மகா சோம்பேறி என்றாலும்கூட பிசுபிசுப்பான கூந்தலை சகித்துக்கொள்ள மாட்டார்கள். அருவருப்பு மட்டுமல்ல, அசெளகரியம், அரிப்பு என பல தொல்லைகளும் ஏற்படும். ஆனால் எக்ஸ்ட்ரா ஐந்து நிமிடம் ஷாம்பூ போட்டு, கண்டிஷனர் போட்டு, ஐந்து மணி நேரம் ஈரத் தலையில் இருப்பது முடியாத காரியம். சரிதானே.

தலைக்குக் குளிக்காமலே பிசுபிசுப்பைப் போக்குவதுதான் இதற்கு ஒரே தீர்வு. தொப்பி அணிந்து அழுக்கை மறைக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த கூந்தலும் அம்பலப்பட்டு நிற்பதை அது தடுக்காது. என்னதான் செய்வது. இதோ டிப்ஸ்.

 

1. ட்ரை ஷாம்பூ

1. ட்ரை ஷாம்பூ

ட்ரை ஷாம்பூ பயன்படுத்துவதுதான் சிம்பிள் தீர்வு. இந்த அற்புதமான பொருளை நீங்கள் உடனே பயன்படுத்திப் பாருங்கள். சில ஸ்ப்ரே அடித்தால் போதும். சில நாட்கள் தலைக்குக் குளிக்காமலே பிசுபிசுப்பைப் போக்கிவிடலாம். இது அடர்த்தியான கூந்தல் இருப்பது போன்ற லுக் கொடுக்கும். அது மட்டுமல்ல, கூந்தலின் தன்மையும் சூப்பராக இருக்கும். இதை கூந்தலின் வேர்களில் ஸ்ப்ரே செய்தால் போதும். பிறகு ஒரு நிமிடம் கழித்து, தேய்த்து, ப்ரஷ் செய்ய வேண்டும். ரொம்ப சிம்பிள்தானே.

 

2. பேபி பவுடர்

2. பேபி பவுடர்

உங்கள் ஃபேவரைட் ட்ரை ஷாம்பூ தீர்ந்துவிட்டதா. கவலை வேண்டாம். கூடுதலான பிசுபிசுப்பை நீக்க சிம்பிள் தீர்வு உள்ளது. பேபி பவுடர் ஒரு மல்டி பர்பஸ் அழகுப் பொருள். தலையில் உள்ள பிசுபிசுப்பை நொடிப்பொழுதில் நீக்கும். வகிடு எடுக்கும் பகுதியில் கொஞ்சமாக அப்ளை செய்யவும். பிசுபிசுப்பு போயே போச்சு.

 

3. கார்ன்ஸ்டார்ச்

3. கார்ன்ஸ்டார்ச்

பேபி பவுடர் இல்லையா, கார்ன்ஸ்டார்ச் உதவியாக இருக்கும். ஆனால் கருநிற கூந்தல் கொண்டவர்களுக்கு இது சரியாக வேலை செய்யாது. வெள்ளை திட்டுக்கள் தெரியும். அதனுடன் கொஞ்சம் கோகோ பவுடர் சேர்த்து கூந்தலின் வேர்களில் அப்ளை செய்யலாம். உங்கள் கூந்தலின் நறுமணம் ஒரு ப்ளஸ்.

 

4. ப்ளாட்டிங் பேப்பர்

4. ப்ளாட்டிங் பேப்பர்

முகத்தில் உள்ள பிசுபிசுப்பை நீக்குவது போலவே தலையில் உள்ள பிசுபிசுப்பை நீக்கவும் ப்ளாட்டிங் பேப்பர் உதவும். முடியை ஒதுக்கி விட்டுக்கொண்டு ப்ளாட்டிங் பேப்பரை பயன்படுத்தினால் போதுமானது. செம ஃபிரெஷ்ஷான, நாட்டியமாடும் கூந்தல் ரெடி.

 

5. மினி ப்ளோ அவுட்

5. மினி ப்ளோ அவுட்

கூந்தல் பிசுபிசுப்பாக இருந்தால் படிந்துவிடும். நல்ல லுக் கிடைக்காது. ப்ளோ ட்ரையர் பயன்படுத்தி கூடுதல் பிசுபிசுப்பை நீக்குவது பலன் தரும். பிசுபிசுப்பைப் போக்குவதோடு அலை பாயும் கூந்தலும் கிடைக்கும். ஒரு வட்டமான ப்ரஷ் வைத்துக்கொண்டு, முன் நெற்றியை சுற்றியுள்ள பகுதிகளில் ப்ளோ ட்ரையர் பயன்படுத்தலாம்.