மணநீங்கள் முகப்பரு இல்லாத சருமம் வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், அதற்கு ஒரே ஒரு பழக்கத்தை நீங்கள் துறந்தே ஆக வேண்டும்.

Written by Kayal ThanigasalamNov 30, 2023
 மணநீங்கள் முகப்பரு இல்லாத சருமம் வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், அதற்கு ஒரே ஒரு பழக்கத்தை நீங்கள் துறந்தே ஆக வேண்டும்.

உங்களிடம் சில விஷயங்களை கேட்கிறேன். சரும பராமரிப்புக்கு தங்கத்தை போன்ற விதிகள் யாவை? அது சரிதான்? உங்களுடைய அழுக்கான மற்றும் வியர்வையுள்ள கைகளால் உங்கள் முகத்தை எந்த சூழ்நிலையிலும், எந்த காரணத்திற்காகவும் தொடக் கூடாது என்பது தான் சருமப் பராமரிப்பின் மிகவும் முக்கியமான மற்றும் முதன்மையான விதியாகும். குறிப்பாக எண்ணெய் பிசுபிசுப்பு மற்றும் முகப்பரு போன்றவையால் பாதிப்புக்குள்ளான சருமத்திற்கு மாஸ்யரைஸிங் அல்லது உறங்குவதற்கு முன் மேக்கபை அகற்றுவதும் மிகவும் முக்கியம். சூரிய கீழிருக்கும் அனைத்து விதமான முகப்பரு சிகிச்சைகளையும் நீங்கள் முயன்று பார்த்தும், தொல்லைதரும் முகப்பருக்கள் எப்போதும் உங்களை பாதித்துக் கொண்டிருக்கிறது என்றால் நீங்கள் உங்கள் கைகளால் உங்கள் முகத்தின்

மீது தொடுவதை நிறுத்தாமல் இருப்பதே அதற்கு காரணமாகும். உங்கள் முகம் எண்ணெய் பிசுபிசுப்புடனும், முகப்பருவும் இருக்கும் போது, அதை உங்கள் கைகளால் அவற்றை சரிசெய்ய முயற்சி செய்கிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் இந்த பழக்கம்தான் இந்த விஷயத்தை மேலும் மோசமாக்கும் என்பதால், நீங்கள் கட்டாயம் நிறுத்தியே ஆக வேண்டும்.

 

உங்கள் முகத்தை தொடும்போது உங்கள் சருமத்திற்கு ஏற்படும் தீமை என்ன?

அப்படிச் செய்வதை உங்களால் எவ்வாறு தவிர்க்கப் போகிறீர்கள்

நீங்கள் வெளியே செல்லும் போது மற்றும் நகரங்களில் சுற்றி வலம் வரும்போதும், அழுக்கு, வியர்வை மற்றும் பாக்டீரியா போன்றவை உங்கள் கைகளில் அடைக்கலம் ஆகின்றன. பாதிப்புள்ள முகப்பருவை உங்கள் அழுக்கான கைகளால் தொடுவது மிகவும் அபாயமானதாகும். அது மட்டுமல்ல பாக்டீரியா மற்றும் ஒவ்வாமையை உங்கள் சருமத்திற்குள் அனுமதிக்கின்றது. சருமப் பிளவுகள், உங்கள் சருமத் தோற்றம், பிசுபிசுப்புத் தன்மை போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும், உங்கள் முகத்தை தொடும்போது உங்களுக்கு முகப்பருவை கிள்ளி எரியத் தூண்டும். இதுவே நீங்கள் செய்ய நினைக்கும் இறுதியான விஷயமாகும்

 

அப்படிச் செய்வதை உங்களால் எவ்வாறு தவிர்க்கப் போகிறீர்கள்

அப்படிச் செய்வதை உங்களால் எவ்வாறு தவிர்க்கப் போகிறீர்கள்

உங்கள் முகத்தை ஒவ்வொரு முறையும் நீங்கள் தொடும்போது, அது பருக்களுக்கு எந்தளவுக்கு எரிச்சல் மற்றும் சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்த்து, அவற்றை தடுக்க முயற்சிக்கவும். உங்கள் முகத்தில் இருக்கும் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அகற்றுவதைப் பற்றி சிந்தியுங்கள். ஈரத்தை ஒத்தி எடுக்கும் காகிதம் மற்றும் ஃபேஷியல் வைப்ஸ் எப்போதும் கைவசம் வைத்திருக்கவும். உங்கள் முகத்திலுள்ள வியர்வை அல்லது அதிகப்படியான எண்ணெயை வெறும் கையால் துடைப்பதற்கு பதிலாக இவற்றை பயன்படுத்தவும். ஒரு வேளை மேக்கப்பின் அழுக்குத்தடம் மற்றும் எரிச்சல் போன்றவற்றால் உங்களுடைய முகத்தை தொட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், ஒரு சானிடைசரை கைவசம் வைத்துக் கொண்டு, அதனால் உங்கள் கைகளை நன்றாக சுத்தம் செய்தபின் . உங்கள் முகத்தை தொடவும். இது பாக்டீரியாவை கொன்று, மேலும் அதிகரிப்பதை தடுக்கும்.

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
777 views

Shop This Story

Looking for something else