உற்சாகம்! இந்த பண்டிகைக் காலத்தை ஓம்ப்ரே லிப்ஸ் டிரெண்ட் எப்படி அசத்தப் போகிறது

Written by Kayal ThanigasalamNov 30, 2023
உற்சாகம்! இந்த பண்டிகைக் காலத்தை ஓம்ப்ரே லிப்ஸ் டிரெண்ட் எப்படி அசத்தப் போகிறது

பண்டிகை காலம் வந்துவிட்டது. அப்படியென்றால் என்னவென்று உங்களுக்கு நன்றாகத் தெரியும் தானே? யூடியூப் மேக்கப் பயிற்சி வகுப்புகளை பல மணிநேரம் செலவழித்துப் பார்த்தவற்றை சோதித்துப் பார்த்து அலங்காரம் செய்து கொள்ள வேண்டிய நேரம் இது. எங்கள் சிகை அலங்காரங்கள் மற்றும் கண் அலங்காரம் மட்டுமே நாங்கள் எப்போதும் பரிசோதிக்கத் தயாராக இருப்போம், ​​​​உதடுகளை லிப்ஸ்டிக்கினால் ஒரு தேய் தேய்த்துக் கொள்வதோடு விட்டு விடுவோம். இனிமேல் அப்படி இல்லை. ஓம்ப்ரே லிப்ஸ்ஸைக் கொண்டு ஒரு கவர்ச்சியான் டிரெண்டுடன் இந்த விழா காலத்தில் உங்கள் உதடுகளின் விளையாட்டை மேம்படுத்த வேண்டிய நேரம் இது - ஓம்ப்ரே லிப்ஸ் டிரெண்ட்டைப் பற்றியும், இந்த பண்டிகைக் காலத்தில் நீங்கள் அதை எப்படி அசத்தலாம் என்பதைப் பற்றியும் படித்துத் தெரிந்து கொள்ளவும். படிக்கவும்.

 

ஓம்ப்ரே லிப்ஸ் என்றால் என்ன

ஓம்ப்ரே லிப்ஸ் டிரெண்ட்டை மீண்டும் உருவாக்குவது எப்படி

பட உதவி: @lydia_lillianne

ஓம்ப்ரே என்ற வார்த்தைக்கு பிரெஞ்சு மொழியில் கருத்த/வெளிர் நிறத்தின் நிழல் என்று பொருளாகும். உதடுகளில் இரண்டு வெவ்வேறு வண்ணங்களை அணிவதைப் பற்றியது தான் ஓம்ப்ரே லிப்ஸ் டிரெண்ட் என்பதாகும். இது சாதாரணமாக உதடுகளின் மையத்தில் ஒரு வெளிர்நிறத்தின் நிழலையும், மூலையைச் சுற்றி ஒரு கருத்த நிறத்தையும் கொண்டிருக்கும் தன்மையுடையது. இது உங்கள் உதடுகளுக்கு பரிமாணத்தைக் கொடுப்பது மட்டும் நின்றுவிடாமல், அவை முழுமையடையவும் செய்கிறது. என்ன அற்புதம்!

 

ஓம்ப்ரே லிப்ஸ் டிரெண்ட்டை மீண்டும் உருவாக்குவது எப்படி

ஓம்ப்ரே லிப்ஸ் டிரெண்ட்டை மீண்டும் உருவாக்குவது எப்படி


 

வழிமுறை  #1 : தொடங்குவதற்கு முன் உங்கள் லிப்ஸ்டிக் ஷேட்களைத் தேர்ந்தெடுக்கவும். உங்களுக்கு நல்ல கவர்ச்சியைப் பெற வேண்டுமெனில் , ஒரே நிறத்தின் வகையிலிருந்து வெளிர் மற்றும் கருத்த ஷேடைத் தேர்வுசெய்ய நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

வழிமுறை #2 : இப்போது, ​​தொடக்கத்தில், சில Lakmé Absolute White Intense Liquid Concealer SPF 25 25ஐ உங்கள் உதடுகளில் தடவி, ஈரமான அழகியல் ஸ்பான்ச்சினால் நன்றாகக் கலந்து விட வேண்டும்.. கன்சீலர் உதடுகளில் ஏதேனும் நிறமாற்றம் இருந்தால் அதை மறைத்து விடும் அது மட்டுமல்லாமல் நிறங்களை நன்றாக உயர்த்திக் காட்டும்

வழிமுறை #3 : கன்சீலர் நன்றாக பொருந்தியவுடன், உங்கள் உதடுகளின் வெளிப்புற விளிம்புகளை Lakmé Absolute 3D Lip Definer - Crimson ஆல் கோடுகள் வரைய வேண்டிய நேரம் இது. உங்கள் லிப் லைனரும், வெளிப்புற விளிம்புகளில் உள்ள கருத்த நிற லிப்ஸ்டிக் நிறத்தின் ஷேடும் ஒரே நிறத்தின் வகையைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வது கொள்வது மிக முக்கியம். இது உங்கள் உதடுகளின் வெளிப்படுத்துவதோடு, அவற்றின் முழு அழகையும் காட்ட உதவும்.

வழிமுறை #4 : உங்கள் உதடுகளின் எல்லா மூலைகளில் கருத்த லிப்ஸ்டிக்கை தடவ வேண்டிய நேரம் இது. நாங்கள் Lakmé Absolute Matte Melt Liquid Lip Color- Coral Reef. ஐ பயன்படுத்தப் போகிறோம். ரோஸ்ஷிப் எண்ணெயால் செறிவூட்டப்பட்ட இந்த லிப்ஸ்டிக், உங்கள் உதடுகளை உலரவிடாமல் உங்கள் உதடுகளுக்கு கண்கவர் நிறத்தை அளிக்கிறது.

வழிமுறை #5 : உங்கள் உதடுகளை ஒன்றாக அழுத்துங்கள். அப்படி அழுத்துவதினால், உங்கள் உதடுகளின் விளிம்பில் உள்ள லிப் லைனர் மற்றும் லிப்ஸ்டிக் இரண்டும் ஒன்றாக கலக்கும்.

வழிமுறை #6 :  இப்போது, ​​உங்கள் உதடுகளின் மையப் பகுதியை நிரப்பவும் மற்றும் அந்த ஓம்ப்ரே தாக்கத்தை மீண்டும் உருவாக்கவும், உங்கள் உதடுகளின் மையப் பகுதியில் வெளிர் நிற லிப்ஸ்டிக்கை தடவவும். இதற்கு Lakmé Absolute Matte Melt Liquid Lip Color - Peach Rose ஐப் பயன்படுத்தலாம் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

வழிமுறை #7 : இறுதியாக, அந்த ஓம்ப்ரே தாக்கத்தைப் பெறுவதற்கு ஒரு லிப் பிரஷை எடுத்து, இரண்டு ஷேட்களையும் ஒன்றிணைத்து ஒரு தடையற்ற லுக்கைப் பெறலாம். உங்கள் உதடுகளை ஒன்றாக அழுத்தி சேர்க்கவும்.  இப்போது நீங்கள் உங்கள் அழகால் மற்றவர்களை கவர்வதற்கு தயாராக உள்ளீர்கள்

முக்கிய பட உதவி : @makeupbyshagun

 

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
474 views

Shop This Story

Looking for something else