சருமப் பராமரிப்புக்கான பிரபலமான பொருட்களில் ரெட்டினாலும் ஒன்றாகும். அழகு சம்பந்தமான வலைதளம் அல்லது சரும நிபுணரின் பேட்டியை காணும் போது, அதில் ஏதாவது ஒரு இடத்தில் ரெட்டினோல் பற்றியும், அதன் பலன்களைப் பற்றியும் குறிப்பிடுவதை நாம் கவனிக்க முடியும். இது சருமத்தை மேம்படுத்துவதற்கும், மெல்லிய வரிகள் மற்றும் சுருக்கத்தை வெகுவாக குறைப்பதற்கு மிகவும் உதவுகின்றன. சரும நிறத்தை வளப்படுத்துவதற்கான திறனையும் கொண்டது. இருப்பினும், ரெட்டினோலை உங்கள் சருமத்தின்
மீது பயன்படுத்துவது என்பது சிக்கலானது. ரெட்டினோல் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கி, அதை உங்கள் சருமத்தின் மீது தடவுவது மட்டுமே அதை தெரிந்து கொண்ட வழியாக அமையாது. சருமத்திற்கான ரெட்டினாலின் பலன்களைப் பற்றி நீங்கள் படித்து தெரிந்து கொள்வதையும், அதன் பொருட்கள் எப்படி வேலை செய்கிறது என்பதைப் நீங்கள் புரிந்து கொள்வதையும் உறுதி செய்ய நினைத்தோம். அதற்காக, மும்பையின் அம்ப்ரோசியா ஏஸ்தெடிக்ஸின் காஸ்மெடிக்ஸ் டெர்மடாலஜிஸ்ட் Dr. நிகேதா சோனவனே (@drniketaofficial)ஐ நாங்கள் கலந்தாலோசித்த போது. இதைப் பற்றிய விரிவாக விளக்கினார்.
- 1. ரெட்டினோல் என்றால் என்ன?
- 2. சருமத்திற்கு ரெட்டினாலால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
- 3. ரெட்டினோலை பயன்படுத்த துவங்குவதற்கான சரியான வயது எது?
- 4. சிறந்த பலன்கள் கிடைப்பதற்கு ரெட்டினோலை எப்படி பயன்படுத்த வேண்டும்?
- 5. பக்க விளைவுகள் ஏதாவது ஏற்படுமா?
- 6. சருமத்திற்கான ரெட்டினோலைப் பற்றி பெரும்பாலும் கேட்கப்படும் கேள்விகள்
1. ரெட்டினோல் என்றால் என்ன?

“ரெட்டினோல் என்பது வைட்டமின் Aயின் வழித்தோன்றலாகும். வைட்டமின் Aயின் வழித்தோன்றல்கள் சருமத்தை விரைவாக வளரச் செய்யும். இறந்த செல்கள் சருமத் துவாரங்களை அடைப்பதைத் தடுப்பதோடு, மேலும் பிரச்னைகள் தடுக்கவும் உதவுகின்றது. செல்களை குணப்படுத்தவும், கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கவும் தூண்டுகின்றது. . வைட்டமின் A வழித்தோன்றல்கள் இரண்டு வகைப்படும். அவை ரெட்டினோல் மற்றும் ரெட்டினோய்ட்ஸ் என்பனவாகும். ரெட்டினோல் சருமத்திற்குள் உறிஞ்சப்பட்டப்பின், ‘ரெட்டினாய்க் அமிலம்’, என்ற செயல்வடிவமாக மாற்றப்படுகின்றது. மேலதிக தயாரிப்புகளில் பயன்படுத்துவதற்கு இது மென்மையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கக் கூடியது. மறுபுறத்தில் ரெட்டினோய்ட்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாகையால், இது ஒரு சரும மருத்துவரின் பரிந்துரையின்படியே இவற்றை வாங்க முடியும்,” என்று Dr.சோனவனே கூறுகிறார்.
2. சருமத்திற்கு ரெட்டினாலால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

