நானும் அலறுகிறேன், நீங்களும் அலறுகிறீர்கள்,நாம் அனைவரும் அலறுகிறோம்... ஸ்ன்ஸ்க்ரீன் உங்களுடைய அன்றாடம் செய்யும் சருமப்பராமரிப்பில் மிக முக்கியமான பங்கை ஸன்ஸ்க்ரீன் அளிக்கின்றது.
வெளியே பனி, மேகமூட்டம், அல்லது வெப்பம் போன்ற எந்த வகையான வானிலை சூழல் இருந்தாலும், போதுமானளவு ஸன்ஸ்க்ரீனைத் தடவிக் கொள்ளாமல் வெளியில் செல்வது நீங்கள் செய்யும் மிகப் பெரிய பாவச் செயலாகும்.
வருடம் முழுக்க சூரியக் கதிர்களிடமிருந்து உங்கள் சருமத்தை பாதுக்காக்க வேண்டிய அவசியமாவதால், ஒரு நல்ல ஸன்ஸ்க்ரீனை தேர்ந்தெடுத்து, அதை வாங்கிப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.
ஸன்ஸ்க்ரீனில் எந்த மூலப் பொருளை தவிர்க்க வேண்டும் என்பது முதல் எந்த SPF எண் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது வரையிலும் உள்ள விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கு, ஸன்ஸ்க்ரீனை தேர்வு செய்யும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்களைப் பற்றி இங்கே விளக்குகிறோம். எங்களை நம்புங்கள் இந்த தயாரிப்புகள் உங்களை நிச்சயம் ஏமாற்றாது.
- #01 : தயாரிப்புத் தேதி#01 : தயாரிப்புத் தேதியை மிகவும் கவனமாக படிக்க வேண்டும்
- #02 : SPF 30 அல்லது அதற்கு மேல் உள்ள ஒரு ஸன்ஸ்க்ரீனை வாங்க வேண்டும்.
- #03 : ஸன்ஸ்க்ரீன் ஸ்ப்ரேவை பயன்படுத்துவதை தவிர்க்கவும்
- #04 : டைட்டானியம் டையாக்ஸைடு அல்லது துத்தநாக ஆக்ஸைடு இருப்பை பரிசோதிக்க வேண்டும்.
- #05 : உங்கள் சருமம் எண்ணெய் மற்றும் முகப்பருக்களால் பாதிப்படைந்திருந்தால், தண்ணீர் - அடிப்படையான ஸன்ஸ்க்ரீனையே தேர்வு செய்யவு#05 : உங்கள் சருமம் எண்ணெய் மற்றும் முகப்பருக்களால் பாதிப்படைந்திருந்தால், தண்ணீர் - அடிப்படையான ஸன்ஸ்க்ரீனையே தேர்வு செய்யவு
#01 : தயாரிப்புத் தேதி#01 : தயாரிப்புத் தேதியை மிகவும் கவனமாக படிக்க வேண்டும்

காலாவதியான பொருளை நீங்கள் வாங்கப் போவதில்லை என்பதில் எந்த சந்தேகமும் இல்லாவிட்டாலும், சமீபத்தில் புதிதாக வந்த தொகுப்பிலிருந்து ஸ்ன்ஸ்க்ரீனை தேர்ந்தெடுத்து வாங்குவது மிக முக்கியமான விஷயமாகும். சமீபத்தில் புதிதாக வந்த தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுத்த ஸன்ஸ்க்ரீனை பயன்படுத்தும் போது அந்தப் பொருளின் மிகச் சிறந்த செயல்திறனைக் கண்டு நீங்களே ஆச்சரியமடைந்து போவீர்கள். ஸன்ஸ்க்ரீனை நீண்ட நாட்கள் பயன்படுத்தாமலே அலமாரியில் வைத்திருந்தால், ஸன்ஸ்க்ரீனிலுள்ள மூலப் பொருட்கள் மிக எளிதாக கெட்டுப் போய்விடும். எனவே, சமீபத்தில் புதிதாக வந்த தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், புதிய ஸன்ஸ்க்ரீனை வாங்குவதற்கு , பழைய ஸன்ஸ்க்ரீன் ட்யூப் அல்லது பாட்டிலுள்ள முழுவதையும் பயன்படுத்தியாகி விட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். இது காலாவதியாகும் வரை பயன்படுத்தாமலே அந்தப் பொருளை வாங்கி வீணாவதை தவிர்க்க முடியும்.
#02 : SPF 30 அல்லது அதற்கு மேல் உள்ள ஒரு ஸன்ஸ்க்ரீனை வாங்க வேண்டும்.

