நமக்குத் தெரிந்த பல மணப்பெண்கள் காக்டெயிலை “இன்னுமொரு பார்ட்டி” என்றுதான் கருதுகிறார்கள். அது உண்மையாக இருக்கலாம், இருந்தாலும் இன்னும் நீங்கள் மணப்பெண்ணாகத்தான் இருக்கிறீர்கள், எனவே நீங்கள் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்க வேண்டும். தொடங்குவதற்கு, நாம் மேக்கப் நிபுணர் கோரி வாலியாவையும், நமக்கு விருப்பமான BB கேர்ள் சாரா ஜேனையும், லாக்மே அப்சல்யூட் பிரைடல் மேக்கப் மாஸ்டர்கிளாஸுக்காக காக்டெயில் லுக்கை மீண்டும் உருவாக்குவதற்காக இங்கே சந்திக்கிறோம்.

1

சாரா தன் தலைமுடியை பழைய வழக்கப்படி நடுவில் வகிடெடுத்து பின்னுக்கு சீவிய பின், அவரது சருமத்தை மிருதுவாக்குவதற்கு லாக்மே அப்சல்யூட் ஸ்கின் க்ளாஸ் சிரம்மைப் பூசி, பளபளப்பாக இருக்கும்படி விட்டுவிட்டார் – இதை நமது அழகான மணப்பெண்கள் அனைவரும் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.

2

விரைவாக ஃபவுண்டேஷன் பூசி (நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கரடுமுரடான சருமமும், சீரற்ற மேனி நிறமும் உண்டு என்பதால்), அதைத் தொடர்ந்து கொஞ்சம் கன்சீலரும் பூசிய பின்னர், சாராவின் கண்களை அழகுபடுத்தத் தொடங்கினார் கோரி. முக்கியமான நிகழ்ச்சிகளின்போது கண்களை அழகுபடுத்துவதில் நீங்கள் அதிக கவனம் செலுத்த முடியாது போனாலும், முடிந்தவரை உங்கள் மேக்கப்பை மேலும் அழகாக்குவதற்கான வாய்ப்பாக காக்டெயிலைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

3

கோரி லாக்மே அப்சல்யூட் டிராமா ஸ்டைலிஸ்ட் ஷேடோ கிரையானின் இரண்டு ஷேடுகளை ஒன்றுசேர்த்து சாராவுக்கு ஒரு சூப்பர் செக்ஸி ஸ்மோக்கி ஐ மேக்கப்பை உருவாக்கினார். முதலில் அவர் சாராவின் மேல் இமையில் டிராமா ஸ்டைலிஸ்ட் ஷேடோ கிரையான் இன் கிரேயின் ஒரு பேஸை உருவாக்கி, வொயிட் டிராமா ஸ்டைலிஸ்ட் ஷேடோ கிரையான் மூலம் முனையில் லைனிங்கை உருவாக்கி அதற்கு பளபளப்பைச் சேர்த்தார்.

4

அதிகாலை 3 மணிக்கு முன்பாக எந்த காக்டெயில் இரவும் முடிவதில்லை என்று ஏகப்பட்ட பேர் நம்மிடம் சொல்லியிருக்கிறார்கள்; வாட்டர்ஃப்ரூப் மேக்கப் இல்லாமல் எந்த காக்டெயில் இரவும் வெற்றி பெறுவதில்லை! ஒரு புரொபஷனலான, பளபளப்பான தோற்றத்திற்கு நீங்கள் பயன்படுத்த வேண்டியது தி லாக்மே அப்சல்யூட் ஜெல் அடிக்ட் லைனர் இன் பிளாக். இதை உங்கள் இரு இமைகளிலும் பயன்படுத்தலாம் என்றபோதிலும், கோரி இதை சாராவின் கீழ் வாட்டர்லைனில் அவரது கண்களுக்கு மேலும் கச்சிதமான தோற்றத்தைத் தருவதற்காகப் பயன்படுத்தினார்.

5

உங்கள் முகத்தின் தோற்றத்தை மாற்றும் வழி ஒன்று உள்ளதென்றால், இதை மிக மிக அழகான மணப்பெண்ணும் கூட மறுக்க முடியாது, அது மஸ்காராதான். சாராவின் கண் இமைகளை முதலில் கர்ல் செய்த கோரி, பின்னர் அதில் லாக்மே ஐகானிக் கர்லிங் மஸ்காராவைப் பயன்படுத்தி அடர்த்தியையும், நீளத்தையும் சேர்த்தார்.

6

சாராவின் மோனோகுரோம் தோற்றத்திற்குப் பொருத்தமாகவும், அன்று மாலை அவர் அணியப் போகும் ஜாக்கெட்டிற்குப் பொருத்தமாகவும், பளபளப்பான பிங்க் நிற லிப்ஸ்டிக்கை பூசினார். லாக்மே அப்சல்யூட் க்ளாஸ் ஸ்டைலிஸ் ரேன்ஜின் பிங்க் பவுட்டை அவர் அணிந்திருந்தார்.

7

கோரி, சாராவின் கன்னங்களுக்கு ரோஸ் நிற வண்ணமும் (Blush Duos in Coral –ஐத் பயன்படுத்தினார்), லாக்மே அப்சல்யூட் க்ளாஸ் அடிக்ட் ரேன்ஜின் எலக்ட்ரிக் ஆரஞ்சு நிறத்தை கோரல் நகங்களுக்கும் பூசி மேக்கப்பை முடித்தார்.