எவ்வளவு உஷாராக இருந்தாலும் எவ்வளவு ஜாக்கிரதையாக அழகுக் கலை பொருட்களை தேர்வு செய்தாலும் தப்பிக்க முடியாது. கூந்தலுக்கு கலர் கொடுக்கும் போது முடியை பதம் பார்த்துவிடும். ஹேர் டை என்றாலே அம்மோனியா இருக்கும். இது முடியின் வேர்களில் படியும். இது கூந்தலின் தன்மையை பாதிக்கும். முடி வறண்டு போகலாம். அம்மோனியா இல்லாத டை என்று பலரும் விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் அதிக அளவில் பயன்படுத்தினால் மட்டுமே பலன் தரும். அது மட்டுமல்ல. நீண்ட நேரம் ஊற வைக்கவும் தேவைப்படும். அதனால்தான் கலரிங் செய்த ஒரு சீஸனுக்குப் பிறகு கூந்தலின் டேமேஜ் ஆரம்பமாகிறது. எவ்வளவு கவனமாக இருந்தாலும். ஆனால் நம்பிக்கை இழக்க வேண்டாம். கலர் செய்த பிறகு என்ன செய்கிறோம் என்பதில்தான் இதை வென்றெடுப்பதற்கான ரகசியம் உள்ளது. இதோ டிப்ஸ்:

 

01. சல்ஃபேட் இல்லாத பொருட்கள் பயன்படுத்தவும்

01. சல்ஃபேட் இல்லாத பொருட்கள் பயன்படுத்தவும்


ஆழமாக க்ளீன் செய்வதற்காக சல்ஃபேட் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கலர் ட்ரீட்மென்ட் செய்யப்பட்ட கூந்தலில் இது பாதிப்பு ஏற்படுத்தலாம். முடியின் நீர்ச் சத்தினை உறிஞ்சிவிடும் தன்மை கொண்டது சல்ஃபேட். இதனால் கலர் சீக்கிரமே மாயமாகும், கூந்தல் டல்லாக மாறிவிடும். TRESemmé Pro Protect Sulphate Free Shampoo போன்ற சல்ஃபேட் இல்லாத ஃபார்முலா பயன்படுத்தவும். கூடவே கண்டிஷனரும் பயன்படுத்த வேண்டும். கலர் ட்ரீட்மென்ட் செய்துகொண்ட கூந்தலுக்கான சிறந்த ஷாம்பூக்களில் இதுவும் ஒன்று. அதோடு நிறமும் நீண்ட நேரம் தங்கியிருக்கும். இந்த கண்டிஷனர் டேமேஜ் ஆன கூந்தலுக்கு ஊட்டச் சத்து கொடுக்கக்கூடியது. அதனால் கூந்தலில் சிடுக்கு விழாது. அலைபாயும் கூந்தல் கிடைக்கும்.

 

 

வன்மையான பொருட்களிலிருந்து கூந்தலுக்கு பாதுகாப்பு

வன்மையான பொருட்களிலிருந்து கூந்தலுக்கு பாதுகாப்பு

கூந்தலுக்கு சூரியன் ஏற்படுத்தும் பாதிப்பும் அதிகம். குறிப்பாக கலர் செய்யப்பட்ட கூந்தலுக்கு. ஹேர் டையில் இருக்கும் வேதிப் பொருட்கள் யு.வி கதிர்கள் படும் போது செயல் இழக்கும். மாசுபாடு, கடுமையான தண்ணீர் போன்றவற்றிலிருந்தும் கூந்தலைக் காக்க வேண்டும். இதெல்லாம்கூட கூந்தல் பொலிவிழக்கக் காரணமாக மாறலாம்.

 

03. டேமேஜ் ரிப்பேர் செய்யும் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்

Image icon How-to-prevent-coloured-hair-from-turning-dry-and-frizzy_3.jpg (678.36 KB) Alternate text * This text will be used

கலர் செய்த 72 மணி நேரம் கழித்து டேமேஜ் ரிப்பேர் பொருட்களை பயன்படுத்துவது நல்ல ஐடியா. எவ்வளவு சீக்கிரம் பயன்படுத்துகிறீர்களோ அவ்வளவுக்கு கூந்தல் வறண்டு போகாமல், பிசிறு விழாமலிருக்கும். Dove Intense Damage Repair Mask போன்ற ஆழமாக கண்டிஷனிங் செய்யும், ரிப்பேர் செய்யும் மேஸ்க் ஒரு நல்ல சாய்ஸ். அதன் நான்கில் ஒரு பங்கு மாய்ஸ்சுரைஸிங் க்ரீம் மற்றும் கெராடின் உட்பொருட்கள் உள்ளன. இது ஆழமாகச் சென்று கூந்தலுக்கு ஊட்டம் கொடுத்து, கூந்தலை சரி செய்யும். கூந்தலில் அப்ளை செய்து 3 முதல் 5 நிமிடங்கள் விட்டு அலசிவிடலாம். இதை வாரம் ஒரு முறை அல்லது இரு முறை செய்யலாம்.

 

04. அடிக்கடி ஹேர் வாஷ் செய்யக்கூடாது

04. அடிக்கடி ஹேர் வாஷ் செய்யக்கூடாது

தினமும் ஹேர் வாஷ் செய்யும் பழக்கத்திற்கு குட் பை சொல்லுங்கள். இது கூந்தலுக்கு தீங்கு விளைவிக்கும். உங்கள் தலையில் இயற்கையாக சுரக்கும் ஆயில் கூந்தலின் நுனி வரை எட்ட வேண்டும். அது நடந்தால்தான் இயற்கையாக டேமேஜ் சரி செய்யப்படும். கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும். கூந்தலில் இயற்கை ஆயில் இள்லாவிட்டால் கலர் சீக்கிரம் கரைந்துவிடும். முடியும் சிடுக்கி விழுந்து, பொலிவில்லாமல் மாறிவிடும். அதனால் வாரம் 2 முதல் 3 முறை ஹேர் வாஷ் செய்யும் பழக்கத்திற்கு மாறுங்கள். தினமும் பிரஷ் செய்வது மூலம் தலையில் சுரக்கும் எண்ணெய் எல்லா பக்கமும் செல்ல உதவுங்கள்.

 

05. கலர் செய்யப்பட்ட முடியை சூட்டிலிருந்து காப்பாற்றவும்

05. கலர் செய்யப்பட்ட முடியை சூட்டிலிருந்து காப்பாற்றவும்

சூட்டினால் ஏற்படும் டேமேஜ் கெமிக்கல் பொருட்களால் ஏற்படும் டேமேஜ் போன்றதுதான். முடியிலுள்ள புரதச் சத்தை இது காலியாக்கிவிடும். இதனால் கூந்தல் வறண்டு, பிசிறு பிசிறாக மாறிவிடும். முடிந்த வரை ஹீட் ஸ்டைலிங்கை குறைக்க வேண்டும். TRESemmé Keratin Smooth Heat Protection Spray போன்ற பாதுகாப்பு தரும் ஸ்பிரே பயன்படுத்துவது மூலம் சூடு ஏற்படுத்தும் பாதிப்பைக் குறைக்கலாம். 450 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் வரை பாதுகாப்பு தரக்கூடியது இது. முடி சிக்கலாவதைத் தடுப்பதுடன், அழகுக் கலை நிலையம் சென்றது போன்ற ஷைனிங் கூந்தலும் கிடைக்கும். அதுவும் வீட்டிலேயே.