நீங்கள் ஒரு நகங்கள் அழகை விரும்புவதில் வெறி பிடித்தவராக இருந்தால் (எங்களைப் போலவே), வெறும் நகங்களை நீங்கள் வெறுக்கிறீர்கள். வழக்கமாக சலூனுக்கு வருவது எப்போதுமே சாத்தியமில்லை என்றாலும், உங்கள் நகங்களை விருப்பம்போல் டிசைன் செய்வது நிச்சயமாக நீங்கள் கருத்தில் கொள்ளக்கூடியதாகும். வீட்டிலேயே நீங்களே டிசைன் அல்லது உலோகங்களைக் கொண்டு ஆர்ட் டிசைன் நகங்களை உருவாக்க முடியாது என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள்! சில ஆர்ட் டிசைன் கருவிகளின் உதவியுடன், உங்கள் நகங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லலாம்.

வீட்டிலேயே சலூன் போன்ற ஆர்ட் டிசைன்  நகங்களை உருவாக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய 5 நகங்களை கீழே பட்டியலிட்டுள்ளோம் …

 

புள்ளியிடும் கருவி

புள்ளியிடும் கருவி

நீங்கள் ஒரு ஆர்ட் டிசைன் செய்வதில் புதியவராக இருந்தால், வீட்டிலேயே ஆர்ட் டிசைன் நகங்களை உருவாக்க ஒரு புள்ளி கருவி சிறந்த தேர்வாக இருக்கலாம். நீங்கள் ஒரு ஆர்ட் டிசைன் பேனாவை வாங்கிக் கொள்ளலாம். அல்லது டூத்பிக், பாபி முள், ஆரஞ்சு குச்சிகள் அல்லது பென்சில் போன்ற க்ளியர் பொருள்களைப் பயன்படுத்தலாம். கருவியை வண்ணப்பூச்சில் நனைத்து (உங்கள் அடிப்படை நிறத்திற்கு மாறான ஷேடில்) அந்தச் சரியான போல்கா- டாட் அடைய உங்கள் நகங்கள் முழுவதும் புள்ளிகளை உருவாக்கவும்.

 

ஸ்ட்ரைப்பிங் டேப்

ஸ்ட்ரைப்பிங் டேப்

உங்கள் நகங்களை புதுப்பிக்க இந்த சூப்பர் மெல்லிய ஸ்ட்ரைப்பிங் டேப்பைப் பயன்படுத்தவும். உங்கள் நக ஆர்ட்டை மேம்படுத்த அல்லது சூப்பர் நேர் கோடுகளை உருவாக்க இந்த மெட்டாலிக் டேப்பைப் பயன்படுத்தலாம், பின்னர் அதைத் தூக்கி எறியுங்கள். ஒரு வண்ணமயமான ஸ்ட்ரைப்பிங் டேப் குழப்பமடையாமல் கிராஃபிக் டிசைன்களையும், நேராக விளிம்புகளையும் நகங்களில் உருவாக்க விரும்புவோருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

 

ட்ரான்ஸ்ப்ரன்ட் காகிதம்

ட்ரான்ஸ்ப்ரன்ட் காகிதம்

குளிர்ச்சியான நக டிசைனை உருவாக்க ட்ரான்ஸ்ப்ரன்ட் காகிதம் உங்களுக்கு உதவும். எப்படி? என்று நீங்கள் கேட்கிறீர்களா? நீங்கள் செய்ய வேண்டியது முதலில் விரும்பிய படி நகத்தில் ஒரு அடிப்படை கோட்டைப் பயன்படுத்துங்கள். அடுத்து, மேலே ஒரு க்ளியர் பசையைத் தடவி, பின்னர் அழுத்தி, ப்ரான்ப்ரன்ட் காகிதத்தை விரைவாக இழுக்கவும், உங்கள் நகங்களில் ட்ரான்ஸ்ப்ரன்ட்டில் உள்ள அழகான ஒவியங்கள் நகங்களில் பதிந்து விடும். அந்தக் குளரிர்ச்சியான ஓவியப் பதிவைக் க ண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

 

ஸ்ட்ரைப்பர் தூரிகை

ஸ்ட்ரைப்பர் தூரிகை

நீங்கள் எந்த அழகுக் கடையிலிருந்தும் ஒரு ஸ்ட்ரைப்பர் தூரிகையைத் தேர்வுசெய்யலாம் அல்லது மெல்லிய வண்ணப்பூச்சு தூரிகையைப் பயன்படுத்தி உங்கள் நகங்களில் சிக்கலான மற்றும் மெல்லிய கோடுகளையும் உருவாக்கலாம். உங்கள் தூரிகையை வேறு எந்த நிறத்திலும் நனைப்பதற்கு முன்பு நெயில் பாலிஷ் ரிமூவர் மூலம் சரியாக சுத்தம் செய்வதை உறுதி செய்யுங்கள். உங்கள் நக வண்ணப்பூச்சுகள் பாதிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை, இல்லையா?

 

ட்வீசர்

ட்வீசர்

வீட்டிலிருந்தபடி நகப் பூச்சு செய்யும் போது உங்கள் ட்வீசர் கைக்குள் வரலாம். எப்படி என்று,  நீங்கள் கேட்கிறீர்களா? சரி, உங்கள் நகங்களை வண்ணங்களில் நிரப்பு, ஒரு மில்லியன் ரூபாயைப் போல தோற்றமளிக்கும் மிகச் சிறிய அலங்காரங்களைத் தேர்வுசெய்ய இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, அடுத்த முறை நீங்கள் சிறிய அலங்காரங்கள் மற்றும் டாட்டுக்களுடன் போராடுவதை விட, , ​​எந்தக் கருவியை வாங்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்.


ஒளிப்படம்: பிண்ட்ரஸ்ட்