நீங்கள் வேலைக்குச் செல்லும் போது உங்கள் தோற்றத்தை சரி செய்ய உதவும் 5 அழகு பொருட்கள்

Written by Kayal ThanigasalamNov 30, 2023
 நீங்கள் வேலைக்குச் செல்லும் போது உங்கள் தோற்றத்தை சரி செய்ய உதவும் 5 அழகு பொருட்கள்

அலுவலகத்தில் சுற்றி வளைந்து வேலையை முடிப்பது முதல் சக ஊழியர்களுடன் சென்று புதிய இடங்களை ஆராய்வது வரை, நமக்கென்று எதையும் செய்து கொள்ள முடியாத அளவுக்கு நேரமில்லாமல், நாம் வேகமான வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் உங்களின் கனவு வேலையான நேர்காணல் நிகச்சிக்காக வெளியே சென்றாலும் அல்லது முதல் முறையாக உங்கள் காதலனை நீங்கள் சந்திக்கப் போகிற தேதியன்றோ, நீங்கள் உங்களை அழகுபடுத்திக் கொண்டுச் செல்ல வேண்டும். எனவே, தேனீக்கள் போல நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக உங்கள் அலுவலக வேலையில் இயங்கிக் கொண்டிருக்கும்போது உங்கள் தோற்றத்தை சரிசெய்து கொள்வதற்கு, உங்கள் கைவசம் இருக்க வேண்டிய ஐந்து அழகு சாதனங்களை நாங்கள் தொகுத்துள்ளோம். அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

 

01. லக்மீ 9 டு 5 நேச்சுரல் ஆலோ க்ளீன்ஸிங் வைப்ஸ்.

05. ட்ரீசெம் கெராட்டின் ஸ்மூத் ஹேர் சீரம்

ஒவ்வொரு பெண்ணின் கைப்பையிலும் முகம் துடைக்கும் துணி கட்டாயம் இருக்க வேண்டும். எனவே, பயணம் மேற்கொள்ளும் போது உங்கள் சருமத்தை துடைப்பதற்கும் அல்லது மேக்கப் செய்து கொள்ளும் போது ஏற்படும் தவறுகளை சரி செய்து கொள்வதற்கும் Lakmé 9to5 Natural Aloe Cleansing Wipes போன்ற ஆல்கஹால் இல்லாத சுத்தப்படுத்தும் துடைப்பான்களை எப்போதும் கைவசம் வைத்திருங்கள். உங்கள் சருமத்தை சுத்தப்படுத்தவும், ஹைட்ரேட் செய்யவும் மற்றும் அதன் மீதுள்ள உள்ள அழுக்கு மற்றும் மாசுக்களை அகற்றவதற்கு உதவி புரிவதற்கான தூய கற்றாழை சாறுகள், ஜோஜோபா எண்ணெய், வைட்டமின் E மற்றும் கிளிசரின் ஆகியவற்றைக் கொண்டு இந்தத் துடைப்பான்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழலை பாதிக்காத 100 சதவிகிதம் மக்கும் தன்மையுள்ள துணி கொண்டு இந்த துடைப்பான்கள் தயாரிக்கப்படுகின்றன.

 

02. வாஸ்லைன் ஆன்ட்டி-பாக்டீரியல் ஹேண்ட் க்ரீம்.

05. ட்ரீசெம் கெராட்டின் ஸ்மூத் ஹேர் சீரம்

நீங்கள் வெளியே சென்று சில விஷயங்களை செய்வது உங்கள் உலர்ந்த மற்றும் சீரற்ற கைகளுக்கு ஒத்துக்கொள்ளாது, எனவே உங்கள் மீது பூசிக் கொள்வதற்காக எப்பொழுதுமே மாஸ்யரைஸிங் க்ரீம் அல்லது ஹேண்ட் க்ரீம் போன்ற Vaseline Anti-Bacterial Hand Cream உங்களிடம் கைவசம் வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பாக்டீரியாவை எதிர்க்கும் மூலப்பொருட்கள், மாய்ஸ்சரைசிங் கிளிசரின் மற்றும் வைட்டமின் Eயின் நற்பண்புகளடங்கிய இந்த கிரீம் உங்கள் கைகளை மாஸ்யரைஸ் செய்து, கிருமிகளிலிருந்து பாதுகாக்கின்றது. தற்போது மிகவும் அவசியமான ஒன்றான இந்தக் க்ரீமை உங்கள் கைப்பையில் வைத்துக் கொண்டு, உங்கள் கைகள் வறண்டு போகும் போதெல்லாம் தடவவும்.

