சருமப் பராமரிப்பு என்று வரும்போது ஆயுர்வேதத்தின் ஆற்றைலை அடித்துக் கொள்ள எதுவும் கிடையாது. சில குறிப்பிட்ட மூலிகைகளும், அவற்றில் மிக இயற்கையான வடிவிலுள்ள உட்பொருட்களும் பொலிவுமிக்க அழகுக்கு பெரிதும் உதவுகிறது என்பதை பழங்கால ஞானம் நிரூபித்துள்ளது. இந்த பழங்கால நிவாரணிகளை அதிகளவில் நீங்களும் எப்படி பயன்படுத்திக் கொள்ள முடியும் என நீங்கள் ஆச்சரியப்பட்டால் மற்றும் மேம்பட்ட சருமத்துக்காக ஒரு ஆயுர்வேத சிகிச்சையை பெற நீங்கள் தயாராக இருந்தால், இதோ உங்களுக்காக ஒரு சில குறிப்புகள்...
 

சந்தனப்பூச்சு உடன் உங்கள் நிறத்தை மேம்படுத்துங்கள்

சந்தனப்பூச்சு உடன் உங்கள் நிறத்தை மேம்படுத்துங்கள்

பல ஆண்டுகளாகவே, சருமத்துக்கு பொலிவூட்டும் மிகவும் சக்திவாய்ந்த பொருட்களில் ஒன்றாக சந்தனம் இருந்து வருகிறது. பொலிவுள்ள சருமத்தை பெற நீங்கள் மற்ற எல்லாவற்றையும் முயற்சித்திருந்தாலும் கூட, உண்மையிலேயே நீங்கள் சந்தனத்தை பூசுவதை ஒரு தடவை முயற்சித்து பார்க்க வேண்டும்.

ஒரு தேக்கரண்டி சந்தனப் பொடியை தேங்காய் எண்ணெய்யில் குழைத்து அதனை உங்கள் முகத்தில் தடவவும். உலர்ந்தப் பிறகு அதனை கழுவி விடவும்.

 

அந்த மினு மினுக்கும் பொலிவுக்கு குங்கமப்பூ கொண்டு தேய்க்கவும்

அந்த மினு மினுக்கும் பொலிவுக்கு குங்கமப்பூ கொண்டு தேய்க்கவும்

கேசர் என்றழைக்கப்படும் குங்குமப்பூவில் குணப்படுத்தும் தன்மைகள் ஏராளம். அது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் அதனால் நீங்கள் எப்போதுமே ஏங்கி வரும் பொன் போன்ற மினு மினுப்பை உங்களுக்கு கொடுக்கிறது. உங்கள் முகத்தில் ஒரு பழுப்பு இருந்தால், வீட்டிலேயே செய்த குங்குமப்பூ ஸ்க்ரப் அதனை போக்கி உங்களின் பழைய நிறத்தை உங்களுக்கு திரும்ப கொடுத்து விடும்.

சிறிதளவு குங்குமப்பூவை 1 மேஜைக்கரண்டி பாலில் கலக்கி இந்த கலவையை வாரத்துக்கு இரு தடவை என உங்கள் முகத்தில் தேய்த்து வரவும்.

 

சிவத்தைலை குறைக்க கற்றாழை ஜெல் உடன் மசாஜ் செய்யவும்

சிவத்தைலை குறைக்க கற்றாழை ஜெல் உடன் மசாஜ் செய்யவும்

நீங்கள் முகத்தில் அழற்சி மற்றும் சிவத்தலால் அடிக்கடி அவதிப்பட்டு வந்தால், அலோ வேரா (கற்றாழை) உங்களுக்கு கை கொடுக்கும். அதிலுள்ள அழற்சி-எதிர்ப்பு தன்மைகள் முகப்பரு வடுக்களையும், உங்கள் சருமத்தில் உண்டாகும் எந்தவொரு வகையான வீக்கத்தையும் குறைத்து விடும்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு கற்றாழை மடலை உடைத்து அதிலுள்ள ஜெல்லை உங்கள் முகத்தில் 2 நிமிடங்களுக்கு மசாஜ் செய்வது மட்டுமே.