கூந்தல் பிரச்சனையை சரி செய்ய நாம் பலமுறை இதம் நிறைந்த சூடான ஆயில் மசாஜை நாடியிருக்கிறோம். இது மனநிலையையும் மாற்றக்கூடியது. இரவு நல்ல தூக்கம் வரவேண்டும் என்றாலும் சரி அல்லது கூந்தல் தோற்றம் சிறக்க வேண்டும் என்றாலும் சரி, ஆயில் மசாஜ் எளிய தீர்வாக அமைகிறது. இருப்பினும், ஹேர் ஆயிலின் முழு பலனைப் பெற வேண்டும் எனில், உங்கள் கூந்தல் வகைக்கு பொருத்தமான சரியான ஹேர் ஆயிலை தேர்வு செய்வது முக்கியம். இதற்கான வழிகாட்டி:

 

சுருள் கூந்தல்

சுருள் கூந்தல்

பல பெண்கள் ஏங்கும் செழுமையான, சுருள் சுருளாக நீளும் கூந்தல் கொண்டவர் நீங்கள் எனில், உங்களுக்கு பாதாம் எண்ணெய் பொருத்தமாக இருக்கும். பாதாம் எண்ணெய் வைட்டமின் ஏ, பி, இ  மற்றும் ஒமேகா -3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளதால், உங்கள் கூந்தலுக்கு போஷாக்கு அளிப்பதோடு, அதன் மயிர்கால்களை வலுவாக்கி மென்மையான தோற்றம் அளிக்கிறது.  இது உங்கள் கூந்தலின் இயல்பான சுருள் தன்மையையும் மேம்படுத்துகிறது.

மெல்லிய கூந்தல்

மெலிதான கூந்தலில் எண்ணெய் தடவுவதில் என்ன பிரச்சனை எனில், எண்ணெய் பசை மிகுந்த கூந்தல் தட்டையாகிவிடலாம். ஆனால், ரோஸ் ஆயில் அல்லது ஆர்கன் ஆயில் போன்ற சரியான எண்ணெயை தேர்வு செய்தால், இந்தச் சிக்கலை அழகாக சமாளிக்கலாம். ரோஸ் ஆயில் மிகவும் லேசானது. எனவே, கூந்தலில் அதிகம் பரவாமல் மெலிதாக இருக்கும். சிடுக்குகளை சரி செய்து, பளபளப்பை அளிக்க கூடியது. ஆர்கன் ஆயிலுக்கு அறிமுகம் தேவையில்லை. இது வைட்டமின் இ நிறைந்தது. அதிக பசை இல்லாதது. எனவே, இது கூந்தலை ஈரப்பதம் மிக்கதாக்கி அதை அடர்த்தியாக தோன்றச் செய்கிறது.

 

உலர் கூந்தல்

உலர் கூந்தல்

உங்கள் கூந்தல், சுருள், அலை அல்லது நீளமான தன்மை என எப்படி இருந்தாலும் இயல்பாக உலர்தன்மை பெற்றிருக்கலாம். இந்தச் சிக்கலை சமாளிக்க, ஆலிவ் ஆயில் அல்லது கிரேப்சீட் ஆயிலை நாடலாம். மத்தியதரைக்கடல் பகுதியில் பிரபலமாக இருக்கும் ஆலிவ் ஆயில் ஆன்டிஆக்ஸ்டென்ட் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. தலைமுடியில் ஈரப்பதத்தை தக்க வைத்து அதன் கேராட்டின் தன்மையையும் தக்க வைக்கிறது. உலர் கூந்தலுக்கு இவை மிகவும் அவசியம். உலர் தன்மை கூந்தலுக்கு மற்றொரு நல்ல தேர்வாக கிரேப்சீட் ஆயில் அமைகிறது. இதில் உள்ள வைட்டமின் இ மயிர்கால்களின் பாதிப்பை சரி செய்கிறது. ஆக அடுத்த முறை தலைமுடியை மசாஜ் செய்ய தீர்மானிக்கும் போது உங்களுக்கான ஆயில் எது என்பது புரிந்திருக்கும். 

 

அடர்த்தியான கூந்தல்

அடர்த்தியான கூந்தல்

பொதுவாக அடர்த்தியாக கூந்தல் கொண்டவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என கருதப்படுகிறது. இது உண்மை இல்லை. அடர்த்தியான கூந்தல் கொண்ட பெண்கள் அதை உறுதியாக, ஊட்டச்சத்து மிக்கதாக வைத்திருக்க வேண்டும். இதற்கு தேங்காய் எண்ணெய் மிகவும் ஏற்றது என பரிந்துரைக்கிறோம். தேங்காய் எண்ணெய் ஊட்டச்சத்து மிக்கதாக இருக்கிறது. மேலும் இதன் பூஞ்சைக்கு எதிரான தன்மை கூந்தலை மென்மையாக்கி, உச்சந்தலையை சீராக்கி ஆழமாக ஊட்டச்சத்து அளிக்கிறது. பெரும்பாலான கூந்தல் பிரச்சனைகளுக்கு இந்துலேகா பிரிங்கா ஆயில் ஏற்றது.  இதன் ஆயுர்வேத அமைப்பானது வேம்பு, ஆலோவேரா மற்றும் நெல்லியின் அருங்குணங்கள் மற்றும் தேங்காய் எண்ணெயின் நற்பண்புகளுடன் கலந்துள்ளன. கூந்தலை சீராக்குவதுடன், உச்சந்தலையை ஆரோக்கியமாக்கி, புதிய முடி வளர்வதையும் ஊக்குவிக்கிறது.

அலை கூந்தல்

இயல்பாகவே அலைபோன்ற தன்மை கொண்டுள்ள கூந்தலுக்கு விளக்கெண்ணெய் மற்றும் ஜோபோபா ஆயில் ஏற்றது. விளக்கெண்ணெய் கூந்தலில் ஈரப்பதத்தை தக்க வைத்து, அதன் அடர்த்தியை கூட்டுகிறது. இது சிடுக்கையும் அகற்றி அலை போன்ற தன்மையை மேம்படுத்துகிறது. ஜோபோபா ஆயில் உச்சந்தலை தன்மைக்கு ஏற்றதாக இருக்கிறது. இது தலைமுடி நீர்த்தன்மை மிக்கதாக செய்து, அதை அதிக பசை இல்லாமலும் பராமரிக்கிறது. அலை போன்ற கூந்தலுக்கு கச்சிதமானது=-