கூந்தல் பராமரிப்பிற்கான ஐந்து டிப்ஸ்: வீட்டிலேயே, நீங்களே செய்யலாம்

Written by Kayal ThanigasalamMay 17, 2022
கூந்தல் பராமரிப்பிற்கான ஐந்து டிப்ஸ்: வீட்டிலேயே, நீங்களே செய்யலாம்

வைரஸ் பரவலைத் தடுக்க பெரும்பாலான மாநிலங்கள் லாக் டவுன் அறிவித்திருக்கின்றன. புரஃபஷனல்கள் மூலம் அழகுக் கலை சேவைகள் பெற இன்னும் கொஞ்ச நாளாகும். வேறு வழியே இல்லை. உங்கள் கூந்தல் அழகை நீங்களே பராமரித்துக்கொள்ள வேண்டியதுதான். ரொம்ப பெரிய காரியம் போல் தெரியலாம். ஆனால் இது மிகவும் சிம்பிள். ஒரு சிம்பிளான நடைமுறையை பின்பற்றினால் போதுமானது. கூந்தலை சேதப்படுத்தாமல்

இருப்பது எப்படி என்பதை மனதில் நிறுத்திக்கொண்டு சில அடிப்படையான கூந்தல் அழகு முறைகளை பின்பற்றினாலே போதுமானது. இதோ டிப்ஸ்.

 

01. தொடர்ச்சியாக ஹேர் வாஷ்

05. ஹீட் ப்ரொடக்ஷன் ஸ்பிரே

தூசியும் பொல்யூஷனும் இல்லை என்பதால் தலைக்கு ஏன் குளிக்க வேண்டும் என நீங்கள் நினைக்கலாம். தினமும் ஹேர் வாஷ் செய்தால் இயற்கையான ஆயில் இல்லாமல் போகும். ஆனால் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை ஹேர் வாஷ் செய்யாவிட்டால் தலையில் இறந்த செல்கள் தேங்கிவிடும். இது முடியின் வேர்களை அடைத்துக்கொள்ளும். முடி வளர்வது பாதிக்கும். சல்ஃபேட் இல்லாத பொருட்கள் மூலம் மென்மையாக கூந்தலை வாஷ் செய்தால் இதைத் தவிர்க்கலாம்.

பி.பி பிக்ஸ்: Tresemme Pro Protect Sulphate Free Shampoo and Conditioner

 

02. கூந்தலுக்கு ஆயில் மசாஜ்

05. ஹீட் ப்ரொடக்ஷன் ஸ்பிரே

தலைக்கு மசாஜ் செய்வதில் பல வழிமுறைகள் உள்ளன. சூடான ஆயில் வைத்து மசாஜ் செய்வது பாப்புலரான வழிமுறை. ஆயில் இல்லாமலும் மசாஜ் செய்யலாம். இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். கூந்தலை காற்றில் காய வைக்கும் பொழுது, முன்புறம் குனிந்தபடி மென்மையாக ஆயில் மசாஜ் செய்வது ஒரு வழிமுறை. கூந்தலின் வேர்கள் பலம் பெறும்.

பி.பி பிக்ஸ்: Lever Ayush Ayurvedic Bhringaraj Hair Oil

 

03. கூந்தலுக்கு டீப் கண்டிஷன்

05. ஹீட் ப்ரொடக்ஷன் ஸ்பிரே

கூந்தலின் ஆரோக்கியத்திற்கு ஹேர் மேஸ்க் அற்புத பலன் தரும். டேமேஜ் ரிப்பேர் செய்யும் ஹேர் மேஸ்க் தேர்ந்தெடுக்கவும். வறண்ட, பாதிப்புக்கு ஆளான கூந்தலின் பகுதியில் பயன்படுத்தவும். இது கூந்தலுக்கு ஆரோக்கியத்தையும் பொலிவையும் தரும். கூந்தலின் நடுப் பகுதியிலிருந்து நுனிப் பகுதி வரை இதை அப்ளை செய்ய வேண்டும். 15-20 நிமிடம் கழித்து வாஷ் செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை செய்ய வேண்டும்.

பி.பி பிக்ஸ்: Dove Intense Damage Repair Hair Mask

 

04. கூந்தலை கெடுக்கும் வழக்கங்களைத் தவிர்த்தல்

05. ஹீட் ப்ரொடக்ஷன் ஸ்பிரே

கூந்தலை இருக்கமாகக் கட்டுவது, முடி சீவாமல் இருப்பது, முரட்டுத்தனமாக சீவுவது. இவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும். இதில் என்ன என்று நினைக்காதீர்கள். கூந்தலுக்கு இவைதான் எதிரி. வீட்டிலேயே இருக்க வேண்டிய இந்தக் காலக் கட்டத்தில் இந்த தவறான வழக்கங்களை தவிர்த்திடுங்கள். ஒரு நாளில் இரு முறை மட்டுமே கூந்தலை வார வேண்டும். இரவு படுக்கும் முன்பு கூந்தலை உலர வைக்க வேண்டும்.

 

05. ஹீட் ப்ரொடக்ஷன் ஸ்பிரே

05. ஹீட் ப்ரொடக்ஷன் ஸ்பிரே

லாக் டவுன் என்றாலே பல விஷயங்களை நாம் தவிர்க்கத்தான் வேண்டியிருக்கும். ஆனால் ஹீட் ப்ரொடக்ஷன் ஸ்பிரே பயன்படுத்தத் தவறாதீர்கள். ஹீட் ஸ்டைலிங் பயன்படுத்துவது கூந்தலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுத்தும். ஹீட் ப்ரொடக்ஷன் ஸ்பிரே பயன்படுத்துவது இந்த பாதிப்பைக் குறைக்கும். கூந்தலும் ஹெல்தியாக பளபளப்பாக இருக்கும்.

பி.பி. பிக்ஸ்: Tresemme Keratin Smooth Heat Protection Spray

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
870 views

Shop This Story

Looking for something else