நன்றாகத் தேய்த்துக் குளித்தப் பின்பும் முடியில் பிசுபிசுப்பு இருப்பதை உணரும் போது நம்மில் தெளிவாக இருப்பவர்களும் குழம்பக் கூடும். நீங்கள் தலைக்கு ஷாம்புப் போட்டு குளித்தவுடனே பிசுபிசுப்பை உணர்கிறீர்களா அல்லது தலைக்கு குளித்து இரண்டு மணி நேரம் பிசுபிசுப்பை உணர்கிறீர்களா என்பதுதான் உங்களின் மனஉளைச்சலுக்குக் காரணம்.

உங்களின் உச்சந்தலையின் நிலையைப் பொருத்தே, தலைக்குக் குளித்தப்பின் உங்கள் தலைமுடி தோற்றமும் அதன் செயல்பாடும் எப்படியிருக்கும் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுடைய தலைமுடி பராமரிப்பு பழக்கவழக்கங்களில் சிலவற்றால் ஏற்படக் கூடிய பாதிப்புதான் இதற்கு மிக முக்கிய காரணம். தலைக் குளித்த பிறகும் கூட முடி பிசுபிசுப்பாக இருப்பதற்கு காரணமான சில தவறுகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.

 

01. நீங்கள் கன்டிஷனர்களை அதிகமாக பயன்படுத்துவது

01. நீங்கள் கன்டிஷனர்களை அதிகமாக பயன்படுத்துவது

உங்கள் முடி அமைப்பு மற்றும் வகை என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல, நீங்கள் தலைக்குக் குளித்தப்பின் உங்கள் தலைமுடி பிசுபிசுப்பாக இருப்பதற்குக் காரணம் அதிகமான கன்டிஷனர்களை பயன்படுத்துவதால்தான். பாட்டிலின் மீது பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், உச்சந்தலையைத் தவிர்த்து, நீண்ட கூந்தல் முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும். அதிகமான கன்டிஷனர்களை தடவுக் கொள்ளும்போது, தலைமுடியை நன்றாக அலசிக் குளிப்பது மிகவும் கடினமாகி விடும். தயாரிப்பிலுள்ள எண்ணெய் மற்றும் க்ரீமி பொருட்கள் உங்கள் தலைமுடியில் நன்றாகப் பிடித்துக் கொள்ளும் மற்றுமல்லாது பிசுபிசுப்பாக்கி விடும்.

 

02. சூடான தண்ணீரில் குளிப்பது

02. சூடான தண்ணீரில் குளிப்பது

சூடானத் தண்ணீரில் குளிப்பதில் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றால், முதலில் அந்த உணர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கான புதுவழியை தேடும்படி உங்களுக்கு நாங்கள் பரிந்துரை செய்கிறோம். சூடான தண்ணீரில் குளிப்பதனால் உங்கள் உச்சந்தலையில் அதிக வெப்பத்தை ஏற்படுத்துவதுடன், ஈரப்பதத்தையும் உறிஞ்சி விடுகின்றது. எனவே அந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்ய அதிகமான எண்ணெய்ப் பசையை ஏற்படுத்துங்கள். தலைக்குக் குளித்து இரண்டு மணி நேரம் கழித்தப் பிறகு உங்கள் தலைமுடியிலிருந்து பிசுபிசுப்புப் போக்கி, தலைமுடியை பாதுகாப்பதற்கு மிதமான சுடுதண்ணீர் அல்லது குளிர்ந்த தண்ணீரில் தலைமுடியை அலசக் கொள்ள வேண்டும்.

 

03. உங்கள் உச்சந்தலையில் அழுக்குப் படிகிறது.

03. உங்கள் உச்சந்தலையில் அழுக்குப் படிகிறது.

