மேக்கப் மற்றும் அழகு சாதன பொருட்கள் வரலாற்றில் வேசலின் தான் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு. சிடுக்கான கூந்தல் முதல் உலர் புறத்தோல் வரை எல்லாவற்றுக்குமான மாயத்தீர்வாக இது இருக்கிறது. இவை எல்லாவற்றையும் தீர்க்க கூடியதாக வேசலின்  இருக்கிறது. வேசலினை புதிய வெளிச்சத்தில் புரிந்து கொள்ள உதவும் ஐந்து அருமையான அழகு சாதனக் குறிப்புகளை இங்கே வழங்குகிறோம்:
 

மஸ்காராவை சீராக்க!

மஸ்காராவை சீராக்க!

மஸ்காராவை பொறுமையாக தடவிக்கொள்ள நேரம் இல்லாத நாட்களும் உண்டு. இதனால் மஸ்காரா ஒன்றாக ஒட்டிக்கொண்டுவிடும்.இது நிச்சயம் அழகிய தோற்றத்திற்கு உதவாது. ஏற்கனவே பூசியதை நீக்கி மீண்டும் பூசிக்கொள்ள நேரம் இல்லாவிட்டால், வேசலினை நாடலாம். உங்கள் கை விரலில் கொஞ்சம் வேசலினை  எடுத்துக்கொண்டு கண் இமைகள் மீது கைவிரலால் தடவவும்.  இது இமைகளை பிரித்து, நேர்த்தியாக்கி முன் போல அழகாக தோன்றச்செய்யும். கொஞ்சம் வேசலினை  தடவுவதன் மூலம் அடர்த்தி மற்றும் பளபளப்பையும் பெறலாம்.

 

புருவங்களை சீராக்க

புருவங்களை சீராக்க

புருவங்களை பராமரிப்பதற்கான மெழுகு இல்லை எனில் அல்லது புருவங்களில் அதிக நேரம் செலவிட விருப்பம் இல்லை எனில் வேசலினை  நாடலாம். உங்கள் கைவிரலில் கொஞ்சம் வாசெலின் எடுத்துக்கொண்டு, புருவங்கள் மீது தேய்த்து விரும்பிய வடிவம் பெற வைக்கலாம்.அடுத்ததாக புருவத்திற்கான சீப்பை பயன்படுத்தி சீராக்கினால் உங்கள் புருவம் அட்டகாசமாகிவிடும்.

 

கூந்தல் சிக்கலுக்கு குட்பை

கூந்தல் சிக்கலுக்கு குட்பை

சிக்கலான மற்றும் சிடுக்கான கூந்தல் உங்கள் அழகை பாதிக்கலாம். ஆனால் இதைக் கட்டுப்படுத்த அதிக அளவில் ஹேர்ஸ்பிரே பயன்படுத்துவதும் ஏற்றது இல்லை. இது போன்ற நேரங்களில் வேசலின்  கைகொடுக்கும். வேசலின் உங்கள் கூந்தலை பளபளக்க வைக்கும். கொஞ்சம் வேசலின் எடுத்து கூந்தலின் நுனியில் தடவி நீவி விட்டால் போதுமானது. 

 

வாசனை நீடிக்க

வாசனை நீடிக்க

 
நாம் பயன்படுத்தும் வாசனை திரவியங்கள் சில மணி நேரங்களில் எல்லாம் வாசனையை இழந்துவிடுவது உண்டு. இது ஏமாற்றம் அளிக்கலாம். வேசலின் பயன்படுத்தினால் உங்கள் வாசனை திரவியம் இரண்டு மடங்கு நேரம் மணக்கச்செய்யும். காது பின்புறம் மற்றும் மணிக்கட்டில் வாசனை திரவியம் தெளிப்பதற்கு முன், கொஞ்சம் வேசலின் தடவிக்கொள்ளுங்கள். இது வாசனை திரவியத்தின் பலன் நீடித்திருக்க வைக்கும். இதை செயல்படுத்திப்பாருங்கள், பலனை நீங்களே உணர்வீர்கள்

 

நகங்களை அழகாக்க

நகங்களை அழகாக்க

உலர் நகங்கள் அழகுக்கு ஏற்றவை அல்ல. அவை ஆண் தன்மையை அளிப்பதோடு, பொலிவான தோற்றத்தை தருபவை அல்ல. உங்கள் நகத்தில் நகப்பூச்சு பயன்படுத்தும் முன், அவற்றில் கொஞ்சம் வேசலின் தடவுங்கள். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு இந்தப் பகுதியில் வேசலின் மசாஜ் செய்து கொள்ளவும் மறக்க வேண்டும். இவை உங்கள் நகங்கள் நீளமாக வளர்ச்செய்து அவற்றை பொலிவாக மின்ன வைக்கும்.