நீங்கள் வீட்டில் இருந்தாலும் சரி, பயணம் செய்தாலும் சரி, மேக்கப் சாதனங்களை வைத்திருப்பது ஒரு சவால் தான். உங்கள் நைல்பாலிஷ் அடிக்கடி பாழாகிவிடுகிறதா? உங்கள் மஸ்காரா உலர்ந்து விடுகிறதா? உங்கள் கிரீம் மெலிதாகி விடுகிறது அல்லது பவுண்டேஷன் மிகவும் கெட்டியாகிவிடுகிறதா? எனில், உங்கள் மேக்கப் சாதனங்கள் வெப்பத்தின் தாக்கத்திற்கு உள்ளாகி இருப்பதாக பொருள்.

உங்கள் மேக்கப்பை முறையாக பராமரித்து, நல்ல நிலையில் வைத்திருப்பதற்கான வழிகள் இவை:
 
 

அலங்கோல டிராயர்:

அலங்கோல டிராயர்:

மேக்கப் வைக்கும் இடத்தில், மேக்கப் சாதனங்கள் அல்லாத பொருள்களை முதலில் அப்புறப்படுத்துங்கள். இப்படி செய்வதன் மூலம் அபிமான நைல் பாலிஷ் அல்லது ஐ ஷேடாவை எங்கோ வைத்தோம் எனத் தேட வேண்டிய அவசியமில்லை. 
 

 

குப்பைகளை அகற்றுங்கள்:

குப்பைகளை அகற்றுங்கள்:

உங்கள் மேக்கப் சாதனங்கள் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் வைக்க வேண்டாம். இதன் காரணமாக எல்லாம் பாதிக்கப்படலாம். குவியலாக இருக்கும் மேக்கப் சாதனங்களை ஒழுங்குபடுத்தி, தனி டிராயர் மற்றும் கேபினட்டில் வைக்கவும். வெளியில் இருந்து பார்க்கக் கூடிய கண்ணாடி போன்ற டிராயர் இருந்தால் பயன்படுத்தவும். இதன் மூலம் எல்லா மேக்கப் சாதனங்களையும் எளிதாக பார்க்கலாம். 

 

பிரித்து வையுங்கள்

பிரித்து வையுங்கள்

பிரித்து வையுங்கள்
உங்கள் டிராயர் பகுதியில் பிரிக்கும் வசதி இருப்பது மேக்கப் சாதனங்களை வகைப்படுத்த உதவியாக இருக்கும். அனைத்து லிப்ஸ்டிக் மற்றும் பிளஷ்களை ஒன்றாக வைக்கவும். தேவை எனில் இவற்றை ஒன்றாகவும் வைக்கலாம். எடுத்த பயன்படுத்த எளிதாக இருக்கும்.

 

அழகு பலகை

அழகு பலகை

உங்களிடம் அழகு பலகை இல்லை எனில், உங்கள் அழகு சாதனப் பொருட்கள் அனைத்தையும் சேமித்து வைக்க ஒன்றை உருவாக்கி கொள்ளலாம். உலோக பலகையில், துணி போர்த்தி பிரேம் செய்து சுவற்றில் தொங்க விடவும். அழகு சாதனப் பொருட்களின் மீது கொஞ்சம் காந்தம் ஒட்டி அவற்றை இந்தப் பலகை மீது பொருத்தவும். பொருட்கள் கீழே விழாமல் இருக்க வெலோரா டாட்களையும் பயன்படுத்தலாம். 

 

பிரஷ்களுக்கான ஸ்டாண்ட்

பிரஷ்களுக்கான ஸ்டாண்ட்

எல்லா பிரஷ்களையும் எப்படி ஒன்றாக வைத்திருப்பது எனத்தெரியவில்லையா? ஒரு ஸ்டாண்டை எடுத்து அதில் கொஞ்சம் கோலி குண்டுகளை போட்டு வைத்து, அவற்றின் நடுவே பிரெஷ்களை வைக்கலாம். பிரெஷ்களை நிலையாக வைத்திருக்க இது உதவும். காணாமல் போவதையும் தடுக்கும். 

 

வண்ணங்களின் வகை

வண்ணங்களின் வகை

பொருட்களை குறிப்பிட்ட முறையில் வகைப்படுத்த விரும்பினால் அதற்கான வழி இருக்கிறது. பொருட்களை அவற்றின் வண்ணத்தின் அடிப்படையில் வகைப்படுத்தலாம். நீங்கள் பொருட்களை வைத்திருக்கும் விதம் மற்றவர்களை வியக்க வைப்பதாகவும் இருக்கும். 

 

மறு பயன்பாடு

மறு பயன்பாடு

உங்களிடம் பழைய ஜாடி அல்லது வாசனை திரவிய பாட்டில் இருந்தால் அவற்றை பொருட்களுக்கான ஸ்டாண்டாக பயன்படுத்தலாம். காலி ஜாடிகளில் பிரெஷ்கள், மஸ்காரா, ஐலைனர் அல்லது லிப் லைனர்களை வைத்துக்கொள்ளலாம்.

 

டிரே

டிரே

கொஞ்சம் காவிய பாணி வழி தேவை எனில் டிரேவை நாடலாம். டிரே மீது துணி அல்லது சிஷ்யூ காகிதத்தை போட்டு வைக்கவும். அழகு சாதன பொருட்கள் தவறாக திறந்து கொண்டால் கூட டிரே பாதிக்கப்படாமல் இருக்கும். டிரேவில் பொருட்களை அழகாக அடுக்கி வைக்கவும். 

 

பொருட்கள் பை

பொருட்கள் பை

அழகு சாதன பொருட்களை தவறுதலாக கொட்டி விடும் இயல்பு கொண்டிருந்தால் இவற்றுக்கான பையில் தனித்தனியே வைக்கலாம். இதன் மூலம் அவை பாதுகாப்பாக இருக்கும். இந்த பையை கண்னாடி அருகே அல்லது டிரெஸ்ஸிங் மேஜை அருகே தொங்க விட்டால் எடுப்பதற்கும் எளிதாக இருக்கும். 

 

சூட்கேஸ்

சூட்கேஸ்

சூட்கேஸ்கள் பொருட்களை பேக் செய்ய மட்டும் அல்ல, உங்கள் மேக்கப் சாதனங்களையும் அதில் வைக்கலாம். பாட்டியின் பழைய சூட்கேஸ் வீட்டில் இருந்தால் அதை எடுத்து அழகு சாதனங்களை அடுக்கி வைக்கலாம். தேவை எனில் கூடுதல் அறைகளை ஏற்படுத்தி பொருட்களை வகைப்படுத்தலாம்.