பாதாம் பாலில் சுவை கூட்ட மற்றும் உங்கள் டெஸர்ட்டில் தூவிக்கொள்வதற்கானது மட்டும் அல்ல: உங்கள் சரும நலன் காக்கும் பொருட்களிலும் அவை இணைந்து கொள்ளும் தன்மை கொண்டவை. உலர் சருமம், எண்ணெய் பசை சருமம் என எந்த வகையான சருமமாக இருந்தாலும் பாதாம் மிகவும் ஏற்றவை. உங்கள் சரும நலனில் பாதமை பயன்படுத்தில் சில வழிகள்:

 

ஊற வைத்த பாதாம்

ஊற வைத்த பாதாம்

ஊற வைத்த பாதாமை சாப்பிடும்படி உங்கள் அம்மா சொன்னால் அதைகேட்டு நடக்கவும். பாதாம் ஊட்டச்சத்து மிக்கவை என்பதோடு அவற்றை ஊற வைக்கும் போது தோளில் உள்ள நச்சுகள் நீக்கப்படுகின்றன. பாதாமில் உள்ள வைட்டமின் ஈ, உங்கள் சருமத்தை வயோதிக தன்மையில் இருந்து காத்து, திசுக்களை உள்ளுக்குள் இருந்து குணமாக்கி மின்ன வைக்கிறது. 

 

பாதாம் பேஸ் பேக்

பாதாம் பேஸ் பேக்

ஊற வைத்த பாதாமை நசுக்கி, 3 ஸ்பூன் முல்டானி மிட்டி மற்றும் சில சொட்டுகள் பன்னீரில் கலந்து கொள்ளவும். சில சொட்டுகள் தண்ணீர் சேர்த்து கலவையாக்கி முகத்தில் பூசிக்கொள்ளவும். பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிக்கொள்ளவும்.

ஊற வைத்த பாதாமில் உள்ள எமோல்லியன்ஸ் உங்கள் சருமத்தை ஈரப்பதம் மிக்கதாக்குகிறது. முல்டானி மிட்டி உங்கள் சருமத்தை சுத்தமாக்கி, பிசுபிசுப்பை போக்குகிறது. பன்னீர், உங்கள் சருமத்தின் பிஎச் சமனை காக்கிறது.

நல்ல பலன் பெற வாரம் ஒரு முறை பயன்படுத்தவும்.

 

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்

வாசனை மிக்க பாதாம் எண்ணெய் ஊட்டச்சத்து மிக்கவை, இவை உங்கள் கூந்தலை வலுவாக்குவதோடு, உங்கள் சருமத்திற்கும் ஏற்றது. உங்கள் சருமத்தை ஈரப்பத்தம் மிக்கதாக்கி, அதன் ஹைபோஅலெர்ஜிக் தன்மை சரும பாதிப்பை குணமாக்குகிறது. பாதாம் எண்ணெயை முகத்தில் தடவிக்கொள்ளலாம் என்றாலும் எண்ணெய் பசை சருமம் எனில் அதை நீர்த்து போகச்செய்து தடவிக்கொள்ளவும். பொலிவான சருமத்தில் பாதாம் எண்ணெய், தேன் மற்றும் எலுமிச்சை பேஸ் பேக் உதவும். தேன் உங்கள் சருமத்தை மென்மையாக்கும். அதன் கிருமிநாசினி தன்மையால் பருக்களை தடுக்கும். எலுமிச்சையின் சிட்ரஸ் சருமத்தை சுத்தமாக்கும்.   .

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேனில் 3 ஸ்பூன் பாதாம் எண்ணெய் கலக்கவும். இதை முகத்தில் பூசிக்கொண்டு 30 நிமிடம் கழித்து குளிரிந்த நீரில் கழுவிக்கொள்ளவும். 

ஆரோக்கியமான சருமத்திற்கு தினமும் பயன்படுத்தவும்.