நேரமின்மை, குளிர்மிக்க வானிலை என எல்லாமும் சேர்ந்து, தலைக்கு குளிப்பதை நீங்கள் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கலாம். கூந்தல் பிசுபிசுப்பாகவும், நாற்றம் அடிக்காமலும் இருக்கும் வகையில், தலைக்கு குளிப்பதற்கு இடையே நீண்ட இடைவெளி விட நீங்கள் விரும்பலாம். அதற்கான வழிகளையும் தேடிக்கொண்டிருக்கலாம். இதோ உங்களுக்கு உதவுவதற்காக பலவிதமான வழிகளை பரிந்துரைக்கிறோம்.

உங்கள் கூந்தலை தினமும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும் இந்த எளிய வழிகளை பின்பற்றி பாருங்கள்.

·    எண்ணெய் பசை

·    மணக்கும் சீப்பு

·    லீவ் இன் கண்டிஷனர்ஸ், சீரம்கள்

·    உலர் ஷாம்பு

·    கண்டிஷனர்

 

எண்ணெய் பசை

எண்ணெய் பசை

உங்கள் பவுண்டேஷனுக்கு பிரைமர் தேவைப்படுவது போல, உங்கள் வாசனை திரவியத்திற்கும் மாய்ஸ்சரைஸர் அல்லது எண்ணெய் அடிப்படை தேவை. உங்கள் மாய்ஸ்சரைசரில் கொஞ்சம் லாவண்டர் அல்லது ரோஸ் ஆயில் கலந்து கழுத்து பின்பக்கம் மற்றும் காதுகள் பின் பகுதியில் தடவிக்கொள்ளவும். இதன் மீது வாசனை திரவியத்தை ஸ்பிரே செய்யவும். இது வாசனை திரவிய மணம் நீடிக்கச்செய்வதோடு, வாசனை எண்ணெயும் சேர்ந்து மணம் வீசும். கூந்தலுக்கு அருகே இந்த பகுதிகள் அமைந்திருப்பதால், தலை முடி உரசும் போது இந்த மணம் பரவி, புத்துணர்ச்சி அளிக்கும். 

 

சீப்பில் வாசனை

சீப்பில் வாசனை

நேரமாகிவிட்டதால், தலைக்கு குளித்து கூந்தலை அலச நேரம் இல்லையா? வழக்கம் போல உங்கள் கூந்தலை வாரிக்கொள்ளவும். சிடுக்கை எல்லாம் அகற்றிய பின், சீப்பில் கொஞ்சம் வாசனை திரவியம் தெளித்து அதை கொண்டு தலை முடியை வாரவும். இந்த வழியை எங்கு வேண்டுமானாலும் எளிதான பின் பற்றலாம்.

 

லீவ் இன் கண்டிஷனர்ஸ், சீரம்கள்

லீவ் இன் கண்டிஷனர்ஸ், சீரம்கள்

லீன் இன் கண்டிஷனர் அல்லது செரம்கள் பயன்படுத்தி, கூந்தலை நறுமணம் வீசச்செய்யலாம். இது கூந்தலுக்கு நறுமணம் அளிப்பதோடு, அதை நாள் முழுவதும் ஊட்டச்சத்து பெற வைக்கிறது..

 

உலர் ஷாம்பு

உலர் ஷாம்பு

இன்னொரு சோம்பலான தினமா? உலர் ஷாம்புவை பயன்படுத்தவும். தலைமுடி மயிர்கால்களில் தடவி கைவிரல்களால் மசாஜ் செய்யவும். கூந்தலை கொண்டையாக அல்லது குதிரை வாலாக அமைத்துக்கொண்டால், உச்சந்தலையில் உள்ள பசையை இது சீராக்கும்.

 

கண்டிஷனர்

கண்டிஷனர்

ஷாம்பு போடாத நாட்களில் கூட கண்டிஷனர் பயன்படுத்தவும். தலைக்கு குளிக்க நேரம் இல்லை எனில், கூந்தல் முனையில் சிறிதளவு கண்டிஷனர் பயனபடுத்தி அலசவும். கண்டிஷனர் கூந்தலை புத்துணர்ச்சி பெற வைக்கிறது. கூந்தலை சிடுக்கு இல்லாமல் சீராகவும் வைத்திருக்க உதவுகிறது.