சிகையலங்காரம், முடியை சீர் செய்தல் அல்லது சுத்தம் செய்யும் பொருட்களினால் உங்கள் உச்சந்தலையில் அழுக்குப் படிகின்றது. இத்தகைய தயாரிப்புகள் அதிகமான எண்ணெயைப் பசையை ஏற்படுத்துவதுடன், கெராடின் போன்ற சக்திவாய்ந்த சேர்மங்கள் உச்சந்தலையில் நன்றாகப் படிந்துவிடுவதோடு, பிசுபிசுப்பையும் ஏற்படுத்தும். அழுக்கை நீக்கக் கூடியது மற்றும் நச்சுத் தன்மையற்றது ஆகிய இருபயனுள்ள ஷேம்பு கன்டெய்னர்களை வாரம் ஒருமுறையோ அல்லது இருவாரத்திற்கு ஒருமுறையோ பயன்படுத்தி, தலைமுடியில் தங்கியிருக்கும் எத்தகைய அழுக்கையும் நீக்கி விடுங்கள்.

பீபி பிக்ஸ்: Tresemme Botanique Detox and Restore Shampoo + Conditioner

 

04. தவறான லீவ்-இன் சிகிச்சை பயன்படுத்துகின்றீர்கள்.

04. தவறான லீவ்-இன் சிகிச்சை பயன்படுத்துகின்றீர்கள்.

சரியான லீவ்-இன் கன்டிஷனர் அல்லது சிகிச்சையைக் கண்டுப்பிடிப்பது என்பது மிகக் கடினமான விஷயமாகும். இத்தகைய தயாரிப்புகள் அனைத்தும் மிகவும் சக்தி வாய்ந்த சூத்திரத்தை கொண்டது. உங்களுடைய முடி வகைக்கு இத்தகைய வலிமை வாய்ந்த சூத்திரத்தைக் கொண்ட தயாரிப்புகளை பயன்படுத்தினால், இது தேவையற்றப் பிரச்னைகளைத் தருவதோடு, பிசுபிசுப்புத் தன்மையையும் உண்டாக்கும். எனவே, க்ரீமி அல்லது எண்ணெய் உள்ளவற்றை பயன்படுத்துவதற்குப் பதிலாக, இலகுவான சூத்திரத்தைக் கொண்டவைகளை பயன்படுத்துங்கள். மேலும், தண்ணீர் அல்லது ஃபோர்ம் உள்ள பொருட்களுக்கு மாறிவிடுங்கள்.

 

05. அடிக்கடி நீங்கள் தலைக்கு குளிக்கின்றீர்கள்.

05. அடிக்கடி நீங்கள் தலைக்கு குளிக்கின்றீர்கள்.

இத்தகைய பிசுபிசுப்புத் தன்மை உருவாவதற்கு நீங்கள் அடிக்கடித் தலைக்கு குளிப்பதைக் கூட சமமாக குறைக் கூற வேண்டும். இப்படி ஒரு சிக்காவது ஒரு மோசமான சுழற்சியாகும். நீங்கள் எந்தளவுக்கு உங்களுடைய தலைக்கு குளிக்கிறீர்களோ, அந்தளவுக்கு பிசுபிசுப்பு தன்மை அதிகரிக்கும். ஏனெனில், இப்போது நன்றாக அலசி வெளியேற்றியவைக்கு மாற்றாக உங்கள் உச்சந்தலை அதிகமான எண்ணெயை உருவாக்கும். இது நாளடைவில் வீக்கத்தையும் உருவாக்கும். உங்கள் உச்சந்தலையில் எண்ணெய் உருவாவதை தடுப்பதற்கு கற்றுக் கொள்ளுங்கள். வாரத்தில் 2-3 முறை தலைக்கு குளிப்பது என்பதில் உறுதியாக இருங்கள். உங்களுக்கு தலைமுடி எண்ணெய்ப் பசையுள்ள வகையைச் சார்ந்த்து என்றால் உலர் ஷாம்புக்களை (Dry shampoo) மாற்றாக பயன்படுத்தவும். மேலும் இரண்டு தடவை தலைக்கு குளிப்பதற்குக் கிடையில் உங்கள் தலைமுடியை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்வது மிக முக்கியமாகும்.

பீபி பிக்ஸ்: TIGI Bed Head Oh Bee Hive Matte Dry Shampoo