சருமப் பராமரிப்பு பகுதியில் ரெட்டினோல் ஏன் மிகவும் பிரபலமாக இருப்பதற்கு ஒரு காரணம் என்னவென்றால், இது ஒன்றுக்கு மேற்பட்ட சருமப் பலன்களை தருவதுதால் தான். மேலும், இந்தப் பொருளைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்வதற்காக, சருமத்திற்கான ரெட்டினோலுடைய பலன்களைப் பற்றி Dr.சோனவனேவிடம் கேட்டோம். அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை இங்கே பார்ப்போம்.
அ) இறந்த சருமத்தை அகற்றுதல்:
உடலின் மீது படிந்துள்ள அழுக்குகளை அகற்றுவது அவசியமெனில். சருமத்தின் மீது படிந்துள்ள மூலப்பொருள் உட்பட இறந்த சருமத்தை அகற்றுவதும் மிகவும் அவசியம். இறந்த செல்கள் அகற்றப்பட்ட சருமத்தை மிருதுவாக்கவும், சமமான சரும நிறத்தை ஏற்படுத்தவும் துணை புரிகின்றது.
ஆ) சரும நிறமாற்றம் மற்றும் சமநிலையற்ற சரும நிறத்தைக் குறைக்கின்றது:
ரெட்டினோலை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு வரும்போது, நிறமாற்றப் புள்ளிகள், மெல்லிய வரிகள், சுருக்கங்கள் மற்றும் விரிவடைந்த துவாரங்கள் ஆகியவற்றை குறைக்கிறது. இதன் பயனாக சமநிலையான சரும நிறம் மற்றும் மிருதுவான சருமம் கிடைக்கும்.
இ) சருமத்தை பிரகாசமாகவும், பளபளப்பாகவும் மாற்றுகின்றது:
சருமத்தின் தோற்றத்தை அதிகரிக்கும் ரெட்டினாலின் திறன் ஒப்பிட முடியாதது. இந்த ஒருப் பொருள், உங்களுடைய சருமத்தை இறுக்கமாகவும், பிரகாசமாகவும், மிருதுவாகவும் மற்றும் பளபளப்பாகவும் மாற்றக்கூடியது திறனுடையது. அதனால்தான், சருமப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு சரும நிபுணர்களால் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றது.
ஈ) சருமத்திற்கு சரும முதிர்ச்சியை எதிர்க்கும் திறன்:
ரெட்டினோல் சருமத்தில் ஏற்படும் முதிர்ச்சியை தடுக்கும் தன்மையுடைய பொருளாகும். கொலாஜென் உற்பத்தியை அதிகரிப்பதோடு மெல்லிய வரிகள் மற்றும் சுருக்கங்கள் தோன்றுவதை குறைக்கின்றது. இதனால்தான், முதிர்ச்சி தடுக்கும் பலவித தயாரிப்புகள் இந்தப் பொருளை உட்பொருளாக கொண்டுள்ளது.
உ) முகப்பருக்கள் வராமல் தடுக்கின்றது:
ரெட்டினோல் முகப்பருக்கள் வராமல் தடுக்கக் கூடியதாகும். கமேடொனால் முகப்பருக்களுக்கு மிகச் சிறப்பான சிகிச்சை அளிக்கக் கூடியது. முகப்பரு பாதிப்பு மற்றும் சருமத்தின் மீது ரெட்டினோலை பயன்படுத்தும்போது, வைட்ஹெட்ஸ் மற்றும் ப்ளாக்ஹெட்ஸ் போன்றவற்றை குறைக்கும். இது முகப்பருக்கள் வராமல் குறைப்பது மட்டுமல்லாமல், வடுக்களையும் நீக்குகின்றது.
3. ரெட்டினோலை பயன்படுத்த துவங்குவதற்கான சரியான வயது எது?

சில சருமப் பராமரிப்பு பொருட்கள் மிகவும் மிருதுவானவை. அவற்றை பருவ வயது முதலே பயன்படுத்தலாம். இருப்பினும், வேறு சில பொருட்களை நீங்கள் 20களின் பிற்பகுதியில் பயன்படுத்த ஆரம்பிக்க இயலாது. உங்கள் சருமத்தை மிகவும் சிறப்பாக பராமரிக்கும் பொருட்டு, நீங்கள் சிறிய விகிதத்தில், சரும மருத்துவரின் உதவியுடன் சீக்கிரமாகவே, ரெட்டினோலைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம். “பலவித சருமப் பிரச்னைகளுக்கு தீர்வு காண ரெட்டினோலை பயன்படுத்தலாம். முகப்பருக்களை குணப்படுத்துவதற்கு ரெட்டினோலை பயன்படுத்த விரும்பினால், அதை எந்த வயதிலும் பயன்படுத்தலாம். ப்ளாக்ஹெட்ஸ் மற்றும் வைட்ஹெட்ஸ் போன்ற பருவ வயதில் வரும் சருமப் பிரச்னைகளுக்கு, ரெட்டினோல் மிகவும் நன்றாக வேலை செய்யும். சரும முதிர்ச்சிக்கு எதிராக சருமப் பராமரிப்பின் ஒரு பகுதியாக ரெட்டினோலை, 27 வயதிற்குப் பிறகு பயன்படுத்துவதே மிகச் சரியான வயதாகும். உங்களுடைய இயற்கையான சருமப் புதுப்பித்தலை நிதானப்படுத்தும். மேலும் உங்களுடையச் சருமத்தை சோர்வடையச் செய்யும். துளைகள் வெளிப்படுதல் மற்றும் ஆரம்ப நிறம் மாறுதல் போன்றவற்றை நீங்கள் கவனிக்கத் தொடங்கும்போது இது தான்,” என்று Dr.சோனவனே கூறுகிறார்.
4. சிறந்த பலன்கள் கிடைப்பதற்கு ரெட்டினோலை எப்படி பயன்படுத்த வேண்டும்?

