ஊரடங்கு காலத்தில் உங்களுக்கு ஏற்படும் சருமப் பாதிப்புகளை எதிர்கொள்ளக் கூடிய 5 வகையான முகப்பூச்சு உட்பொருட்கள்

Written by Kayal Thanigasalam25th Jul 2021
 ஊரடங்கு காலத்தில் உங்களுக்கு ஏற்படும் சருமப் பாதிப்புகளை எதிர்கொள்ளக் கூடிய 5 வகையான முகப்பூச்சு உட்பொருட்கள்

தரமான உட்பொருளுடன் தயாரிக்கப்பட்ட இந்த முகப்பூச்சு உங்கள் சருமத்திற்கு விரைவாகவும், எளிதாகவும் சிறந்த சிகிச்சையை வழங்கக் கூடிய சிறந்த வழியாகும் மற்றும் சில நிமிடங்களில் புத்துணர்ச்சியையும் தரக் கூடியதாகும். இது உண்மைதான். ஏனெனில், தற்போதைய ஊரடங்கு காலகட்டத்தில் சலூன்கள் எல்லாம் மூடப்பட்டிருப்பதால், உங்களுக்கு நிபுணர்களின் சேவைகள் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால், தரமான உட்பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த முகப்பூச்சு உங்களுக்கு தேவைப்படுகின்ற சேவைகளை ஓரளவு பூர்த்தி செய்யும். உங்களுடைய வழக்கமான சருமப்பராமரிப்புடன் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்த முகப்பூச்சைப் பயன்படுத்துவதால், உங்களின் சருமத்திற்கு பாதுகாப்பாகவும், வறட்சிக்கு நிவாரணம் அளிக்கவும், மற்றும் உங்கள் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவும். இந்த ஊரடங்கு காலத்தில் ஏற்படும் சருமப் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு நீங்கள் தேடும் 5 வகையான உட்பொருள்களைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

 

1. வைட்டமின் C

5. வைட்டமின் E

உங்கள் சருமத்திற்குத் தேவைப்படுகின்ற பொலிவை அதிகரிக்க நீங்கள் நினைக்கும் போது, அதற்கு வைட்டமின் C விட நம்பகமான உட்பொருள் வேறு எதுவும் இல்லை! ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்தவை, சருமத்திற்கு சூரியனால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும் உதவும் ஆன்டிஆக்ஸிடெண்ட்கள் அதிகமுள்ள வைட்டமின் சி முகப்பூச்சகள் இந்த ஊரடங்கு காலத்தில் உங்கள் சருமத்திற்கு ஆரோக்கியமான பொலிவான சருமத்தை பராமரிக்க உதவுகின்றன. கரும்புள்ளிகள் மற்றும் தலைகீழ் சருமநிற மாற்றம் ஆகியவற்றை மறைத்து இளமையான தோற்றத்தை அளிப்பதற்கு இந்த மூலப்பொருள் உதவுகிறது!

பிபீ பிக்ஸ் : Ponds Brightening Sheet Mask With Vitamin C And 100% Natural Pineapple

 

2. ஓட் கெர்னல்

5. வைட்டமின் E

ஓட் வெறும் காலை உணவு மாத்திரமல்ல, உங்கள் சருமத்தில் பயன்படுத்தக் கூடிய பெரும்பாலும் அமைதியாக செயல்படக்கூடிய உட்பொருளில் ஒன்றாகும். சருமத்தில் ஏற்படும் வீக்கத்தை குணப்படுத்துவதற்கு உதவி செய்யும் பேடா-க்ளூகன், லிபிட்ஸ் மற்றும் போதுமான கொழுப்பு அமிலங்கள் போன்ற உட்பொருட்கள் சேர்ந்திருப்பதால். ஓட் கெர்னல் சாறுகள் சருமத்திற்கு மென்மையையும் பாதுகாப்பு சுவர்களை பலப்படுத்தவும் உதவுகின்றன. அனைத்துவிதமான சரும வகைகளுக்கும் பொருந்தக்கூடிய இந்த ஓட் கெர்னல், உறிஞ்சும் தன்மையுடையது, அதுமட்டுமல்லாமல் அழுக்கு சேராவண்ணம் சருமத் துவாரங்களை அடைத்து பாதுககாக்கக் கூடியது.

