நீங்கள் சிறப்பு தினத்திற்கு தயாராகி கொண்டிருந்தால், அனைத்து கண்களும் உங்கள் மீது தான் இருக்கும் என்று நினைத்து கவலை கொண்டிருந்தால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவற்றுக்கு தொடர்ந்து படியுங்கள்.

திருமண தினத்தன்று அசத்தலாக தோன்றுவதை உறுதி செய்யும் வகையில் முன்கூட்டியே உங்கள் சருமத்தை தயார் செய்யுங்கள். பெரும்பாலான புது மணப்பெண்களுக்கு சரியான மேக்கப் மற்றும் சரியான தோற்றத்தைப் பெறுவது எப்படி? என்பது தான் முக்கிய கவலையாக இருக்கிறது. சரியான மேக்கப்பிற்கு, நீங்கள் நாள் முழுவதும் மாசில்லா சருமம் பெற்றிருப்பதோடு, உங்கள் சருமத்தில் குறைகளும் இருக்கக்கூடாது.

திருமணத்திற்கு முன் உங்கள் சருமத்தைப் பொலிவு பெறச் செய்யக்கூடிய வழிகள் சில...

·     நீர்ச்சத்து உணவுகள்

·     சருமத்தை 3 மாதம் முன் தயார் செய்யவும்.

·     பேசியல் முயற்சிக்கவும்

·     எக்ஸ்போலியேட் செய்யவும்

·     அழகு தூக்கம் தேவை

·     மேக்கப் பிரஷ் தூய்மை

·     வீட்டிலேயே செய்யும் அழகு குறிப்புகள்

·     அழகாக்கும் உணவுகள்

 

நீர்ச்சத்து உணவுகள்

நீர்ச்சத்து உணவுகள்

பொலிவான சருமம் பெறுவதற்கான முதல் வழி நிறைய தண்ணீர் குடிப்பது. உங்கள் உடலை நீர்ச்சத்து மிக்கதாக வைத்திருக்க வேண்டும். சருமத்திற்கு நீர்ச்சத்து அளிக்கக் கூடிய தர்பூசணி பழங்களை அதிகம் நாடலாம். திராட்சை, பிராகோலி மற்றும் கீரைகளையும் நாடலாம்.

 

3 மாதம் முன் சருமத்தை தயார் செய்யவும்

3 மாதம் முன் சருமத்தை தயார் செய்யவும்

உங்கள் சருமம் தயாராக அவகாசம் கொடுக்கும் வகையில் மூன்று மாத காலம் முன்னதாகவே தயாரிப்பை துவக்கவும். உங்கள் சருமத்தை சிறந்த முறையில் பராமரிக்க இது சரியான நேரமாகும். உணவு ஆரோக்கியமாகவும், இயற்கையானதாகவும் இருக்கட்டும். எண்ணெய் பசை உணவை குறைத்துக்கொண்டால் பருக்கள் தோன்றுவதையும் குறைக்கும்.

 

பேசியல்ஸ்

பேசியல்ஸ்

சருமத்தில் பருக்கள் மற்றும் வண்ணம் பாதிப்பு தோன்றும் பருவம் இது. மாதம் ஒரு முறை ஆழமாக சுத்தம் செய்யும் பேசியல் செய்யவும். இது உங்கள் சருமம் தயாராக உதவும்.

 

எக்ஸ்போலியேட் செய்யுங்கள்

எக்ஸ்போலியேட் செய்யுங்கள்

வாரம் ஒரு முறை எக்ஸ்போலியேட் செய்து சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்தவும்.

 

அழகு தூக்கம்

அழகு தூக்கம்

தினமும் 8 மணி நேர தூக்கம் இல்லாமல் எந்த அழகு சாதன சிகிச்சையும் முழுமை அடையாது. நீங்கள் நன்றாக தூங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள். தூக்கத்தில் சிக்கல் இருந்தால், தலையணையில் கொஞ்சம் லாவண்டர் எண்ணெய் சேர்த்துக்கொண்டால் நன்றாக தூக்கம் வரும். ஆனால், இதைப் பழக்கமாக்கி கொள்ள வேண்டாம். 

 

பிரஷ்களை சுத்தம் செய்தல்

பிரஷ்களை சுத்தம் செய்தல்

பல்வேறு தேவைகளுக்காக மேக்கப் செய்வதால் உங்கள் மேக்கப் சாதனங்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் சருமத்தின் மீது கிருமிகள் சேருவதை தவிர்க்க மேக்கப் சாதனங்களை ஷாம்பு கொண்டு சுத்தம் செய்யவும். ஷாம்பூவில் அலசி, கீழே பார்த்தபடி உலர வைக்கவும். 

 

வீட்டு அழகு சாதன குறிப்புகள்

வீட்டு அழகு சாதன குறிப்புகள்

பொலிவான சரிமத்திற்காக வீட்டிலேயே சிலவற்றை தயார் செய்து கொள்ளலாம். கடலை மாவு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய், பால் சேர்த்து பேஸ் பேக் தயார் செய்து சருமத்தை பொலிவாக்கி கொள்ளவும். பொடியாக்கிய புதினா இலைகள் மூலம் பருக்களுக்கான பேக்கை தயார் செய்யவும். எண்ணெய்ப் பசை சருமம் எனில் முல்டானி மிட்டியை பயன்படுத்தவும்.

 

அழகுக்கு ஏற்ற உணவுகள்

அழகுக்கு ஏற்ற உணவுகள்

பொலிவான சருமம் தரும் உணவுகளை உட்கொள்ளுங்கள்.

·     மீன்

·     பிஸ்தா

·     சின்னமோன்

·     மஞ்சள்

·     டார்க் சாக்லெட்

·     பெப்பர்மிண்ட்

·     பீட்ரூட்

·     பழுப்பு அரிசி

·     அவரை ரகங்கள்

·     பூண்டு

·     பிரோகோலி