இன்கோர் ஹேர் எனப்படும் உள்ளுக்குள் முடி வளர்வது அத்தனை பெரிய பிரச்சனை என்று சொல்வதற்கில்லை. ஆனால், இது சங்கடத்தையும், எரிச்சலையும் தரக்கூடியது என்பதை மறுப்பதற்கில்லை. அதிலும் குறிப்பாக, அதனால் வலுயை ஏற்படுத்தக்கூடிய புண்கள் உண்டாகும் போது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். எல்லாம் சரி, உள்ளுக்குள் முடி வளர்வது என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? இது எதனால் ஏற்படுகிறது? என்ற கேள்வியும் எழுகிறதா? உடலில் வளரும் முடி, சருமத்திற்கு மேல் பகுதியில் வளர்வதற்கு பதில் வளைந்து சருமத்திற்குள் வளரத்துசங்குவதை குறிக்கிறது.  முடி அதன் வேர் பகுதியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாகவே சருமத்திற்குள் சிக்கி கொள்வதாலும் இவ்வாறு நிகழலாம்.

இத்தகைய உள்ளுக்குள் முடி வளர்வது அதிகம் இருந்தால் நீங்கள் அசெளகர்யமாகவும், சரும எரிச்சலையும் உணரலாம். ஆனால், இந்த பிரச்சனையை சரி செய்வதற்கான ரகசியம் உங்கள் சமையலறையிலேயே இருக்கிறது என்பது நல்ல செய்தியாகும். அதிகப்படியான, உள்ளுக்குள் வளரும் முடி பிரச்சனையை குறைப்பதற்கான 5 எளிய வழிகள் இதோ:  

 

ஆப்பிள் சிடெர் வினிகர்

ஆப்பிள் சிடெர் வினிகர்

ஆப்பிள் சிடெர் வினிகரில் உள்ள இயற்கையான கிருமி எதிர்ப்பு தன்மை, இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், கொஞ்சம் பஞ்சை எடுத்துக்கொண்டு ஆப்பிள் சிடெர் வினிகரின் நனைத்து, அதை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவிக்கொண்டு உலர அனுமதிப்பது தான்.  வினிகர் செயல்பட்டு, அடைப்பட்டிருக்கும் துளைகளை திறக்கச்செய்து, உள் வளரும் முடி வெளிப்பக்கம் வளர வைக்கிறது. 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து சாதாரண தண்ணீரால் அலசிக்கொள்ளவும். நல்ல பலன் பெற ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இவ்வாறு செய்யவும். எனினும் உங்களுக்கு மிகவும் மென்மையான சருமம் எனில், ஆப்பிள் சிடெர் வினிகரை பயன்படுத்தும் முன் அதை கொஞ்சம் நீர்த்துப்போகச்செய்ய மறக்க வேண்டாம்.

 

டீ டிரி ஆயில்

டீ டிரி ஆயில்

டீ டிரி ஆயில் முகப்பருக்களை எதிர்ப்பதற்கான மிகச்சிறந்த பொருட்களில் ஒன்றாகும். இதில் உள்ள புண்களை எதிர்க்கும் ஆற்றல் மற்றும் குணமாக்கும் தன்மை சரும துளைகளை இளகச்செய்து, உள் வளரும் முடி பிரச்சனையை எளிதாக சரி செய்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், 2 அல்லது 3 சொட்டு டீ டிரி ஆயிலை, ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவிக்கொள்வது தான். 2 நிமிடங்கள் கழித்து அந்த பகுதிகளில் மசாஜ் செய்யவும். சருமத்தில் இந்த கலவை 10 முதல் 12 நிமிடம் இருக்க வைத்து பின்னர் இதமான தண்ணீரில் கழுவிக்கொள்ளவும்.

 

அப்சம் உப்பு

அப்சம் உப்பு

எப்சம் உப்பு, கிருமிகளுக்கு எதிரான தன்மையை பெற்றிருக்கிறது. மேலும், இது சருமத்தின் நச்சுக்களை நீக்கி, தூய்மையாக்குகிறது. இதன் மூலம் உள் வளரும் முடி பிரச்சனையை சமாளிக்க உதவுகிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், குளியல் தொட்டியில் சூடான நீரில் கொஞ்சம் எப்சம் உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் அதில் ஊறுவது தான். அதன் பிறகு வழக்கம் போல குளித்து முடித்து, துவட்டிக்கொள்ளுங்கள். தினமும் இந்த வெந்நீர் குளியலில் ஈடுபட்டால் உள் வளரும் முடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

 

சூடான துணி

சூடான துணி

துவட்டிக்கொள்ள பயன்படுத்தும் டவலை எடுத்து அதை சூடான நீரில் மூழ்க வைக்கவும். இந்த டவலை பாதிக்கப்பட்ட இடங்கள் மீது சில நிமிடங்கள் வைத்திருக்கவும். இதன் மூலம் உள் வளரும் முடியை மேற்புறத்திற்கு கொண்டு வரலாம். பின்னர் ஸ்டெர்லைஸ் செய்யப்பட்ட டிவீசரை கொண்டு மேலே வந்த முடியை அகற்றலாம். இதன் மூலம் உள் வளரும் முடி பிரச்சனையை களையலாம்.

 

ஆலோ ஜெல்

ஆலோ ஜெல்

ஊட்டச்சத்து மற்றும் ரசாயனங்கள் நிறைந்த கற்றாழை ( ஆலோ வேரா) குணமாக்கும் தன்மையை விரைவுபடுத்தி, சருமத்தை இதமாக்குகிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், கற்றாழை சாற்றை எடுத்து, அதை பாதிக்கப்பட்ட பகுதியில் பூசிக்கொள்வது தான். அரை மணி நேரம் கற்றாழை சாறு சருமத்தின் மீது இருக்கட்டும். பின்னர், இதமான தண்ணீரால் கழுவிக்கொள்ளவும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்து வந்தால் உள் வளரும் முடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.