அனைத்து சருமப் பிரச்னைகளை குணப்படுத்துவதற்கு இது ஒரு மிகச் சிறப்பான மருந்து மற்றும் அதை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற தகவல்களை தற்போது அறிந்து கொண்டிருப்பீர்கள். இப்போது சிறந்த பலன்களை பெறுவதற்கு ரெட்டினோலை எப்படி பயன்படுத்துவோம் என்று பார்ப்போம். வழக்கமாக சருமப் பராமரிப்புகளுடன் ரெட்டினோலை சேர்த்துக் கொள்வதற்கான சிறந்த வழி என்ன என்பதையும், ஏதாவது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவையா என்பதைப் பற்றியும் Dr.சோனவனே கேட்டோம். அவர் கூறியதாவது:
5. பக்க விளைவுகள் ஏதாவது ஏற்படுமா?

சரியான விகிதத்திலும், நிதானமாகவும் ரெட்டினோல் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதால், சருமத்தில் ரெட்டினோலை பயன்படுத்தும்போது ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படுமா என்பது குறித்தும் நிபுணரிடம் கேட்டோம். அவர்கள் கூறியதாவது. ரெட்டினோலைப் போல அதிக செயல்திறன் கொண்ட பொருட்களை பயன்படுத்தும்போது உங்கள் சருமம் மிகவும் மிருதுவாகி விடும். எனவே, உங்களுடைய சரும மருத்துவர் பரிந்துரைப்படி பின்பற்றுங்கள். ரெட்டினோலை பயன்படுத்துவதினால், தேவையான ஹைட்ரேஷன் இல்லாததால் வறட்சி. ஃப்ளேக் மற்றும் சிவத்தல் போன்றவை உங்கள் சருமத்தை பாதிக்கும். எனவே, மாஸ்யரைஸர் மற்றும் தேவையான அளவு குடிநீர் குடிப்பதன் மூலம் உள்ளும், புறமும் ஹைட்ரேஷனை அதிகரிக்க கவனம் செலுத்த வேண்டும். ரெட்டினோல் புறஊதாக் கதிர்களை வெளிப்படுத்தி உங்கள் சருமத்தின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த சமயத்தில் சன்ஸ்க்ரீனை பயன்படுத்தவில்லையெனில், அதன் விளைவாக வெங்குரு மற்றும நிறமிகளால் பாதிப்பு ஏற்படும். கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு ரெட்டினோல் பாதுகாப்பாற்றது. நீங்கள் கர்ப்பிணி அல்லது தாய்ப்பால் கொடுப்பவராய் இருந்தால், உங்கள் தோல் மருத்துவரிடம் தெரிவித்து விடுங்கள்.
6. சருமத்திற்கான ரெட்டினோலைப் பற்றி பெரும்பாலும் கேட்கப்படும் கேள்விகள்

உங்கள் முகத்திற்கு ரெட்டினோலை எத்தனை முறை பயன்படுத்துவீர்கள்?
பதில் : முதன்முதலாக பயன்படுத்து ஆரம்பிக்கும்போது, ரெட்டினோல் வறட்சித்தன்மை, ஃப்ளேக்கி ஸ்கின் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்தும்படி நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். உங்களுடைய சருமம் மிகவும் மிருதுவாக இருக்கும்பட்சத்தில், முதலில் வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை முயற்சிப்பதன் மூலம் ஆரம்பிக்கவும்.
ரெட்டினோலை பயன்படுத்தியபின் மாஸ்யரைஸரை உபயோகப்படுத்துவீர்களா?
பதில் : ஆமாம், வறட்சித் தன்மையை தடுப்பதற்கு மாஸ்யரைஸருடன் ரெட்டினோலை ஒரு இணைப்புப் பொருளாகப் பயன்படுத்த வேண்டும். இது சருமத்தில் மேலும் பிரச்னைகள் வராமல் தடுக்கும்.
ரெட்டினோலுடன் எதை கலக்கக் கூடாது?
ரெட்டினோல் ஒரு சருமப் பராமரிப்புப் பொருளாகும். ஆகவே, பெனோஸைல் பெராக்ஸைடு, வைட்டமின் C, ஆல்ஃபா ஹைட்ராக்ஸி அமிலம் அல்லது பேட்டா ஹைட்ராக்ஸி அமிலம் (AHA/BHA அமிலங்கள்) போன்ற செயல்திறனுள்ள மற்ற பொருட்களை இதனுடன் சேர்க்கக் கூடாது.
Written by Kayal Thanigasalam on 16th Apr 2021