்ஸ்பாலியன்ட் கிடைத்துவிட்டது? அப்படித்தானே!