பிபீ பிக்ஸ்: St. Ives Oatmeal Soothing Mask Sheet

 

3. நியாசினமைடு

5. வைட்டமின் E

உங்கள் தோல் பராமரிப்புக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டிய இந்த பலவித பயன்களைக் கொண்ட நியாசினமைடு, வைட்டமின் B3யின் மற்றொரு வடிவமாகும். சிவப்படைதல் குறைப்பது, எண்ணெய் சுரப்பதை வழிமுறைப்படுத்துவது, அதிகளவு நிறமாற்றத்தை தடுப்பது, மற்றும் சருமத்தில் மெல்லிய வரிகள் தோன்றுவதை குறைப்பது, சுருக்கங்களை தடுப்பது போன்றவற்றை செயலாற்றுவதில் மிகவும் பிரபலமானது. இப்போது அழகு நிலையத்திற்கு செல்வத்திற்கான அனுமதியில்லாததால், இந்த நியாசினமைடை உங்களுடைய அன்றாட சருமப்பராமரிப்பில் சேர்த்துக் கொண்டால், ஒரு பெரிய மாற்றத்தை நீங்கள் காணமுடியும்

பிபீ பிக்ஸ்: Pond’s Skin Brightening Serum Mask With Vitamin E & Niacinamide + Sea Daffodil

 

4. பென்டோநைட் க்ளே

5. வைட்டமின் E

உங்கள் உடலுக்கு எந்த அளவுக்கு நஞ்சற்ற தன்மைத் தேவைப்படுகிறதோ அதே அளவுக்கு உங்கள் சருமத்திற்கும் தேவைப்படுகின்றது. அதற்கு இந்த பென்டோநைட் க்ளேவை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் சருமத் துவாரங்களை இந்த மேட்டிஃபையிங் பவர்ஹவுஸ் நன்றாக சுத்தம் செய்வதுடன், துவாரங்களுக்குள் அழுக்கு சேராமலும், ஏற்கனவே தங்கியுள்ள எண்ணெய் பிசுக்கையும் அகற்றி சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றது. இதில் பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறனுடையது மட்டுமல்லாமல் முகப்பருக்களை குணப்படுத்தக்கூடிய அரியத் தன்மையும் இதில் உள்ளது. சருமத்தை மென்மையாக்கும் தன்மைக் கொண்ட பென்டோநைட் க்ளே, இந்த ஊரடங்கு காலத்தில் ஏற்படும் சரும் உணர் பிரச்னைகளை மென்மையாக தீர்க்கவும் உதவி செய்யும்.

பிபீ பிக்ஸ்: Lakmé Absolute Perfect Radiance Mineral Clay Mask

 

5. வைட்டமின் E

5. வைட்டமின் E

ஈரத்தை நன்றாக உறிஞ்சக் கூடியதும், ஆற்றல்மிக்க ஆன்டிஆக்ஸிடெண்டும் உள்ள வைட்டமின் Eஐ எப்போதும் வீட்டிலேயே வைத்துக் கொள்ள வேண்டிய உட்பொருளாகும். நீங்களே சருமப் பராமரிப்புக்கான முகப்பூச்சை செய்து கொள்ளும் போது ஆயில் காப்ஸ்யூல்களை சேர்த்துக் கொள்ளலாம் அல்லது வைட்டமின் Eஐ உள்ளடக்கியப் பொருட்களைப் பயன்படுத்தும் போது உங்கள் சருமத்திற்கு ஆசுவாசத்தையும், அமைதியையும் தர உதவும். உங்கள் சன்ஸ்க்ரீனின் சூரியப்பாதுகாப்பு அம்சத்தை அதிகரிக்க இது உதவுகிறது. மேலும், அதிகளவு நிறமாற்றம், வறட்சி போன்ற பிரச்னைகளை சமாளிக்கவும் இது உதவி செய்கின்றது

பிபீ பிக்ஸ்: Dermalogica Skin Hydrating Masque

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
637 views

Shop This Story

Looking for something else