உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் மாசுகளை மறைப்பதில் இருந்து உங்கள் மேக்கப்புக்கான மிகச்சரியான பேஸை வழங்குவது வரை, உங்களின் வழக்கமான மேக்கப்பிற்கு அதிகமான பயன்களை தருவதாக பவுண்டேஷன் இருக்கும். இதில் பிரச்சனை என்னவென்றால், அதனை நமக்கு சாதகமாக எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது என்பதுதான். மிகச்சரியான பவுண்டேஷன் அமைத்து உங்கள் சருமத்தின் தோற்றத்தை நீங்கள் எப்படி மாற்ற முடியும் என்பதை நாங்கள் உங்களுக்கு இங்கே கூறுகிறோம்.

இதில் முதன்மையானது, சரியான பவுண்டேஷனை அமைக்க, உங்களின் சரும டோனின் சரியான ஷேட்டை கண்டறிவதுதான். இதனை செய்வதற்காக, உங்களின் முகம், கழுத்து அதே போல் உங்கள் மணிக்கட்டு பின்புறம் லேசாக பவுண்டேஷன் போட்டு, அது காணாமல் போகும் வரையில் முழுமையாக சருமத்தில் கலந்து ஒன்றுசேர்கிறதா என்று சோதித்துப் பார்க்கவும்.

இந்திய சரும டோன்களுக்கு ஆச்சரியமூட்டும் வகையில் வேலை செய்யும் லக்மே அப்சொலியூட் ஒயிட் இன்டென்ஸ் ஸ்கின் கவர் பவுண்டேஷனை நீங்கள் தேர்ந்தெடுக்க நாங்கள் பரிந்துரைக்கிறோம். இது லைட்-வெயிட், தண்ணீர் அடிப்படையிலானது, அதோடு எண்ணெய் தன்மை இல்லாதது என்பதால் உங்களின் முக மேக்கப்புக்கு கச்சிதமான பேஸ் ஆக செயல்படுகிறது. மேலும், விட்டமின் பி3 மற்றும் எஸ்பிஎஃப் 25 நிறைந்தது என்பதால் அது உங்கள் சருமத்தை தீங்கிழைக்கும் யுவி கதிர்களில் இருந்து பாதுகாத்து பொலிவான ஒரு நிறத்தையும் உங்களுக்கு கொடுக்கிறது. இன்னும் என்ன, கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிநிலைகளை பின்பற்றி கச்சிதமான பவுண்டேஷனை உங்கள் வழிமுறையில் அமைத்திட தயங்காதீர்கள். இந்த தோற்றப் பொலிவை எவ்வாறு பெறுவது என பார்ப்போம்:
how to apply foundation 600x400

படிநிலை 1

உங்கள் சருமத்தை முதலில் ஈரப்படுத்தி கொள்ளவும், இதனால் பவுண்டேஷன் இழைந்து பரவும் மற்றும் அப்ளை செய்தப் பிறகு சமச்சீரற்று இருப்பதாக தோன்றாது.


படிநிலை 2

உங்கள் கையில் பவுண்டேஷன் கொஞ்சமாக விட்டுக் கொண்டு அப்ளை செய்ய ஒரு பிரஷ்/ஸ்பாஞ்ச் பயன்படுத்தலாம். உங்கள் விரல்களை கொண்டும் தடவுவதை நீங்கள் தேர்வு செய்யலாம்.


படிநிலை 3

பவுண்டேஷனில் கொஞ்சம் பிரஷ்ஷில் எடுத்து அதனை உங்களின் முகம் மற்றும் கழுத்தில் இதமாக தடவவும். இது சருமத்துடன் கலந்து ஒன்றுசேர்வதை உறுதிப்படுத்தவும், ஏனெனில் நீங்கள் விரும்பும் கவரேஜை உங்களின் பவுண்டேஷன் கொடுப்பதை உறுதி செய்ய இதுவே முக்கியமானது.


படிநிலை 4

அதனை சுமார் 15-20 நிமிடங்களுக்கு அப்படியே இருக்க விடவும் மற்றும் நீங்கள் அதனை கச்சிதமாக்கவும் மற்றும் இதர மேக்கப் போடும் முன்பும் அதனை செட்டில் ஆக விட வேண்டும்.

இது எளிதானது போல் தோன்றினாலும், சரியான பவுண்டேஷனை தேர்ந்தெடுத்து மற்றும் போடும் செயல்முறையே உங்களின் ஒட்டுமொத்த மேக்கப் எப்படி வரும் என்பதை வெளிப்படுத்துவதில் முக்கியமாக இருக்கும். சமச்சீராக இல்லாமல் அப்ளை செய்து விட்டால் அந்த கச்சிதமான மேக்கப் உங்களுக்கு கிடைக்காது, ஆகவே அடிப்படை விஷயங்களில் நேரம் செலவிடவும்.