வீட்டை விட்டு வெளியே கால் வைத்தாலே முக மாஸ்க் அணிந்து செல்வது இப்போதெல்லாம் சகஜமாகிவிட்டது. இன்னும் பரவி வரும் கொள்ளை நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இதுவே சிறந்த வழி. ஆனால் முக மாஸ்க் அணிவதால் வேறு பிரச்சனைகளும் ஏற்படுகிறது. வியர்த்து ஒழுகும். காதில் பிரஷர் ஏற்பட்டு வலிக்கும். இதனால் ரேஷ் ஏற்படுவதும் உண்டு.

இன்ஸ்டாகிராமில் @omgartistry என அறியப்படும் ஃப்ளோரிடாவைச் சேர்ந்த ஹேர் ஸ்டைலிஸ்ட் ஒலிவியா ஸ்மாலே இதற்கு ஒரு அற்புதமான தீர்வை சமீபத்தில் கண்டுபிடித்தார். அதுவும் ஸ்டைலான தோற்றத்துடன். நீங்களே பாருங்களேன்.

 

க்ளிப் மாஸ்க்

க்ளிப் மாஸ்க்

Image courtesy: @omgartistry

ஹேர் க்ளிப்களும் ஹேர் ஸ்லைடுகளும் 2019ஆம் ஆண்டு முதலாகவே மிகவும் பாப்புலராக உள்ளன. அந்த டிரென்ட் காணாமல் போவதற்கான அடையாளம் எதுவும் தெரியவில்லை. பின்வரும் எளிய வழிகளை பின்பற்றினால் அந்த ஸ்டைல் உங்களுடையதாகும்.

ஸ்டெப் 1: உங்கள் விருப்பப்படி சிகை அலங்காரம் செய்துகொள்ளுங்கள். அது போனிடெயில், கொண்டை, முன்பகுதியில் சுருள் முடி என எதுவாகவும் இருக்கலாம்.

ஸ்டெப் 2: மாஸ்க்கின் எலாஸ்டிக் பகுதியை காதின் பின்புறம் மாட்டுவதற்கு பதில், அதை ஹேர்ஸ்டைலுடன் க்ளிப் செய்யுங்கள். ஒலிவியா ஸ்மாலே அதை பாப்புலராக்கி, டிரென்ட் உருவாக்கிய பிறகு இன்ஸ்டாகிராமில் இன்னும் நிறைய பேர் அது போன்ற தீர்வுகளை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதில் ஒன்றுதான் இது.

 

பந்தனா மாஸ்க்

பந்தனா மாஸ்க்

Image courtesy: @un.rooted

ஸ்டெப் 1: பந்தனாவை தலையின் மேல் பகுதியில் வைக்கவும்.

ஸ்டெப் 2: தலையின் பின்பகுதியில் அதைக் கட்டுவதற்கு முன்பு, முக மாஸ்ட் எலாஸ்டிக் வழியாக அதை ஒரு சுற்று சுற்றவும்.

ஸ்டெப் 3: இது உராய்வை நீக்கும். உங்களுக்கு ஸ்டைலாகவும் தோற்றம் கிடைக்கும். அல்லது பந்தனா அல்லது ஸ்கார்ஃப்கூட மாஸ்க் ஆகலாம். இது பாதுகாப்பும் கொடுக்கும், வழக்கமான மாஸ்க் மூலம் காதில் வலி ஏற்படுவதற்கும் டாடா பைபை சொல்லலாம்.