சருமம் பழுப்பு நிறமடைதல் மற்றும் முன்கூட்டிய சரும முதிர்ச்சி போன்ற பிரச்னைகள் புறஊதாக் கதிர்கள் A (UVA) சருமத்தை பாதிப்பதனால் ஏற்படும் விளைவாகும். அதேசமயத்தில் புறஊதாக் கதிர்கள் B (UVB) சருமத்தை பாதிப்பதன் விளைவாக சருமப் புற்று நோய் போன்ற மிகக் கொடூரமான பிரச்னைகள் சருமத்தைத் தாக்கும். உங்கள் சருமத்தை சிவப்படையச் செய்வதற்கு சூரியனின் புறஊதாக் கதிர்கள் எத்தனை நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதை உங்களுடைய ஸன்ஸ்க்ரீனிலுள்ள SPFஎண் கூறிவிடும். உதாரணத்திற்கு, உங்கள் ஸன்ஸ்க்ரீன் ஆக இருந்தால், இது நீங்கள் ஸ்ன்ஸ்க்ரீன் போடாமல் இருப்பதைவிட 30 மடங்கு அதிகமாக உங்கள் சருமத்தைப் பாதுகாக்கின்றது. உங்கள் சருமத்திற்குள் 3 சதவீத புறஊதாக் கதிர் B –யை (UVB) ஊடுருவ SPF 30 அனுமதிக்கின்றது. ஆனால், 2 சதவீத புறஊதாக் கதிர்கள் சருமத்திற்கு ஊடுருவ SPF 50 அனுமதிக்கின்றது. எனவே, Ponds Sun Protect Non-Oily Sunscreen SPF 50. போன்ற உயர்தர SPF உடன் கூடிய ஸன்ஸ்க்ரீனை வாங்குவது மிகவும் உசிதமான செயலாகும்.
#03 : ஸன்ஸ்க்ரீன் ஸ்ப்ரேவை பயன்படுத்துவதை தவிர்க்கவும்

உங்களுடைய விருப்பத்திற்கேற்ப, ஜெல், க்ரீம் மற்றும் லோஷன் ஆகிய பல வடிவங்களில் ஸன்ஸ்க்ரீன் வருகின்றது. இருப்பினும், ஸ்ன்ஸ்க்ரீன் ஸ்ப்ரேயை பயன்படுத்துவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். சன்ஸ்கிரீன் ஸ்ப்ரேக்கள் நிறைய தயாரிப்பு கழிவுகளை வெளியேற்றுகிறது, அதுமட்டுமல்லாமல் இத்தகைய ஸ்ப்ரேயைப் பயன்படுத்தும்போது காற்றிலுள்ள மாசுகளையும் சேர்த்தே நீங்கள் சுவாசிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். சன்ஸ்கிரீன் ஸ்ப்ரேக்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக இருந்தாலும், நீங்கள் அதை போதுமான அளவு பயன்படுத்தினீர்களா என்பதை தெரிந்து கொள்வது மிகக் கடினம். அதற்கு பதிலாக, விடுமுறை நாட்களில் கடற்கரையில் இருக்கும் போது சன்ஸ்கிரீன் ஸ்ப்ரேக்களை நீங்கள் பயன்படுத்த முடியும். வீட்டை விட்டு வெளியே கிளம்புவதற்கு முன் போதுமான சன்ஸ்கிரீன் லோஷன் அல்லது கிரீம் தடவிக் கொள்ளவும், பின்னர் கடற்கரையில் இருக்கும்போது அதன்மேல் ஸ்ப்ரேயின் மேல் அடுக்கவும்.
#04 : டைட்டானியம் டையாக்ஸைடு அல்லது துத்தநாக ஆக்ஸைடு இருப்பை பரிசோதிக்க வேண்டும்.