 

03. லக்மீ ஸன் எக்ஸ்பெர்ட் அல்ட்ரா மேட் எஸ்பிஎஃப் 40 பிஏ+++ காம்பாக்ட்

05. ட்ரீசெம் கெராட்டின் ஸ்மூத் ஹேர் சீரம்

நீங்கள் வெளியே செல்லும் போது சூரியக் கதிர்களால் ஏற்படும் சேதத்தைக் குறித்த பயம் ஏற்படுவது மிகவும் உண்மையானது ஆகும். எனவே அனைத்துவிதமான சருமத்திற்கும் ஒத்துப் போகின்ற அதிக SPF உள்ள Lakmé Sun Expert Ultra Matte SPF 40 PA+++ Compact. போன்ற மேக்கப் தயாரிப்புகளை உபயோகப்படுத்தத் துவங்கவும். இது அடிப்படையிலே உங்களுடைய சருமத்திற்கேற்ற சன்ஸ்கிரீனாகும். SPF 40 PA +++ தாதுக்களுடன் உள்ள இந்த ஸன்ஸ்க்ரீன் உங்கள் சருமத்தின் மீது எந்தவித சிரமமுமில்லாமல் பரவி, உங்கள் சருமத்திற்கு அல்ட்ரா-மேட், ஒட்டும் தன்மையற்ற மற்றும் பிசுபிசுப்பற்ற தன்மையைக் கொடுக்கும். வேறு சில நன்மைகளும் உண்டு. அவை இந்த ஸன்ஸ்க்ரீன் அதிக பாதுகாப்பு அடுக்குகளை வழங்கி, UVA மற்றும் UVB ஆகிய சூரிய கதிர்கள் தீங்கு விளைவிக்காத வண்ணம் தடுக்கிறது. வெயிலினால் வெங்குரு, சருமம் கருத்துப் போதல், கரும்புள்ளிகள் மற்றும் முன்கூட்டிய முதுமை போன்ற சருமப் பிரச்சினைகளைத் தடுக்கிறது.

 

04. ரெக்ஸோனா ஆலோ வீரா அன்டர்ஆர்ம் ஒடோர் ப்ரொடக்ஷன் ரோல் ஆன்

05. ட்ரீசெம் கெராட்டின் ஸ்மூத் ஹேர் சீரம்

நீங்கள் வெளியில் செல்லும்போது வியர்வை வருவது தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது. அது விரும்பத்தகாத உடல் நாற்றமும் அதன் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பது அதன் அர்த்தமல்ல. எப்போதுமே நல்ல வாசனையுடனும், புத்துணர்ச்சியுடனும் அன்றைய நாள் முழுதும் இருப்பதற்கு Rexona Aloe Vera Underarm Odour Protection Roll On போன்ற ரோல்-ஆன்ஸை உங்களுடன் எப்போதும் வைத்திருங்கள். இந்த தோலியல் ரீதியாக பரிசோதனை செய்யப்பட்ட ரோல்-ஆனின் உட்பொருளாக உள்ள கற்றாழை, 48 மணி நேரம் வரை துர்நாற்றத்தை அடிக்காமல் தடுக்கிறது. மேலும், உங்கள் அக்குளுக்கு குளிர்ச்சியையும் அளிக்கிறது. மேலும், அதன் ஆல்கஹாலே கலக்காத இந்த ரோல்-ஆன் உங்கள் மென்மையான அக்குள் சருமம் எரிச்சலடையாமல் வைத்திருக்கிறது.

 

05. ட்ரீசெம் கெராட்டின் ஸ்மூத் ஹேர் சீரம்

05. ட்ரீசெம் கெராட்டின் ஸ்மூத் ஹேர் சீரம்

நீங்கள் வெளியில் செல்லும் போது போது உங்கள் தலைமுடி மென்மையாகவும், பளபளப்பாகவும், கச்சிதமாகவும் இருக்க வேண்டுமெனில், அதற்கு ஹேர் சீரம் முக்கிய காரணியாகும். நாள் முழுதும் உங்கள் தலைமுடி எந்த சிக்குமில்லாமலும், சுருட்டையாகாமலும் இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் TRESemmé Keratin Smooth Hair Serum ஐ முயற்சி செய்து பாருங்கள். காமெலியா எண்ணெயுடன் சேர்த்து தயாரிக்கப்பட்ட இந்த சீரம், உங்கள் தலைமுடிக்கு பளபளப்பை அதிகரிக்கிறது மற்றும் கூந்தலுக்கு புத்துணர்வை தருகின்ற அதே நேரத்தில், அவை மென்மையாகவும் பட்டுப் போலவும் இருக்கும். உச்சந்தலையைத் தவிர்த்து, ஈரமான அல்லது உலர்ந்த கூந்தலில் தடவிக் கொண்டு நீங்கள் வெளியில் செல்வது நல்லது.

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
705 views

Shop This Story

Looking for something else