டைட்டானியம் டை ஆக்சைடு மற்றும் துத்தநாக ஆக்ஸைடு போன்ற தாதுக்கள் கனிம இயற்பியல் சூரிய தடுப்பான்களாக சன்ஸ்கிரீன்களுக்குள உட்செலுத்தப்படுகின்றன. இந்த பொருட்கள் புறஊதாக் கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதற்காக தயாரிப்புடன் சேர்க்கப்பட்டால், அவை சருமத்திற்கு தீங்குகளை விளைவிக்கும். இத்தகைய சன்ஸ்கிரீனைப் பயன்படுத்திய பிறகு, உங்கள் முகம் வெளிறிப் போய் அல்லது பேய்முகம் போன்று காட்சியளிப்பதை நீங்கள் எப்போதாவது கவனித்திருந்தால், அந்தத் தயாரிப்பில் துத்தநாக ஆக்ஸைடு சேர்த்திருப்பதே அதற்கு காரணமாகும் எனவே, சன்ஸ்கிரீன் வாங்குவதற்கு முன் பேக்கேஜிங்கில் மீது அச்சிடப்பட்டிருக்கும் மூலப்பொருட்களை சரிபார்த்து வாங்கவும்.
#05 : உங்கள் சருமம் எண்ணெய் மற்றும் முகப்பருக்களால் பாதிப்படைந்திருந்தால், தண்ணீர் - அடிப்படையான ஸன்ஸ்க்ரீனையே தேர்வு செய்யவு#05 : உங்கள் சருமம் எண்ணெய் மற்றும் முகப்பருக்களால் பாதிப்படைந்திருந்தால், தண்ணீர் - அடிப்படையான ஸன்ஸ்க்ரீனையே தேர்வு செய்யவு

ம்.
எண்ணெய், முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமம் உள்ள அனைவருக்கும் தேவைப்படுகின்ற, ஒரு உயிர்-காக்கும் குறிப்புகளை இங்கே தருகிறோம்.
உங்களுக்கு சருமம் எண்ணெய் அதிகம் வழிவதால், சன்ஸ்கிரீனை ஒட்டுமொத்தமாக தவிர்க்க முடியாது. என்றாலும், உங்கள் சரும வகைக்கேற்ற ஸ்ன்ஸ்க்ரீனை பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியமானதாகும்.
அதிகப்படியான எண்ணெயைத் தடுக்க, எண்ணெய் அடிப்படையிலான ஒன்றிற்கு பதிலாக நீர் சார்ந்த சன்ஸ்கிரீனில் முதலீடு செய்யுங்கள். நீர் சார்ந்த சன்ஸ்கிரீன் லேசானது மற்றும் உங்கள் சருமத்தை வெடிக்கச் செய்யாது. கூடுதலாக, இது உங்கள் சருமத்தில் லேசாக இருக்கும்.
எண்ணெய் வழிவதை ஆரம்பத்திலேயே தடுத்து பாதுகாப்பு பெறுவதற்கு, எண்ணெய்- அடிப்படையான ஸன்ஸ்க்ரீனுக்கு பதிலாக திரவ- அடிப்படையான ஸன்ஸ்க்ரீனையே தேர்வு செய்யவும். திரவ- அடிப்படையான ஸன்ஸ்க்ரீன் மிகவும் மென்மையாக இருப்பதோடு, சருமத்தில் பிளவுகளையும் ஏற்படுத்தாது. கூடுதலாக, இது உங்கள் சருமத்திற்கு மிருதுவான தன்மையை ஏற்படுத்தும்.
Written by Kayal Thanigasalam on Nov 08, 2021
Author at BeBeautiful.